Published : 11 Mar 2021 02:37 PM
Last Updated : 11 Mar 2021 02:37 PM

108 - உதகமண்டலம்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
போஜராஜன் அதிமுக
ஆர்.கணேஷ் (காங்கிரஸ்) திமுக
தேனாடு டி.லட்சுமணன் அமமுக
சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம்
ஆ.ஜெயக்குமார் நாம் தமிழர் கட்சி

சுற்றுலாப் பயணிகளை கவரும், இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள முக்கியத் தொகுதிகளில் முதன்மையானது ஊட்டி என சுருக்கமாக அழைக்கப்படும் உதகமண்டலம்(108).

சுற்றுலாவே இத்தொகுதியின் முக்கிய அடையாளமாக உள்ளது. ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மாவட்டத்துக்கு வந்து செல்கின்றனர். சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களில் உதகமண்டலம் முக்கியமானதாகும். உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தென்னிந்தியாவின் இரண்டாம் உயரமான தொட்டபெட்டா சிகரம், ரோஜா பூங்கா மற்றும் எக்ஸ் ரே மற்றும் பிலிம் உற்பத்தி தொழிற்சாலையான ஹெச்.பி.எப் ஆலை ஆகியவை இத்தொகுதியின் குறிப்பிடத் தகுந்த அடையாளங்கள் ஆகும். உதகமண்டலத்தில் உதகை மற்றும் குந்தா ஆகிய 2 தாலுக்காளை உள்ளடக்கியுள்ள இப்பகுதியின் பெரும்பாலான மக்கள் காய்கறி மற்றும் தேயிலை விவசாயத்தையும், சுற்றுலாவையும் நம்பியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே வசிக்கும், படுகரின மக்கள் கணிசமானோர் வசிக்கின்றனர்.

கோரிக்கைகள்

அடுத்ததாக இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்கள் வசிக்கின்றனர். சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்த சுற்றுலா தலத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இங்கு முழுமையாக இல்லை.

பல ஆண்டுகளாக கேபிள் கார், ஹெலிகாப்டர் சேவை என சுற்றுலாவை மேம்படுத்த திட்ட கொண்டு வரப்படும் என அரசால் அறிவிப்பு மட்டுமே செய்யப்படுகிறது. இது வரை சுற்றுலா மேம்பாட்டுக்கான புதிய திட்டங்கள் இல்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பார்த்து சளித்துப்போன இடங்களையே பார்த்து செல்கின்றனர். ர்தல் வாக்குறுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்தப்படும், நலிவடைந்துள்ள மாவட்டத்தின் ஒரே பொதுத்துறை நிறுவனமான ஹெச்.பி.எப். தொழிற்சாலை புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்தை மத்திய அரசு மூடி விட்டது. தற்போது அரசு மருத்துவக்கல்லூரி அறிவிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலளிக்கின்றன.

முக்கிய இடங்கள் :

காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்புள்ள முக்கிய இடங்களில் உதகமண்டலம் சட்டப்பேரவை தொகுதி முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த தொகுதியில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக கைப்பற்றியது. கடந்த 2006-ம் ஆண்டு பி.கோபால் (காங்கிரஸ்) மற்றும் 2011-ம் ஆண்டு புத்திசந்திரன்(அதிமுக), 2016-ம் ஆண்டு ஆர்.கணேஷ்(காங்கிரஸ்) வெற்றி பெற்றனர். 2008-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டதன் அடிப்படையில், இத்தொகுதியில் உள்ள குந்தா வட்டத்தில் உதகை நகராட்சி, கடநாடு, எப்பநாடு, கூக்கல், கக்குச்சி, தூனேரி, உல்லத்தி, நஞ்சநாடு மற்றும் தும்மனட்டி கிராமங்கள்.

சோலூர் பேரூராட்சி மற்றும் கேத்தி பேரூராட்சி ஆகியவை உள்ளன.

கடந்த ஜனவரியில் மாவட்ட நிர்வாகத்தினர் வெளியிட்ட பட்டியலின் நிலவரப்படி இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 98 லட்சத்து 353 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 06 ஆயிரத்து 775 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 10 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 05 ஆயிரத்து 138 வாக்காளர்கள் உள்ளனர்.

2021-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

98,353

பெண்

1,06,775

மூன்றாம் பாலினத்தவர்

10

மொத்த வாக்காளர்கள்

2,05,138

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

டி.வினோத்

அதிமுக

2

ஆர்.கணேஷ்

காங்கிரஸ்

3

கே.கிங் நார்சிஸஸ்

தேமுதிக

4.

ஜே.ராமன்

பாஜக

5.

எம்.பால்ராஜ்

பாமக

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1957

பி. கே. லிங்க கவுடர்

காங்கிரஸ்

22595

56.56

1962

டி. கரிச்சான்

காங்கிரஸ்

32860

49.57

1967

கே. போஜன்

சுதந்திரா கட்சி

37525

68.03

1971

எம். தேவராசன்

திமுக

28901

56.32

1977

ஜி. கோபாலன்

அதிமுக

18134

28.94

1980

கே. கல்லான்

காங்கிரஸ்

35528

51.82

1984

கே. கல்லான்

காங்கிரஸ்

52145

62.99

1989

எச். எம். இராசு

காங்கிரஸ்

35541

36.76

1991

எச். எம். இராசு

காங்கிரஸ்

53389

60.79

1996

டி. குண்டன்

திமுக

69636

70.25

2001

எச். எம். இராசு

காங்கிரஸ்

59872

62.67

2006

பி. கோபாலன்

காங்கிரஸ்

45551

---

2011

புத்திசந்திரன்

அதிமுக

61504

--

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1957

கே. போஜன்

சுயேச்சை

14796

37.04

1962

கே. போஜன்

சுதந்திரா கட்சி

26278

39.64

1967

டி. கே. கவுடர்

காங்கிரஸ்

17636

31.97

1971

எம். பி. நஞ்சன்

சுதந்திரா கட்சி

17662

34.42

1977

கே. கருப்பசாமி

திமுக

18005

28.74

1980

பி. கோபாலன்

அதிமுக

25628

37.38

1984

எசு. எ. மகாலிங்கம்

திமுக

29345

35.45

1989

டி. குண்டன் என்கிற குண்ட கவுடர்

திமுக

34735

35.93

1991

எச். நடராசு

திமுக

27502

31.31

1996

எச். எம். இராசு

காங்கிரஸ்

22456

22.65

2001

ஜெ. கட்சி கவுடர்

பாஜக

30782

32.22

2006

கே. என். துரை

அதிமுக

40992

---

2011

கணேசன்

காங்கிரஸ்

53819

--

2006சட்டமன்ற தேர்தல்

114. உதகமண்டலம்

வரிசை எண்

வேட்பளார்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

B. கோபாலன்

காங்கிரஸ்

45551

2

K.N. துரை

அ.தி.மு.க

40992

3

J. பெஞ்சமன் ஜகாப்

தே.மு.தி.க

4963

4

R. முருகேசன்

பிஜேபி

1499

5

J. ஆனந்த் குமார்

ஏஐஎஃப்பி

932

6

A. சசிகுமார்

சுயேச்சை

758

7

R. கிருஷ்ணன்

சுயேச்சை

498

8

K. புகழேந்தி

பிஎஸ்பி

427

9

K. சுப்பிரமணியன்

எல்ஜேபி

177

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

114. உதகமண்டலம்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

புத்திச்சந்திரன்

அ.தி.மு.க

61605

2

R. கணேஷ்

காங்கிரஸ்

54060

3

B. குமாரன்

ப.ஜா.க

2716

4

D. செல்வராஜ்

சுயேச்சை

1743

5

J. இந்திர ராஜ்

சுயேச்சை

590

6

குட்டிகிருஷ்ணன்

சுயேச்சை

508

7

C. சேதுமாதவன்

பிஎஸ்பி

485

8

R. கணேசன்

சுயேச்சை

282

9

B. சுரேஷ்குமார்

சுயேச்சை

280

10

R. கணேஷ்

சுயேச்சை

226

11

M. சந்திரன்

சுயேச்சை

180

122675

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x