Published : 11 Mar 2021 02:44 PM
Last Updated : 11 Mar 2021 02:44 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
மாணிக்கம் | அதிமுக |
என்.வெங்கடேசன் | திமுக |
எம்.ஜெயலெட்சுமி | அமமுக |
யோகநாதன் | மக்கள் நீதி மய்யம் |
ஞா.செங்கண்ணன் | நாம் தமிழர் கட்சி |
உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது இத்தொகுதி.
2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது சமயநல்லூர் சட்டமன்ற தொகுதி கலைக்கப்பட்டு அதில் சில பகுதிகளையும், கிழக்கு தொகுதியில் சில பகுதிகளையும் இணைத்து சோழவந்தான் (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது. அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், சோழவந்தான், பாலமேடு பேரூராட்சிகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
தொகுதியின் பிரச்சினைகள்
தென்னை, நெல், கரும்பு, கொய்யா வெற்றிலை விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். ஒருபோக, இருபோக சாகுபடிக்கு பற்றாக்குறையின்றி தண்ணீர் பெறுவது, சோழவந்தானில் வெற்றிலை விவசாய ஆராய்ச்சி மையம் அமைப்பது, கரும்பு விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் பணப்பட்டுவாடா செய்யப்படாதது, கல்லூரி, தொழிற்பேட்டைகள் இல்லாதது போன்றவை நீண்ட கால பிரச்சனைகளாக உள்ளன. அலங்காநல்லூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை, சாத்தையாறு அணை, குட்லாடம்பட்டி அருவி உள்ளிட்ட பகுதியில் உள்ளன.
1962-ம் ஆண்டு முதல் இதுவரை 13 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 3 முறையும், தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், பார்வர்டு பிளாக் கட்சி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பி.மூர்த்தி(தி.மு.க.), 2011-ம் ஆண்டு தேர்தலில் எம்.வீ.கருப்பையா (அ.தி.மு.க.), 2016 தேர்தலில் மாணிக்கம் (அதிமுக) வெற்றி பெற்றனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
• வாடிப்பட்டி தாலுகா
• மதுரை வடக்கு தாலுகா (பகுதி)
• சிறுவாலை, செல்லணக்கவுண்டன்பட்டி, அரியூர், அம்பலத்தாடி, விட்டங்குளம், வைரவநத்தம், வயலூர், சம்பக்குளம், பிள்ளையார்நத்தம், மூலக்குறிச்சி, தோடனேரி, தேனூர், சமயநல்லூர், கள்ளிக்குடி, கீழநெடுங்குளம், பொதும்பு, அதலை, பட்டக்குறிச்சி மற்றும் கோவில்குருந்தன்குளம் கிராமங்கள்.
சட்டமன்ற தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2016 ) 2016- மாணிக்கம் (அதிமுக), 2011- எம்.வி.கருப்பையா (அதிமுக), 2006- பி.மூர்த்தி (திமுக), 2001- வி.ஆர்.ராஜாங்கம் (அதிமுக), 1996 - எல்.சந்தானம் (திமுக), 1991 - அ.மா.பரமசிவம் (அதிமுக), 1989- டி.ராதாகிருஷ்ணன் (திமுக), 1984- ஏ.சந்திரசேகரன் (இ.தே.கா), 1980- ஏ.சந்திரசேகரன் (இ.தே.கா), 1977- V.பாலகுருவ ரெட்டியார் (அதிமுக),
2016 தேர்தல் ஒரு பார்வை
2016 தேர்தலில் 15 பேர் போட்டியிட்டனர். இதில் கி.மாணிக்கம் (அதிமுக- 87,044, பவானி (திமுக)- 62187, பாண்டியம்மாள் (விடுதலை சிறுத்தைகள்)- 7357, எஸ்.பழனிவேல்சாமி (பாஜக) - 2766, நோட்டா- 1930. 24857 வாக்குகள் வித்தியாசத்தில் கி.மாணிக்கம் வெற்றிப்பெற்றார். சோழவந்தான் தொகுதியில் தற்போது 211054 வாக்காளர்கள் உள்ளனர்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
2,11,054 |
பெண் |
1,06,827 |
மூன்றாம் பாலினத்தவர் |
9 |
மொத்த வாக்காளர்கள் |
2,11,054 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
சட்டமன்ற தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்ற வேட்பாளர் |
கட்சி |
வாக்கு விழுக்காடு (%) |
2011 |
கருப்பையா.M.V |
அதிமுக |
59.84 |
2006 |
P.மூர்த்தி |
திமுக |
42.39 |
2001 |
V.R.இராஜாங்கம் |
அதிமுக |
51.59 |
1996 |
L.சந்தானம் |
திமுக |
49.29 |
1991 |
A.M.பரமசிவம் |
அதிமுக |
67.34 |
1989 |
D.இராதாகிருஷ்ணன் |
திமுக |
34.24 |
1984 |
A.சந்திரசேகரன் |
இ.தே.கா |
53.35 |
1980 |
A.சந்திரசேகரன் |
இ.தே.கா |
50.28 |
1977 |
V.பாலகுருவ ரெட்டியார் |
அதிமுக |
40.02 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
மூர்த்தி.P |
திமுக |
47771 |
2 |
சந்தானம்.L |
அதிமுக |
46185 |
3 |
ராஜேந்திரன்.P |
தேமுதிக |
13942 |
4 |
கருணாநிதி.பொன் |
பாஜக |
1891 |
5 |
அம்மாவாசை..P.N |
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு |
722 |
6 |
மூர்த்தி.P |
சுயேச்சை |
637 |
7 |
கரடி.K |
சுயேச்சை |
614 |
8 |
நடராஜன்.M |
சுயேச்சை |
384 |
9 |
சீனிவாசன்.S |
ஐக்கிய ஜனதா தளம் |
311 |
10 |
ஆரோக்கியமேரி.T |
கம்யூனிஸ்ட் (மார்க்சிய ) |
245 |
112702 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
கருப்பையா.M.V |
அதிமுக |
86376 |
2 |
இளஞ்செழியன்.M |
பாமக |
49768 |
3 |
பழனிவேல்சாமி.S |
பாஜக |
2002 |
4 |
வீரன்.A |
சுயேச்சை |
1998 |
5 |
வழிபிறந்தால்.M |
சுயேச்சை |
975 |
6 |
ஆனந்தகுமார்.A |
பகுஜன் சமாஜ் கட்சி |
806 |
7 |
கிருஷ்ணவேணி.N |
சுயேச்சை |
424 |
8 |
பிச்சை.K |
சுயேச்சை |
421 |
9 |
ரேவதி.K |
சுயேச்சை |
349 |
10 |
சகுந்தலாதேவி.M |
தமுமுக |
335 |
11 |
முருகேசன்.S |
கம்யூனிஸ்ட் (மார்க்சிய ) |
247 |
12 |
முத்துகிருஷ்ணன்.P |
சுயேச்சை |
196 |
13 |
சசிகுமார்.A |
சுயேச்சை |
181 |
14 |
அழகர்சாமி.A |
சுயேச்சை |
136 |
15 |
சத்யமூர்த்தி.N |
சுயேச்சை |
134 |
144348 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT