Published : 11 Mar 2021 02:44 PM
Last Updated : 11 Mar 2021 02:44 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
சித்தமல்லி பழனிச்சாமி (பாமக) | அதிமுக |
எஸ்.ராஜ் குமார் (காங்கிரஸ்) | திமுக |
கோமல் ஆர்.கே.அன்பரசன் | அமமுக |
ரவிச்சந்திரன் | மக்கள் நீதி மய்யம் |
கி.காசிராமன் | நாம் தமிழர் கட்சி |
மயிலாடுதுறை மாவட்டம் தனி மாவட்டமாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உள்ளது. மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 166 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 23 ஆயிரத்து 841 பெண் வாக்காளர்களும், 15 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 022 வாக்காளர்கள் உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 25 ஆண்டு காலமாக கோரிக்கை கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே 1926-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த ரயில் போக்குவரத்து 1986-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததால், கடந்த 2016-17ம் ஆண்டு மத்திய ரயில்வே பட்ஜெட்டில் ரூ.117 கோடியில் திட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் நிதி ஒதுக்காததால் இத்திட்டம் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு ரூ.42 கோடி மதிப்பில் மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீர் ஓடி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பாதாள சாக்கடையை சீரமைக்க வேண்டும் என்பதுதான் தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.
மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும். தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கடந்த 2016 தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் 70,949 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் க. அன்பழகன் 66,171 வாக்குகள் பெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,16,455 |
பெண் |
1,16,675 |
மூன்றாம் பாலினத்தவர் |
9 |
மொத்த வாக்காளர்கள் |
2,33,139 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
வீ..ராதாகிருஷ்ணன் |
அதிமுக |
2 |
க.அன்பழகன் |
திமுக |
3 |
கே.அருள்செல்வன் |
தேமுதிக |
4 |
அ.அய்யப்பன் |
பா.ம.க |
5 |
ச.முத்துக்குமரசாமி |
பா.ஜ.க |
6 |
ஜே.ஷாகுல் அமீது |
நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 - 2011)
ஆண்டு |
வெற்றிபெற்றவர் |
கட்சி |
2011 |
ஏ. ஆர். பால அருட்செல்வம் |
தேமுதிக |
2006 |
S.ராஜ்குமார் |
காங்கிரஸ் |
2001 |
ஜெக.வீரபாண்டியன் |
பாஜக |
1996 |
M.M.S.அபுல்ஹசன் |
தமாகா |
1991 |
M.M.S.அபுல்ஹசன் |
காங்கிரஸ் |
1989 |
A.செங்குட்டுவன் |
திமுக |
1984 |
M..தங்கமணி |
அதிமுக |
1984 இடைத்தேர்தல் |
K.சத்தியசீலன் |
திமுக |
1980 |
N.கிட்டப்பா |
திமுக |
1977 |
N.கிட்டப்பா |
திமுக |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
ராஜாகுமார்.S |
காங்கிரஸ் |
53490 |
2 |
மகாலிங்கம்.M |
மதிமுக |
51912 |
3 |
ராஜேந்தர் T விஜயா |
சுயேச்சை |
4346 |
4 |
தவமணி.P |
தேமுதிக |
2277 |
5 |
வாசுதேவன்.P |
பாஜக |
1327 |
6 |
முத்துசாமி.P |
பகுஜன் சமாஜ் கட்சி |
624 |
7 |
அமீநுல்லாஹ்.S |
தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் |
531 |
8 |
ராஜேந்திரன்.S |
சுயேச்சை |
407 |
9 |
சுப்பிரமணியன்.A |
சமாஜ்வாதி கட்சி |
390 |
10 |
வாசுதேவன்.J.M |
சுயேச்சை |
308 |
115612 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
அருட்செல்வம்.A.R |
தேமுதிக |
63326 |
2 |
ராஜகுமார்.S |
காங்கிரஸ் |
60309 |
3 |
மணிமாறன்.B |
சுயேச்சை |
6023 |
4 |
சேதுராமன்.G |
பாஜக |
4202 |
5 |
மதியழகன்.S |
சுயேச்சை |
1678 |
6 |
ஜெயராமன்.S.K |
இந்திய ஜனநாயக கட்சி |
1002 |
7 |
முருகன்.T |
சுயேச்சை |
963 |
8 |
மைதிலி.M |
பகுஜன் சமாஜ் கட்சி |
790 |
9 |
திருகணம்.R |
இராஷ்டிரிய ஜனதா தளம் |
712 |
10 |
ராஜாராமன்.M |
சுயேச்சை |
555 |
11 |
அப்துல்ஜஹலீல் |
சுயேச்சை |
528 |
12 |
வாசுதேவன்.J |
சுயேச்சை |
523 |
13 |
தில்லைநடராஜன்.R |
சுயேச்சை |
431 |
14 |
பாரதிதாசன்.G.S |
சுயேச்சை |
304 |
15 |
திமோதி.T |
சுயேச்சை |
263 |
16 |
குமார்.M |
சுயேச்சை |
238 |
141847 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT