Published : 11 Mar 2021 01:22 PM
Last Updated : 11 Mar 2021 01:22 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
பெ. மகேஷ்குமார் (பாமக) | அதிமுக |
சி.வி.எம்.பி.எழிலரசன் | திமுக |
என்.மனோகரன் | அமமுக |
கோபிநாத் | மக்கள் நீதி மய்யம் |
சா.சால்டின் | நாம் தமிழர் கட்சி |
அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தை உள்ளடக்கிய சிறப்பு பெற்றத் தொகுதி. இந்தத் தொகுதியில் நெசவாளர்கள், விவசாயிகள் அதிகம் உள்ளனர். சுற்றிலும் தொழிற் சாலை பெருக்கத்தால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் அதிகம் குடியேறியுள்ளனர்.
உத்திரமேரூர், அரக்கோணம், செய்யாறு ஆகிய சட்டமனறத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்தத் தொகுதியில் கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி ஒரு லட்சத்துக்கு 44 ஆயிரத்துக்கு 532 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்துக்கு 55 ஆயிரத்து 24 பெண் வாக்காளர்கள், 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3 லட்சத்து 569 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்தத் தொகுதி காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. பல்வேறு புகழ்பெற்ற மன்னர்கால கோயில்கள் உள்ளன. சங்கர மடம் போன்ற இந்திய அளவில் பிரச்சித்தி பெற்ற மடங்கள் உள்ளன. நெசவாளர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். தொகுதிக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் தொழிற்பேட்டைகள் வளர்ச்சி அடைந்த பிறகு இங்கு தொழிற் சாலையில் பணி செய்யும் பணியாளர்கள் பலரும் வசிக்கின்றனர்.
காஞ்சிபுரம் பட்டு இந்திய அளவில் புகழ் பெற்றது. இங்கு பட்டுச் சேலை உற்பத்திக்கென்று பல்வேறு கூட்டுறவுச் சங்கங்கள் செயல்படுகின்றன. காஞ்சிபுரம் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து பட்டுச் சேலைகளை வாங்கிச் செல்வர். பட்டுச் சேலைகள் மட்டும் அல்லாமல் காஞ்சிபுரம் அப்பளம், காஞ்சிபும் இட்லி போனறவையும் பிரசித்தி பெற்றவை. இந்தத் தொகுதியில் அதிகமாக வன்னியர்கள், முதலியார், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
காஞ்சிபுரம் வட்டம் (பகுதி) புள்ளலூர், தண்டலம், புரிசை, வளத்தூர், புள்ளம்பாக்கம், போந்தவாக்கம், மூலப்பட்டு, படுநெல்லி, கோவிந்தவாடி, ஊவேரி, புத்தேரி, மணியாச்சி, கொட்டவாக்கம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், பொடலூர், சிறுவள்ளூர், சிறுவாக்கம், வேளியூர், புதுப்பாக்கம், ஒழுக்கல்பட்டு, தைப்பாக்கம், மேல்பங்காரம், வதியூர், கூரம், பெரியகரும்பூர், விஷக்கண்டிக்குப்பம், செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரை, சீயாட்டி, பூண்டித்தாங்கல், கூத்திரம்பாக்கம், தொடுர், ஆரியம்பாக்கம், நீர்வளூர், ஆட்டுப்புத்தூர், இலுப்பப்பட்டு, வேடல், எனதூர், சித்தேரிமேடு, துலக்கத்தண்டலம், ஆரியபெரும்பாக்கம், சிறுணைபெருகல்,முட்டவாக்கம், தாமல், கிளார், திருப்புக்குழி, மேலம்பி, கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், நெட்டேரி, அச்சுக்கட்டு,கருப்படித்தட்டை, சிட்டியம்பாக்கம், சேக்காங்குளம், சிங்காடிவாக்கம், சிறுவேடல், அத்திவாக்கம், மும்மல்பட்டு, திருமால்பட்டு, ஆலப்பாக்கம், கரூர், முருக்கந்தாங்கல், ஓழையூர், களியனூர்,வையாவீர், நல்லூர், கோனேரிக்குப்பம், அரப்பணஞ்சேரி, புத்தேரி வேளிங்கப்பட்டரை, கீழ்க்கதிர்ப்பூர், மேல்கதிப்பூர், மேட்டுக்குப்பம், மேல் ஒட்டிவாக்கம், முசரவாக்கம், பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, விஷார், சடத்தாங்கள், நரப்பாக்கம், ஆளவந்தார்மேடு மற்றும் விப்பேடு கிராமங்கள்,
காஞ்சிபுரம் (நகராட்சி) நத்தப்பேட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் செவிலிமேடு (பேரூராட்சி).
தொகுதியின் பிரச்சினைகள்
பட்டு நெசவுக்காக அறிவிக்கப்பட்ட பட்டு பூங்கா அமையாதது, போக்குவரத்து நெருக்கடி, இடநெருக்கடியான பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் அமையாதது, பட்டு நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தாது ஆகியவை பிரதான பிரச்சினைகளாக உள்ளன. பிற பகுதி போலி பட்டுச் சேலைகள் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் என்று விற்கப்படுவதால் காஞ்சிபுரம் பட்டு நெசவுத் தொழில் பாதிக்கப்பட்டு நெசவாளர்கள் பெரும் இடையூறைகளை சந்திப்பதும் முக்கிய பிரச்சினையாக உள்ளது.
இந்தத் தொகுதியில் 1971-ம் ஆண்டில் இருந்து 5 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும், ஒரு முறை பாமகவும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2005-ம் ஆண்டில் இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. அதிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட சி.வி.எம்.பி.எழிலரசன் 90,533 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்தி போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு 82985 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,45,532 |
பெண் |
1,55,024 |
மூன்றாம் பாலினத்தவர் |
13 |
மொத்த வாக்காளர்கள் |
3,00,569 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
தி.மைதிலி திருநாவுக்கரசு |
அதிமுக |
2 |
சி.வி.எம்.பி.எழிலரசன் |
திமுக |
3 |
சி.ஏகாம்பரம் |
தேமுதிக |
4 |
பெ.மகேஷ்குமார் |
பாமக |
5 |
த.வாசன் |
பாஜக |
6 |
ம.உஷா |
நாம் தமிழர் |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
|
1 |
கமலாம்பாள் |
பாமக |
81366 |
|
2 |
மைதிலி |
அதிமுக |
70082 |
|
3 |
ஏகாம்பரம் |
தேமுதிக |
15187 |
|
4 |
மாரி |
சுயேச்சை |
2337 |
|
5 |
ராகவன் |
பிஜேபி |
1730 |
|
6 |
மனோகரன் |
சுயேச்சை |
566 |
|
7 |
ஐயப்பன் |
சுயேச்சை |
391 |
|
8 |
சுப்பன் |
எல் ஜே பி |
362 |
|
9 |
சங்கர் |
சுயேச்சை |
261 |
|
10 |
சண்முகம் |
சுயேச்சை |
169 |
|
11 |
V.சங்கர் |
சுயேச்சை |
149 |
|
12 |
குப்பன் |
சுயேச்சை |
123 |
|
172723 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் |
37. காஞ்சிபுரம் |
||
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
V. சோமசுந்தரம் |
அ.தி,மு.க |
102710 |
2 |
P.S. உலகரட்சகன் |
பா.ம.க |
76993 |
3 |
A.N. ராதாகிருஷ்ணன் |
எஜபிபிஎம் |
2806 |
4 |
M. பெருமாள் |
பி.ஜே.பி |
2441 |
5 |
V. வெங்கடெசநார் |
எடிஎஸ்எம்கே |
1623 |
6 |
E. ராஜா |
சுயேட்சை |
1417 |
7 |
S.M. சுப்ரமணியன் |
ஜஜேகே |
1201 |
8 |
P. கார்திகேயன் |
பி.ஸ்.பி |
899 |
9 |
M. தணிகாசலம் |
சுயேட்சை |
753 |
10 |
S. உமாபதி |
சுயேட்சை |
420 |
11 |
S. மகேஷ் |
சுயேட்சை |
352 |
12 |
T. செல்வராஜி |
சுயேட்சை |
296 |
13 |
C. சேது |
சுயேட்சை |
187 |
14 |
L. கருணாகரன் |
சுயேட்சை |
137 |
192235 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT