Published : 11 Mar 2021 01:04 PM
Last Updated : 11 Mar 2021 01:04 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
இரா. குமரகுரு | அதிமுக |
எ.ஜெ.மணிகண்ணன் | திமுக |
கே.ஜி.பி.ராஜாமணி | அமமுக |
சின்னையன் | மக்கள் நீதி மய்யம் |
லூ.புஷ்பமேரி | நாம் தமிழர் கட்சி |
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைப் பேரவைத் தொகுதியில் பல்வேறு சுவராஸ்யங்கள் உள்ளன. இத்தொகுதிக்கான பெயரில் உள்ள சுவராஸ்யம் என்னவெனில் உளுந்தூர்பேட்டையை அடுத்த நகர் நடைபெறும் சந்தையில் ஈரோட்டைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் மிளகு ஏற்றி சென்று கொண்டிருந்ததாகவும் அப்பொழுது,அங்கு வந்த முதியவர் ஒருவர், வியபாரியிடம் சென்று, தனக்கு கால் வலி இருப்பதாகவும், கொஞ்சம் உளுந்து கொடுக்குமாறு கேட்டதற்கு, வியபாரியோ, இது உளுந்து அல்ல கடுகு என்று கூறிவிட்டு, கடுகு மூட்டையை ஏற்றிக் கொண்டு நகர் சந்தைக்கு சென்று மூட்டையை பிரித்தபோது, மூட்டையில் உளுந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடந்துள்ளார். இது தெய்வ செயலாக நிகழ்ந்ததாகக் கருதி அதுமுதல் உளுந்தூர்பேட்டை என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொகுதியின் சிறப்பு
உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தென்பெண்ணை, மலட்டாறு, கோரையாறு, கெடிலம் உள்ளிட்ட 4 ஆறுகள் உள்ளதால் முழுமையாக விவசாயத்தையே நம்பி இருக்கிறது இந்த தொகுதி மேலும் பொதுப்பணி துறைக்கு சொந்தமான 85 பெரிய ஏரிகள் இருப்பதால் மழைக்காலங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.குறிப்பாக கரும்பு மற்றும் நெல் ஆகிய பயிர்கள் மட்டுமே அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது இதனால் இந்த தொகுதி முழுக்க முழுக்க விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
திருநங்கைகளின் வழிபாட்டுக்குரிய கூவாகம் கூத்தாண்டவர் கோயில் இங்கு தான் உள்ளது.
தொகுதியின் அரசியல் நிலவரம்
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ரா.குமரகுரு வசம் இருக்கும் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகள் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 கிராம ஊராட்சிகள் திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சிகள் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகள் என மொத்தம் 121 கிராம ஊராட்சிகள் உள்ளது.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் இதுவரை நடைபெற்ற 15 முறை தேர்தல்கள் நடைபெற்று உள்ளது அதில் 7 முறை பொதுத் தொகுதியாகவும், 8 முறை தனி தொகுதியாகவும் இருந்துள்ளது. அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களில் உள்ளூர் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றது இந்த தொகுதியின் சிறப்பு.உள்ளூர் வேட்பாளர்களை தவிர்த்து வெளியூரில் இருந்து வந்தது நிற்கும் எந்த வேட்பாளருக்கும் இந்த தொகுதி மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்யவில்லை.இதுவரை இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 3 முறையும்,திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும்,சுதந்திரா கட்சி ஒருமுறையும் (1962) வெற்றி பெற்றுள்ளது
உளுந்தூர்பேட்டை தொகுதியில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 12,000 மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை முடித்துவிட்டு உயர்கல்வி படிக்க செல்கின்றனர் ஆனால் உளுந்தூர்பேட்டை தொகுதியில் இதுவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி இல்லை என்ற குறைபாடு நிலவுகிறது.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,47,666 |
பெண் |
1,45,115 |
மூன்றாம் பாலினத்தவர் |
48 |
மொத்த வாக்காளர்கள் |
2,92,2829 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
ஆர்.குமரகுரு |
அதிமுக |
2 |
ஜி.ஆர்.வசந்தவேல் |
தி.மு.க |
3 |
விஜயகாந்த் |
தேமுதிக |
4 |
ஆர்.பாலு |
பாமக |
5 |
செ.தேசிங்கு |
நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு |
வெற்றிபெற்றவர் |
கட்சி |
1952 |
கந்தசாமி படையாச்சி |
இந்திய தேசிய காங்கிரஸ் |
1957 |
கந்தசாமி படையாச்சி |
இந்திய தேசிய காங்கிரஸ் |
1962 |
மனோன்மணி |
சுதந்திரா |
1967 |
கந்தசாமி படையாச்சி |
இந்திய தேசிய காங்கிரஸ் |
1971 |
சுப்பிரமணியம் |
திமுக |
1977 |
துலுக்கானம் |
திமுக |
1980 |
ரங்கசாமி |
திமுக |
1984 |
ஆனந்தன் |
அதிமுக |
1989 |
அங்கமுத்து |
திமுக |
1991 |
ஆனந்தன் |
அதிமுக |
1996 |
மணி |
திமுக |
2001 |
ராமு |
அதிமுக |
2006 |
திருநாவுக்கரசு |
திமுக |
2011 |
ரா.குமரகுரு |
அதிமுக |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
K. திருநாவுக்கரசு |
தி.மு.க |
65662 |
2 |
E.விஜயாராகவன் |
வி.சி.கே |
46878 |
3 |
C. சண்முகம் |
தே.மு.தி.க |
30411 |
4 |
V. ராமலிங்கம் |
பி.ஜே.பி |
3099 |
5 |
A. கண்ணன் |
சுயேச்சை |
3011 |
149061 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
R. குமரகுரு |
அ.தி.மு.க |
114794 |
2 |
M. முகமது யூசுப் |
வி.சி.கே |
61286 |
3 |
N. சந்திரசேகரன் |
சுயேச்சை |
3642 |
4 |
A. அன்பு |
பி.ஜே.பி |
2662 |
5 |
L. ஜகதிசன் |
சுயேச்சை |
1811 |
6 |
M. வெங்கடேசன் |
சி.பி.ஐ |
1751 |
7 |
G. முத்தையன் |
சுயேச்சை |
1743 |
8 |
M. ஜான் பீட்டர் |
சுயேச்சை |
1576 |
9 |
K. அரசன் |
சுயேச்சை |
1018 |
10 |
M. தேவர் |
சுயேச்சை |
764 |
191047 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT