Published : 11 Mar 2021 12:59 PM
Last Updated : 11 Mar 2021 12:59 PM

137 - குளித்தலை

காவிரி பாசன பகுதிகளில் அதிகளவில் கோரை சாகுபடி.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
சந்திரசேகர் அதிமுக
ரா.மாணிக்கம் திமுக
வி.நிரோஷா அமமுக
மணிகண்டன் மக்கள் நீதி மய்யம்
சீனி.பிரகாசு நாம் தமிழர் கட்சி

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி 2வது பொதுத்தேர்தலான 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது திமுக சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி முதன்முதலாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.

குளித்தலை நகராட்சி, மருதூர், நங்கவரம் பேரூராட்சிகள், குளித்தலை, தோகைமலை ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சிகளை உள்ளடக்கியது.

கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் விபரங்களின்படி, 1 லட் சத்து 10 ஆயிரத்து 462, 1 லட்சத்து 16 ஆயிரத்து 312, 11 இதரர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 785 வாக்காளர்கள் உள்ளனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

கிரிஷ்ணராயபுரம் தாலுகா (பகுதி)

சிந்தலவாடி, பிள்ளபாளையம், கள்ளப்பள்ளி, வயலூர், வீரியபாளையம், பஞ்சப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, பாப்பக்காப்பட்டி, சிவாயம் (வடக்கு), சிவாயம் (தெற்கு), கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கிணம் மற்றும் கருப்பத்தூர் (ஆர்.எப்) கிராமங்கள்,

குளித்தலை தாலுகா (பகுதி)

கருவாப்பநாயக்கன்பேட்டை, வதியம், மணத்தட்டை, வைகைநல்லூர் (வடக்கு), வைகைநல்லூர் (தெற்கு), ராஜேந்திரம் (வடக்கு), ராஜேந்திரம்( தெற்கு), குமாரமங்கலம், பொய்யாமணி, சூரியனூர், முதலைப்பட்டி, சேப்ளாபட்டி, நெய்தலூர் (வடக்கு), நெய்தலூர் (தெற்கு), தளிஞ்சி, கள்ளை, இனங்கூர், நல்லூர்,இரண்யமங்கலம், சத்தியமங்கலம், சின்னியம்பாளையம், கூடலூர், புத்தூர், ஆலத்தூர், ராச்சண்டார், திருமலை, புழுதேரி, வடசேரி, கல்லடை, தோகமலை, கழுகூர், நாகனூர், பொருந்தலூர், பாதிரிப்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் பில்லூர் கிராமங்கள்

குளித்தலை (நகராட்சி), மருதூர் (பேரூராட்சி) மற்றும் நங்கவரம் (பேரூராட்சி).

தொகுதி கோரிக்கைகள்

இத்தொகுதியில், குளித்தலை அருகே காவிரி பாசன பகுதிகளில் அதிகளவில் கோரை சாகுபடி நடைபெற்று வருகிறது. காவிரி பாசனம் காரணமாக வாழை, நெல், கரும்பு ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. காவிரி கரையோரம் உள்ள பகுதிகள் வளமாக இருந்தாலும், தோகைமலை ஒன்றியம் வானம் பார்த்த வறட்சியான பகுதியாகும். தீயணைப்பு நிலையம், துணை மின் நிலையம், புதிய பேருந்து நிலையம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. இத்தொகுதியில், முத்தரையர், சோழியவெள்ளார், ரெட்டியார், பட்டியலின மக்கள் கணிசமாக உள்ளனர்.

தேர்தல் வரலாறு

குளித்தலை தொகுதியில், கடந்த 2011ம் தேர்தலில் அதிமுக வேட்பாளர் (முன்னாள் அமைச்சர்) ஏ.பாப்பாசுந்தரம் 87 ஆயிரத்து 459 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்போதைய சிட்டிங் எம்எல்ஏ ஆர்.மாணிக்கம் 64 ஆயிரத்து 986 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

2016ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் எ.ராமர் போட்டியிட்டு 89 ஆயிரத்து 923 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அதிமுக வேட்பாளர் ஆர்.சந்திரசேகரன் 77 ஆயிரத்து 768 வாக்குகள் பெற்று, வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் விபரங்களின்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,10,462

பெண்

1,16,312

மூன்றாம் பாலினத்தவர்

11

மொத்த வாக்காளர்கள்

2,26,785

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

என்.ஆர்.சந்திரசேகரன்

அதிமுக

2

இ.ராமர்

திமுக

3

த.ஜமுனா

தேமுதிக

4

எஸ்.பாலசுப்பிரமணி

பாமக

5

என்.கே.என்.சதக்கத்துல்லா

இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம்

6

சீனி. பிரகாஷ்

நாம் தமிழர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1957

மு. கருணாநிதி

திராவிட முன்னேற்றக் கழகம்

1962

V.இராமநாதன்

இந்திய தேசிய காங்கிரஸ்

1967

M.கந்தசாமி

திராவிட முன்னேற்றக் கழகம்

1971

M.கந்தசாமி

திராவிட முன்னேற்றக் கழகம்

1977

P.E.சீனிவாசரெட்டியார்

இந்திய தேசிய காங்கிரஸ்

1980

R.கருப்பையா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

1984

முசிரிபுத்தன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1989

A.பாப்பாசுந்தரம்

அதிமுக ஜெ

1991

A.பாப்பாசுந்தரம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1996

R.செல்வம்

திராவிட முன்னேற்றக் கழகம்

2001

A.பாப்பாசுந்தரம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2006

R.மாணிக்கம்

திராவிட முன்னேற்றக் கழகம்

2011

A.பாப்பாசுந்தரம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R. மாணிக்கம்

தி.மு.க

69615

2

A. பாப்பாசுந்தரம்

அ.தி.மு.க

55626

3

M.விஸ்வநாதன்

தே.மு.தி.க

4790

4

N.C. ராஜு

பி.ஜே.பி

2010

5

P. மகேந்திரன்

சுயேச்சை

1338

6

N. நாகராஜன்

சுயேச்சை

1026

7

K. கதிர்வேலு

பி.எஸ்.பி

1006

8

R. பூபதி

சுயேச்சை

900

9

M. முனுசாமி

எஸ்.பி

700

10

V. சின்னசாமி

சுயேச்சை

357

11

R. கோதை

சுயேச்சை

355

12

P. இறச்சி

சுயேச்சை

194

13

S. கந்தசாமி

சுயேச்சை

153

138070

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

A. பாப்பாசுந்தரம்

அ.தி.மு.க

87459

2

R. மணிக்கம்

தி.மு.க

64986

3

A. தனசேகரன்

பி.ஜே.பி

2200

4

K.V. சின்னசாமி

சுயேச்சை

1670

5

R. பிரகாஷ்கண்ணா

ஐ.ஜே.கே

1344

6

M. செல்வம்

பிபிஐஎஸ்

1164

7

S. கந்தசாமி

சுயேச்சை

839

159662

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x