Published : 11 Mar 2021 02:36 PM
Last Updated : 11 Mar 2021 02:36 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
பி. தங்கமணி | அதிமுக |
வெங்கடாசலம் | திமுக |
கே.ஆர்.சிவசுப்பிரமணியன் | அமமுக |
காமராஜ் | மக்கள் நீதி மய்யம் |
சு.வருண் | நாம் தமிழர் கட்சி |
நாமக்கல் மாவட்டத்தில், ஈரோடு எல்லையை ஒட்டி குமாரபாளையம் தொகுதி அமைந்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது, திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியை இரண்டாக பிரித்து இத்தொகுதி உருவாக்கப்பட்டது.
விசைத்தறி மற்றும் இதைச் சார்ந்து, சாயமேற்றுதல் உள்ளிட்டவை தொகுதியின் பிரதான தொழிலாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள், படுக்கை விரிப்புகள் நாடு முழுவதும் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன்மூலம் பல ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பும் பெற்று வருகின்றனர்.
பெரும்பான்மை சமுதாயம்:
கவுண்டர், முதலியார் மற்றும் பட்டியல் இன மக்கள் கணிசமான அளவில் தொகுதியில் உள்ளனர். இந்து மதத்தினர் தொகுதியில் கணிசமான அளவில் உள்ளனர்.
தொகுதியின் பிரச்சினைகள்:
சாயக்கழிவு பிரச்சினை தொகுதியின் தீராத பிரச்சினையாக உள்ளது. சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீரால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், அவை நேரடியாக காவிரி ஆற்றிலும் கலந்து விடப்படுதால் காவிரி ஆறும் மாசடைந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. எனினும், 10 ஆண்டுகளாகியும் இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்:
குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் நகராட்சிகள், படைவீடு பேரூராட்சி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை உள்ளன. மேலும், குமாரபாளையம் வட்டத்துக்கு உட்பட்ட குமாரபாளையம் அக்ரஹாரம், குமாரபாளையம், பல்லக்காபாளையம், சவுதாபுரம், மோடமங்கலம், மோடமங்கலம் அக்ரஹாரம், ஆனங்கூர், எலந்தகுட்டை, கலியனூர், கலியனூர் அக்ரஹாரம், சமயசங்கிலி அக்ரஹாரம், பள்ளிப்பாளையம் அக்ரஹாரம், ஒடப்பள்ளி அக்ரஹாரம், காடச்சநல்லூர், பாப்பம்பாளையம் மற்றும் கொக்கராயன்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் அடங்கியுள்ளன.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,22,326 |
பெண் |
1,27,053 |
மூன்றாம் பாலினத்தவர் |
29 |
மொத்த வாக்காளர்கள் |
2,49,408 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
பி. தங்கமணி |
அதிமுக |
2 |
பி. யுவராஜ் |
திமுக |
3 |
பி. ஏ. மாதேஸ்வரன் |
தேமுதிக |
4 |
செ. மூர்த்தி |
பாமக |
5 |
கே. ஈஸ்வரன் |
பாஜக |
6 |
க. அருண்குமார் |
நாம் தமிழர் |
7 |
ஆர். பொன்னுசாமி |
கொமதேக |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
P. தங்கமணி |
அ.தி.மு.க |
91077 |
2 |
G. செல்வராஜூ |
தி.மு.க |
64190 |
3 |
K.S. பாலமுருகன் |
பி.ஜே.பி |
1600 |
4 |
S. தங்கமணி |
சுயேச்சை |
1179 |
5 |
K. வேணுகோபால் |
சுயேச்சை |
1126 |
6 |
C. முருகேசன் |
சுயேச்சை |
571 |
7 |
வெங்கடாச்சலம் |
சி.பி.ஐ |
338 |
8 |
R. செந்தில்குமார் |
ஐ.ஜே.கே |
252 |
9 |
V. லிங்கப்பன் |
யு.எம்.கே |
210 |
10 |
L. பழனியப்பன் |
சுயேச்சை |
194 |
11 |
P. செல்வராஜ் |
சுயேச்சை |
122 |
12 |
C. சண்முகம் |
சுயேச்சை |
96 |
160955 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT