Published : 11 Mar 2021 02:35 PM
Last Updated : 11 Mar 2021 02:35 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
பொன். சரஸ்வதி | அதிமுக |
ஈஸ்வரன் | திமுக |
ஹேமலதா | அமமுக |
குட்டி(எ)ஜனகராஜ் | மக்கள் நீதி மய்யம் |
பொ.நடராசன் | நாம் தமிழர் கட்சி |
நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு தொகுதியானது, பரப்பளவில் பெரியது. கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் திருச்செங்கோடு தொகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு, அதில் இருந்து குமாரபாளையம் என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டது.
திருச்செங்கோடு தொகுதியில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயில், தேசத் தந்தை காந்தி, நேரு போன்ற தேசிய தலைவர்கள் வந்து சென்ற புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள காந்தி ஆசிரமம் தொகுதியில் உள்ளது. விசைத்தறி, ரிக் தயாரிப்பு (ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனம்) தொகுதியின் பிரதான தொழிலாகும். நாடு முழுவதும் ஆழ்துளை கிணறுகள் போட இயக்கப்படும் ரிக் வண்டிகள் பெரும்பாலானவை திருச்செங்கோட்டை சேர்ந்தவை. இதுபோல் லாரித் தொழிலும் கணிசமான அளவில் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவிர, கல்வி நிறுவனங்களும் கணிசமான அளவில் உள்ளன.
பெரும்பான்மை சமுதாயம்:
தொகுதியில் கொங்குவேளாளக் கவுண்டர், முதலியார் பிரிவு மக்கள் கணிசமாக உள்ளனர். இதற்கடுத்தாற் போல் பட்டியலின மக்கள் கணிசமான அளவில் உள்ளனர்.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்:
திருச்செங்கோடு நகராட்சி, மல்லசமுத்திரம் பேரூராட்சி, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியமும் வருகின்றன. இதற்கு உட்பட்ட பகுதியில் கருவேப்பம்பட்டி, ராஜாபாளையம், கருப்பகவுண்டம்பாளையம், திருமங்கலம், கருமாபுரம், கூத்தாநத்தம், செண்பகமாதேவி, பள்ளக்குழி அக்ரஹாரம், மங்கலம், சப்பயபுரம், மாமுண்டி அக்ரஹாரம், மல்லசமுத்திரம் மேற்கு, வரகூராம்பட்டி, புதுப்புளியம்பட்டி, சித்தளந்தூர், நல்லிபாளையம் மற்றும் மரப்பரை, தேவனாங்குறிச்சி என பல கிராமங்கள் உள்ளன.
தொகுதியின் பிரச்சினைகள்:
தொகுதியின் தலைமையிடமான திருச்செங்கோட்டின் முக்கிய பிரச்சினையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். இதனை தவிர்க்க ரிங் ரோடு அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. எனினும், இதற்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதுபோல் ரிக் வாகன தயாரிப்புக்கான தொழிற்பேட்டை அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகிறது.
கட்சிகளின் வெற்றி:
திருச்செங்கோடு தொகுதியில், மார்க்சிஸ்ட் மற்றும் தேமுதிக., ஆகியவை தலா ஒருமுறை, காங்கிரஸ் இரு முறை, திமுக 3 முறை, அதிமுக 7 முறை வென்றுள்ளன.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,11,093 |
பெண் |
1,16,512 |
மூன்றாம் பாலினத்தவர் |
35 |
மொத்த வாக்காளர்கள் |
2,27,640 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
பொன். சரஸ்வதி |
அதிமுக |
2 |
பார். இளங்கோவன் |
திமுக |
3 |
ஜெ. விஜய்கமல் |
தேமுதிக |
4 |
ச. ராஜா |
பாமக |
5 |
எஸ். நாகராஜன் |
பாஜக |
6 |
பொ. நடராஜன் |
நாம் தமிழர் |
7 |
எஸ். நதிராஜவேல் |
கொமதேக |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
1951 |
எஸ். ஆறுமுகம் |
சுயேச்சை |
29007 |
1957 |
டி. எம். காளியண்ணன் |
காங்கிரஸ் |
33360 |
1962 |
டி. எம். காளியண்ணன் |
காங்கிரஸ் |
24640 |
1967 |
டி. எ. இராஜவேலு |
திமுக |
42479 |
1971 |
எஸ். கந்தப்பன் |
திமுக |
43605 |
1977 |
சி. பொன்னையன் |
அதிமுக |
44501 |
1980 |
சி. பொன்னையன் |
அதிமுக |
69122 |
1984 |
சி. பொன்னையன் |
அதிமுக |
77659 |
1989 |
வி. இராமசாமி |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) |
53346 |
1991 |
டி. எம். செல்வகணபதி |
அதிமுக |
113545 |
1996 |
டி. பி. ஆறுமுகம் |
திமுக |
96456 |
2001 |
சி. பொன்னையன் |
அதிமுக |
107898 |
2006 |
பி. தங்கமணி |
அதிமுக |
85471 |
2011 |
பி. சம்பத் குமார் |
தேமுதிக |
78103 |
ஆண்டு |
2ம் இடம்பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
1951 |
டி. எஸ் அர்த்தனாரி |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
28807 |
1957 |
ஆர். கந்தசாமி |
காங்கிரஸ் |
29546 |
1962 |
டி. எ. இராஜவேலு |
திமுக |
21050 |
1967 |
டி. பி. நடேசன் |
காங்கிரஸ் |
17174 |
1971 |
வி. குமாரசாமி |
காங்கிரஸ் (ஸ்தாபன) |
24345 |
1977 |
வி. குமாரசாமி |
ஜனதாகட்சி |
17764 |
1980 |
டி. எம். காளியண்ணன் |
காங்கிரஸ் |
52046 |
1984 |
எம். எம். கந்தசாமி |
திமுக |
58437 |
1989 |
ஆர். இராஜன் |
அதிமுக (ஜெயலலிதா) |
35258 |
1991 |
வி. இராமசாமி |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) |
34886 |
1996 |
எசு. சின்னுசாமி |
அதிமுக |
53836 |
2001 |
டி. பி. ஆறுமுகம் |
திமுக |
63789 |
2006 |
செ. காந்திசெல்வன் |
திமுக |
85355 |
2011 |
எம். ஆர். சுந்தரம் |
காங்கிரஸ் |
54158 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
P. தங்கமணி |
அ.தி.மு.க |
85471 |
2 |
S. காந்திசெல்வன் |
தி.மு.க |
85355 |
3 |
S. பொங்கியண்ணன் |
தே.மு.தி.க |
32327 |
4 |
V. லிங்கப்பன் |
சுயேச்சை |
2969 |
5 |
P.T. தனகோபால் |
பி.ஜே.பி |
2332 |
6 |
M. ரவி |
சுயேச்சை |
885 |
7 |
தேன்மொழி |
சி.பி.ஐ |
666 |
8 |
P. மனோகரன் |
சுயேச்சை |
663 |
9 |
K. அண்ணாதுரை |
சுயேச்சை |
303 |
10 |
V. சிவமலை |
சுயேச்சை |
267 |
11 |
L. நந்தகுமார் |
சுயேச்சை |
258 |
12 |
T.G.P. தண்டபாணி |
சுயேச்சை |
232 |
13 |
P. செல்வராஜ் |
சுயேச்சை |
190 |
14 |
N. சின்னுசாமி |
சுயேச்சை |
150 |
212068 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
P. சம்பத்குமார் |
தே.மு.தி.க |
78103 |
2 |
M.R. சுந்தரம் |
காங்கிரஸ் |
54158 |
3 |
S. செல்வராஜ் |
சுயேச்சை |
3809 |
4 |
S. செந்தில்குமார் |
சுயேச்சை |
3311 |
5 |
R. தமிழரசு |
சுயேச்சை |
2776 |
6 |
S. நாகராஜன் |
பி.ஜே.பி |
2609 |
7 |
K. அப்பாவு |
சுயேச்சை |
1401 |
8 |
K. ஞானவேல் |
பி.எஸ்.பி |
1227 |
9 |
G. சம்பத்குமார் |
சுயேச்சை |
771 |
10 |
N. செந்தில்ராஜன் |
சுயேச்சை |
656 |
11 |
R. கணேஷ் |
சுயேச்சை |
602 |
12 |
K. கலையரசன் |
சுயேச்சை |
422 |
149845 |
|||
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT