Published : 11 Mar 2021 12:58 PM
Last Updated : 11 Mar 2021 12:58 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
ஜான் தங்கம் | அதிமுக |
த.மனோ. தங்கராஜ் | திமுக |
டி.ஜெங்கின்ஸ் | அமமுக |
எம்.ஜெயராஜ் | மக்கள் நீதி மய்யம் |
சு.சலீன் (எ) சீலன் | நாம் தமிழர் கட்சி |
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் மைய பகுதியில் உள்ள தொகுதிபத்மனாபபுரம். வரலாற்று சிறப்புமிக்க இத்தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு மாற்றி அமைக்கப்பட்டன. திருவட்டார் தொகுதியில் அடங்கிய பகுதிகள் பத்மநாபபுரம் தொகுதியிலும், விளவங்கோடு தொகுதியிலும் சேர்க்கப்பட்டன. இத்தொகுதியில் திற்பரப்பு, பொன்மனை, குலசேகரம், திருவட்டாறு, வேர்கிளம்பி, ஆற்றூர், கோதநல்லூர், குமாரபுரம், விலவூர், திருவிதாங்கோடு, ஆகிய பேரூராட்சிகளும், பேச்சிப்பாறை, சுருளகோடு, அருவிக்கரை, பாலமோர், அயக்கோடு, குமரன்குடி, ஏற்றக்கோடு, செறுகோல், முத்தலக்குறிச்சி, திக்கணங்கோடு, கண்ணனூர், காட்டாத்துறை, தென்கரை, கல்குறிச்சி, சடையமங்கலம் ஆகிய உள்ளாட்சிஅமைப்புகளும் உள்ளன.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தின் பெருமைகளை போற்றும் பத்மனாபபுரம் அரண்மனை, உதயகிரிகோட்டை பூங்கா, குமரிகுற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவி, ஆசியாவிலே உயரமான மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற சுற்றுலா தலங்களும், குமாரகோயில் வேளிமலை குமாரசுவாமி கோயில், மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தலம், மேட்டுக்கடை ஞானமாமேதை பீரப்பா தர்கா போன்ற ஆன்மீக தலங்களும் உள்ளன. இத்தொகுதியில் தனியார் கல்லூரிகள் நிறைந்துள்ளன. இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமிய மக்கள் பரவலாக வசிக்கின்றனர்.
தொகுதி மக்கள் கோரிக்கைகள்
வியாபாரிகள், ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், கட்டிடதொழிலாளர்கள், முந்திர ஆலை தொழிலாளர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்கள்பரவலாக உள்ளனர். இத்தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஏராளமுள்ளன.
சிறு கிராம பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி செய்ய சிறு பேரூந்துகளை இயக்கவேண்டும். ரப்பருக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ரப்பர்தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
40 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகளில் இத்தொகுதி மக்கள் வசிப்பதால் கல்குளம் வட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். பத்மனாபபுரம், மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன முக்கியமான கோரிக்கைகள்.
கடந்த 1971 முதல் நடந்த சட்டபேரவை தேர்தலில் திமுக 3முறையும், அதிமுக இரு முறையும், பாரதீய ஜனதா ஒரு முறையும்(1996), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒருமுறையும்(1989), ஜனதா கட்சி இரு முறையும், ஸ்தாபன காங்கிரஸ் ஒரு முறையும், சுயேட்சை ஒரு முறையும் வென்றுள்ளது. கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மனோதங்கராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,18,683 |
பெண் |
1,16,569 |
மூன்றாம் பாலினத்தவர் |
17 |
மொத்த வாக்காளர்கள் |
2,35,269 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்ற வேட்பாளர் |
கட்சி |
வாக்கு விழுக்காடு (%) |
2011 |
புஷ்பலீலா ஆல்பன் |
திமுக |
- |
2006 |
T .தியோடர் ரெஜினால்ட் |
திமுக |
53.06 |
2001 |
K.P. ராஜேந்திர பிரசாத் |
அதிமுக |
42.94 |
1996 |
C.வேலாயுதன் |
பா.ஜ.க |
31.76 |
1991 |
K.லாரன்சு |
அதிமுக |
51.85 |
1989 |
S.நூர் முகமது |
மார்க்சிய கம்யூனிச கட்சி |
27.24 |
1984 |
V.பால சந்திரன் |
சுயேச்சை |
37.77 |
1980 |
P.முகமது இஸ்மாயில் |
ஜனதா கட்சி (ஜே.பி) |
37.27 |
1977 |
A.சுவாமி தாஸ் |
ஜனதா கட்சி |
47.81 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
T. தியோடர் ரெஜினால்ட் |
தி.மு.க |
51612 |
2 |
K.P. இராஜேந்திர பிரசாத் |
அ.தி.மு.க |
20546 |
3 |
C. வேலாயுதம் |
பி.ஜே.பி |
19777 |
4 |
C. செல்வின் |
தே.மு.தி.க |
3360 |
5 |
S. தாமஸ் |
சுயேச்சை |
608 |
6 |
Y. லால் பென்சாம் |
சுயேச்சை |
564 |
7 |
V. குமாரசாமி |
பி.எஸ்.பி |
448 |
8 |
M. அண்டாணி |
சுயேச்சை |
194 |
9 |
C. முருகேசன் |
சுயேச்சை |
164 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
DR. புஷ்ப லீலா ஆல்பன் |
தி.மு.க |
59882 |
2 |
S. ஆஸ்டின் |
தேமுதிக |
40561 |
3 |
G. சுஜித்குமார் |
பாஜக |
34491 |
4 |
R.S. ஸ்ரீராமன் |
சுயேச்சை |
4029 |
5 |
M. விஜயகுமார் |
சுயேச்சை |
1803 |
6 |
C. ராபி |
சுயேச்சை |
871 |
7 |
DR. மாதேசன் |
பி.எஸ்.பி |
808 |
8 |
S. துரைரஜ் |
எ.பி.எச்.எம் |
598 |
9 |
R.R. நிஷாந்த் |
சுயேச்சை |
431 |
10 |
S. விஜயராஜ் |
சுயேச்சை |
319 |
11 |
P. ரமேஷ்பாபு |
சுயேச்சை |
283 |
12 |
C. கில்பெர்ட்ராஜ் |
சுயேச்சை |
153 |
13 |
C. சுரேஷ்குமார் |
சுயேச்சை |
133 |
144362 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT