Published : 11 Mar 2021 02:44 PM
Last Updated : 11 Mar 2021 02:44 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
ஜோதிமுத்து ராமலிங்கம் | அதிமுக |
பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் | திமுக |
ஜி.சிக்கந்தர் பாட்ஷா | அமமுக |
வி.பி.மணி | மக்கள் நீதி மய்யம் |
க.பாண்டியம்மாள் | நாம் தமிழர் கட்சி |
மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது இந்த தொகுதி. உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில், நகைக்கடை பஜார், மாசி வீதிகள், முக்கிய வணிக நிறுவனங்கள், பெரியார் பேருந்து நிலையம் போன்றவை இத்தொகுதியில் உள்ளன. மதுரை மாநகராட்சியின் 22 வார்டுகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனை வெற்றி பெற செய்தது இத்தொகுதி. இத்தொகுதியில் பழ.நெடுமாறன் 1980-ம் ஆண்டு தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அரசு ஊழியர், வணிகர்கள், சுமை மற்றும் கூலி தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஜெயின் சமூகத்தினர் உட்பட வெளி மாநிலத்தினர் பலர் இத்தொகுதியில் வசிக்கின்றனர். ஜவுளி, உணவகங்கள், லாரி பார்சல் சர்வீஸ், நகை வியாபாரம் என ஏராளமான தொழில்கள் இத்தொகுதியில் நடக்கின்றன.
மீனாட்சி அம்மன் கோயில் அருகே அடுக்குமாடி பார்க்கிங் வசதி, எளிதான பக்தர்கள் வந்து செல்லும் வசதி, சுற்றுலா வசதியை மேம்படுத்தாது, நேதாஜி சாலை உட்பட பல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை மேம்படுத்தாதது, கிருதுமால், சிந்தாமணி, அனுப்பானடி வாய்க்கால்கள் தூர்வாரப்படாதது என பல பிரச்சனைகளுக்கு நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் உள்ளது.
1957-ம் ஆண்டு முதல் ஒரு இடைத்தேர்தல் உட்பட இதுவரை 15 தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 4 முறையும், திமுக 5 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 2 முறையும், அதிமுக, திமுக, சுயேட்சை வேட்பாளர் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்(திமுக) வெற்றி பெற்றார். அவர் மறைவை தொடர்ந்து அதே ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கவுஸ்பாட்ஷா(திமுக) வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் ஆர்.சுந்தர்ராஜன்(தேமுதிக) அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்றார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
மதுரை (மாநகராட்சி) வார்டு எண். 9, 10, 16, 39 மற்றும் 43 முதல் 59 வரை.
சட்டமன்ற தொகுதி கடந்த வந்த தேர்தல்கள்;
1971ம் தேர்தலில் திமுகவை சேர்ந்த கு.திருப்பதியும், 1977ம் ஆண்டு தேர்தலில் என்.லட்சுமண நாராயணன்(அதிமுக), 1980ம் ஆண்டில் பழ.நெடுமாறன்(சுயேச்சை), 1984ம் ஆண்டில் தெய்வநாயகம்(இ.தே.காகிரஸ்), 1989ம் ஆண்டில் எஸ்.பவுல்ராஜ்(திமுக), 1991ம் ஆண்டில் ஏ.தெய்வநாயகம்(இ.தே.காங்கிரஸ்), 1996ம் ஆண்டில் ஏ.தெய்வநாயகம்(த.மா.கா), 2011ம் ஆண்டில் ஹக்கீம்(த.மா.கா), 2006ம் ஆண்டில் பிடிஆர்.பழனிவேல்ராஜன்(திமுக), 2006ம் ஆண்டு இடைத்தேர்தலில் கவுஸ் பாட்ஷா(திமுக), 2011ம் ஆண்டில் ஆர்.சுந்தராஜன்(தேமுதிக) ஆகியோர் வெற்றிப்பெற்றனர். 2016ம் ஆண்டு தேர்தலில் பிடி.ஆர்.பழனிவேல் தியாகராசன் வெற்றிப்பெற்றார்.
2016ம் ஆண்டு தேர்தல் வெற்றிப்பெற்றவர்: பிடிஆர்.தியாகராசன்(திமுக) பெற்ற வாக்குகள்; 64,622
மா.ஜெயபால்(அதிமுக); 58,900
டி.சிவமுத்துக்குமார்(தேமுதிக); 11,235
கார்த்திக் பிரபு(பாஜக); 5,926
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,15,214 |
பெண் |
1,20,552 |
மூன்றாம் பாலினத்தவர் |
16 |
மொத்த வாக்காளர்கள் |
2,35,782 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
சட்டமன்ற தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1971 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்ற வேட்பாளர் |
கட்சி |
வாக்கு விழுக்காடு (%) |
2011 |
சுந்தர்ராஜன். ஆர். |
தேமுதிக |
52.77 |
2006 இடைத் தேர்தல் |
எஸ். எஸ். கவுஸ் பாட்சா |
திமுக |
|
2006 |
பி. டி. ஆர். பழனிவேல்ராசன் |
திமுக |
45.83 |
2001 |
M.A.ஹக்கீம் |
த.மா.கா |
46.53 |
1996 |
A.தெய்வநாயகம் |
த.மா.கா |
46.69 |
1991 |
A.தெய்வநாயகம் |
இ.தே.கா |
62.27 |
1989 |
S.பவுல்ராஜ் |
திமுக |
39.73 |
1984 |
A.தெய்வநாயகம் |
இ.தே.கா |
50.76 |
1980 |
பழ. நெடுமாறன் |
சுயேட்சை |
58.13 |
1977 |
N.லக்ஷ்மிநாராயணன் |
அதிமுக |
39.9 |
1971 |
கு. திருப்பதி |
திமுக |
48.9 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
பழனிவேல்ராஜன்..P.T.R |
திமுக |
43185 |
2 |
ஜக்கையன்.S.T.K |
அதிமுக |
35992 |
3 |
சுந்தர்ராஜன்.R |
தேமுதிக |
12038 |
4 |
ஜெயக்குமார்.P |
சுயேச்சை |
949 |
5 |
முஹமத்ராபிக்.M |
சுயேச்சை |
433 |
6 |
சசிகுமார்.A |
ஜனதா கட்சி |
356 |
7 |
ராஜ்குமார்.A |
சுயேச்சை |
281 |
8 |
ஞானபிரகாசம்.J |
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு |
279 |
9 |
இந்திரா.R |
ஜனநாயக காங்கிரஸ் |
217 |
10 |
ராஜகோபால்.R |
சுயேச்சை |
148 |
11 |
சுதா.P |
ஐக்கிய ஜனதா தளம் |
78 |
12 |
ஆனந்த்.P |
சுயேச்சை |
68 |
13 |
பாலசுப்ரமணி.R |
ஹிந்து மகாசபா |
46 |
14 |
பாஸ்கரன்.பொன் |
சுயேச்சை |
45 |
15 |
கதிரவன்.G |
சுயேச்சை |
39 |
16 |
நாராயணன்.M |
சுயேச்சை |
39 |
17 |
சயீத் அப்பாஸ்.S |
சுயேச்சை |
31 |
94224 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
சுந்தர்ராஜன்.R |
தேமுதிக |
76063 |
2 |
சையத் கவுஸ் பாஷா .S |
திமுக |
56503 |
3 |
சசிகுமார்.A |
பாஜக |
3708 |
4 |
சீனிவாசன்.G |
சுயேச்சை |
2569 |
5 |
முத்துராஜ்.K.M |
சுயேச்சை |
2140 |
6 |
ராதாகிருஷ்ணன்.R |
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா |
953 |
7 |
வெங்கடேஷ்குமார்.H |
இந்திய ஜனநாயக கட்சி |
624 |
8 |
ஜெயக்குமார்.M |
சுயேச்சை |
420 |
9 |
செந்தில்.S |
சுயேச்சை |
328 |
10 |
வேல வேந்தன் காண |
சுயேச்சை |
300 |
11 |
தமிழரசன்.S |
சுயேச்சை |
216 |
12 |
பாண்டி.P |
சுயேச்சை |
194 |
13 |
ஸயீத்தலிப் பாஷா.S |
சுயேச்சை |
133 |
144151 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT