Published : 11 Mar 2021 12:59 PM
Last Updated : 11 Mar 2021 12:59 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
முத்துக்குமார் (எ) தானேஷ் | அதிமுக |
சிவகாமசுந்தரி | திமுக |
எம்.கதிர்வேல் | அமமுக |
சரவணன் | மக்கள் நீதி மய்யம் |
இரா.இலக்கியா | நாம் தமிழர் கட்சி |
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி குளித்தலை தொகுதியிலிருந்து கடந்த 1967ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கரூர் நகராட்சியின் 4 வார்டுகள். கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்டம், புலியூர், உப்பிடமங்கலம் ஆகிய 4 பேரூராட்சிகள். கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்டங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளை உள்ளடக்கியது.
இத்தொகுதியில் கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் விபரங்களின்படி. 1 லட்சத்து 3 ஆயிரத்து 736 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 8 ஆயிரத்து 865 பெண் வாக்காளர்கள், 43 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 644 வாக்காளர்கள் உள்ளனர்.
மாயனூர் கதவணை உள்ளது. வாழை, வெற்றிலை விவசாயம் அதிகளவில் உள்ளது. காவிரி பாசனத்தின் வளமான பகுதிகளும், கடவூரில் வானம் பார்த்த வறட்சி பகுதிகளையும் உள்ளடக்கியது. முத்தரையர், சோழிய வெள்ளாளர், ரெட்டியார், பட்டியலின மக்கள் கணிசமாக உள்ளனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
கரூர் வட்டம் (பகுதி)
கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியானை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள், புலியூர் (பேரூராட்சி) மற்ரும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி),
கிருஷ்ணராயபுரம் வட்டம் (பகுதி) பாலராஜபுரம் ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், மணவாசி, சித்தலாவை, கம்மநல்லூர், மகாதானபுரம் (வடக்கு), சேங்கல் மற்றும் முத்துரெங்கம்பட்டி கிராமங்கள்.
கிருஷ்ணாபுரம் (பேரூராட்சி), மற்றும் பழையஜெயங்கொண்ட சோழபுரம் (பேரூராட்சி),
குளித்தலை வட்டம் (பகுதி) பாப்பயம்பாடி, வடவம்பாடி, மஞ்சநாய்க்கன்பட்டி, பண்ணப்பட்டி, தேவர்மலை, ஆதனூர், செம்பியநத்தம், டி.இடையப்பட்டி (மேற்கு), டி.இடையப்பட்டி (கிழக்கு), பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாவத்தூர், கீழப்பகுதி மற்றும் வாழ்வார்மங்கலம் கிராமங்கள்.
தொகுதி மக்கள் கோரிக்கைகள்
கிருஷ்ணராயபுரம், தரகம்பட்டியில் தீயணைப்பு நிலையங்கள், தரகம்பட்டியில் நீதிமன்றம், போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
தேர்தல் வரலாறு
2011ம் ஆண்டு அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.காமராஜ் 83 ஆயிரத்து 145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக போட்டியிட்ட அப்போதைய சிட் டிங் எம்எல்ஏ பி.காமராஜ் 60 ஆயிரத்து 636 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
2016ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட அப்போதைய மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்த ம.கீதா 83 ஆயிரத்து 977 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக கூட் டணியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வி.கே.அய்யர் 48,676 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,03,736 |
பெண் |
1,08,865 |
மூன்றாம் பாலினத்தவர் |
43 |
மொத்த வாக்காளர்கள் |
2,12,644 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
ம.கீதா |
அதிமுக |
2 |
வி.கே.அய்யர் |
புதிய தமிழகம் |
3 |
கு.சிவானந்தம் |
தமாகா |
4 |
மூ.பாண்டியன் |
பாமக |
5 |
பி.நவீன்குமார் |
பாஜக |
6 |
ப.தவமணி |
நாம் தமிழர் |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1967 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
1967 |
பி. சவுந்தரபாண்டியன் |
திமுக |
28444 |
1971 |
பி. சவுந்தரபாண்டியன் |
திமுக |
36177 |
1977 |
பி.சவுந்தரபாண்டியன் |
அதிமுக |
22561 |
1980 |
பி. எம். தங்கவேலு |
காங்கிரஸ் |
43623 |
1984 |
பி. எம். தங்கவேலு |
காங்கிரஸ் |
65928 |
1989 |
எ. அறிவழகன் |
அதிமுக (ஜெ) |
43574 |
1991 |
எ. அறிவழகன் |
அதிமுக |
80676 |
1996 |
என். நாகரத்தினம் |
திமுக |
57638 |
2001 |
ஆர். சசிகலா |
அதிமுக |
64046 |
2006 |
பி. காமராசு |
திமுக |
58394 |
2011 |
எசு. காமராசு |
அதிமுக |
83145 |
ஆண்டு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
1967 |
டி. வி. சன்னாசி |
காங்கிரஸ் |
25903 |
1971 |
பி. எம். தங்கவேல்ராசு |
ஸ்தாபன காங்கிரஸ் |
29020 |
1977 |
பி. எம். தங்கவேலு |
காங்கிரஸ் |
21967 |
1980 |
ஓ. அரங்கராசு |
அதிமுக |
34584 |
1984 |
கே. கிருசுணன் |
திமுக |
25613 |
1989 |
ஆர். மாசிலாமணி |
திமுக |
32890 |
1991 |
ஆர். நடராசன் |
திமுக |
24240 |
1996 |
எ. அறிவழகன் |
அதிமுக |
42461 |
2001 |
எசு. பெரியசாமி |
திமுக |
42497 |
2006 |
ஆர். சசிகலா |
அதிமுக |
49460 |
2011 |
பி. காமராசு |
திமுக |
63638 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
P. காமராஜ் |
தி.மு.க |
58394 |
2 |
R. சசிகலா |
அ.தி.மு.க |
49460 |
3 |
D. முருகன் |
தே.மு.தி.க |
9728 |
4 |
M. லீலாவதி |
சுயேச்சை |
3903 |
5 |
N. மருதவீரன் |
சுயேச்சை |
1168 |
6 |
V. சிவகாமி |
பி.எஸ்.பி |
1065 |
7 |
A. சிவசுப்பிரமணி |
பி.ஜே.பி |
1009 |
8 |
A. பெரியசாமி |
சுயேச்சை |
403 |
9 |
A. அபிமன்னன் |
சுயேச்சை |
334 |
10 |
P. பொன்னுசாமி |
டி.என்.எம்.சி |
331 |
11 |
R. குழந்தைவேல் |
சுயேச்சை |
254 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
S. காமராஜ் |
அ.தி.மு.க |
83145 |
2 |
P. காமராஜ் |
தி.மு.க |
60636 |
3 |
V. செந்தில்குமார் |
சுயேச்சை |
2300 |
4 |
K. சுதாகர் |
சுயேச்சை |
1194 |
5 |
P. கணேசன் |
சுயேச்சை |
1093 |
6 |
K. சங்கன் |
பி.எஸ்.பி |
832 |
7 |
C. சுப்பிரமணியம் |
பி.ஜே.பி |
801 |
8 |
C. சக்திவேல் |
சுயேச்சை |
404 |
9 |
E. சாரதி |
சுயேச்சை |
397 |
10 |
P. அஞ்சலிதேவி |
ஐ.ஜே.கே |
341 |
11 |
P. அருணகிரி |
ஐபிஎச்ம் |
201 |
12 |
N. அண்ணாதுரை |
சுயேச்சை |
179 |
13 |
B.ரத்தினம் |
பிபிஐஎஸ் |
176 |
151699 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT