Published : 11 Mar 2021 12:56 PM
Last Updated : 11 Mar 2021 12:56 PM

229 - கன்னியாகுமரி

குமரியில் உள்ள வானுயர்ந்த அய்யன் திருவள்ளுவர் சிலை.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
தளவாய்சுந்தரம் அதிமுக
எஸ் .ஆஸ்டின் திமுக
பி.செந்தில்முருகன் அமமுக
பி.டி. செல்வகுமார் மக்கள் நீதி மய்யம்
ஆ.சசிகலா நாம் தமிழர் கட்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதி இது. 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரை கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதியுடன் இருந்தது. பின்னர் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்ட பின்பு இத்தொகுதி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டது. இதைப்போல் முன்பு கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி இடம் பெற்றிருந்த திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதியும் மறுசீரமைப்பிற்கு பின்பு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் தொடக்கத்தில் உள்ள தொகுதியான இது சிறந்த சர்வதேச சுற்றுலாதலமாக விளங்கி வருகிறது. முக்கடலும் சங்கமிக்கும் எழில் அழகில் காந்திமண்டபம், கடல்நடுவே அமைந்த வானுயர்ந்த அய்யன் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ஆகியவை தனித்தன்மை பெற்ற சுற்றுலா சின்னங்களாக திகழ்கின்றன. இவற்றை பார்ப்பதற்காக கரையில் இருந்து 800 மீட்டர் தொலைவில் கடலுக்குள் படகு சவாரி செய்து விவேகானந்தர் பாறையை அடையும் சுற்றுலாபயணிகளின் அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாதவை.

இது தவிர விவேகானந்தாகேந்திரா, அரசு கலை கல்லூரி, மற்றும் தனியார் கல்லூரிகள், அய்யா வைகுண்டர்தலைமை பதி உள்ள சுவாமிதோப்பு, கன்னியாகுமரி புனித அலங்கார உபகாரமாதா ஆலயம், மற்றும் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், கல்சிற்ப கலைக்கு தனித்துவம் பெற்ற மைலாடி, வட்டக்கோட்டை, மருந்துவாழ்மலை, தோவாளை மலர்சந்தை, முப்பந்தலில் இருந்து ஆரல்வாய்மொழி வரையுள்ள காற்றாலைகள் என்று சிறப்புகள் ஏராளம்.

தொகுதியின் பிரச்சினைகள்

இந்து வாக்காளர்கள் இத்தொகுதியில் அதிக அளவில் காணப்பட்டாலும், கடற்கரை கிராமங்கள் அதிக அளவில் உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் கிறிஸ்தவ மீனவர்களின் ஓட்டுக்கள் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இஸ்லாமியர்கள், மற்றும் பல்வேறு சமூகத்தினர் பரவலாக வசித்து வருகின்றனர். இத்தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பல உள்ளன.

மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்பு சுவர், தேசிய பேரிடர் மீட்புமையம் போன்றவை இல்லாததால் கடல் அலைகளில் சிக்கும் மீனவர்கள் அடிக்கடி பேரிழப்புகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வருகின்றனர். சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் பிடிபடும் தரமான மீன்களை வர்த்தகம் செய்ய அரசு மீன் பதனிடும் தொழிற்சாலை, அரசு படகு கட்டுமான தளம் அமைக்காததும் பெரும் குறையாக உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி, பேட்டரி கார் சவாரி போன்றவற்றை தவிர பொழுதுபோக்கு அம்சங்கள் வேறேதும் இல்லை. காட்சி கோபுரம்முதல் பல சுற்றுலா மையங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.

1971ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்ததேர்தல்களில் அதிமுகவும், திமுகவும் மாறி, மாறி கன்னியாகுமரி தொகுதியை கைப்பற்றியுள்ளன. கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஆஸ்டின் வெற்றி பெற்றார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,39,238

பெண்

1,39,861

மூன்றாம் பாலினத்தவர்

37

மொத்த வாக்காளர்கள்

2,79,136

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

கே. பி. பச்சைமால்

அதிமுக

2006

என். சுரேஷ்ராஜன்

திமுக

50.05

2001

N.தளவாய் சுந்தரம்

அதிமுக

51.32

1996

என். சுரேஷ்ராஜன்

திமுக

43.63

1991

M.அம்மா முத்து

அதிமுக

60.14

1989

K.சுப்பிரமணிய பிள்ளை

திமுக

34.65

1984

K.பெருமாள் பிள்ளை

அதிமுக

54.05

1980

S.முத்துக்கிருஷ்ணன்

அதிமுக

47.58

1977

C.கிருஷ்ணன்

அதிமுக

33.32

1971

கே.ராஜாபிள்ளை

திமுக

1967

பி.எம்.பிள்ளை

இந்திய தேசிய காங்கிரஸ்

1962

பி.நடராஜன்

இந்திய தேசிய காங்கிரஸ்

1957

டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை

சுயேச்சை

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

N.சுரேஷ் ராஜன்

தி.மு.க

63181

2

N.தளவாய்சுந்தரம்

அ.தி.மு.க.

52494

3

A.சாந்தா சேகர்

தே.மு.தி.க

5093

4

N.தானு கிருஷ்ணன்.

பாஜக

3436

5

K.ராஜன்

சுயேச்சை

769

6

S.சுப்ரமணிய பிள்ளை.

சுயேச்சை

333

7

T.உத்தமன்

பார்வர்டு பிளாக்

317

8

K.கோபி

சுயேச்சை

310

9

S.குமாரசாமி

சுயேச்சை

117

10

P. வெற்றி வேலாயுதம் பெருமாள்

எ.பி.எச்.எம்

109

11

S.குமாரசாமி நாடார்

சுயேச்சை

66

126225

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K.T. பச்சையமால்

அ.தி.மு.க.

86903

2

N.சுரேஷ் ராஜன்

தி.மு.க

69099

3

M.R. காந்தி

பாஜக

20094

4

P.வெட்டிவேலாயுதபெருமாள்

எ.பி.எச்.எம்

734

5

மாணிக்பிரபு

சுயேச்சை

538

6

K.S.ராமநாதன்

சுயேச்சை

532

7

S.வாசு

சுயேச்சை

461

8

K.ராஜேஷ்

சுயேச்சை

459

9

P.சுரேஷ்ஆனாந்த்

பி.எஸ்.பி

418

10

S.வடிவேல்பிள்ளை

சுயேச்சை

198

11

Y.பச்சைமால்

சுயேச்சை

167

12

K..ராமாசாமி

சுயேச்சை

159

13

Yசுந்தரநாதன்

சுயேச்சை

154

14

C.காந்தி

சுயேச்சை

108

15

S.பாலகிருஷ்ணன்

சுயேச்சை

102

16

R.சதாசிவன்

சுயேச்சை

80

180206

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x