Published : 11 Mar 2021 12:51 PM
Last Updated : 11 Mar 2021 12:51 PM

106 - கோபிச்செட்டிப்பாளையம்

கொடிவேரி அணை

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
செங்கோட்டையன் அதிமுக
ஜி.வி.மணிமாறன் திமுக
என்.கே.துளசிமணி அமமுக
என்.கே.பிரகாஷ் மக்கள் நீதி மய்யம்
மா.கி.சீதாலட்சுமி நாம் தமிழர் கட்சி

கோபி நகராட்சி, பெரியகொடிவேரி, லக்கம்பட்டி, காசிபாளையம், எலத்தூர், கொளப்பலூர், நம்பியூர் போன்ற பேரூராட்சிகள், 45க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை கொண்டது கோபி தொகுதி. கொடிவேரி அணை, வயல்வெளிகள், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் என இயற்கை செழிப்போடு கோபி தொகுதி விளங்குகிறது.

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, கீழ்பவானி வாய்கால் பாசன வாய்க்காலின் மூலம் தொகுதியின் பெரும்பாலான விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. நெல், கரும்பு என பணப்பயிர்களை விளைவதால், கோபி தொகுதி வளமான தொகுதியாகவே இருந்து வருகிறது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

கோபிசெட்டிபாளையம் (நகராட்சி)

எலத்தூர் (பேரூராட்சி)

கொளப்பலூர் (பேரூராட்சி)

நம்பியூர் (பேரூராட்சி)

பெரியகொடிவேரி (பேரூராட்சி)

லக்கம்பட்டி (பேரூராட்சி)

காசிபாளையம் (ஜி) (பேரூராட்சி)

சத்தியமங்கலம் வட்டம் (பகுதி) - கரப்பாடி, கவிலிபாளையம், வரப்பாளையம், மற்றும் செல்லப்பம்பாளையம் கிராமங்கள்

கோபிசெட்டிபாளையம் வட்டம்(பகுதி) - புள்ளப்பநாய்க்கன்பாளையம், அரக்கன்கோட்டை கிராமம், கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், அக்கரைகொடிவேரி, சிங்கிரிபாளையம், அளுக்குனி, கலிங்கியம், கோட்டுப்புள்ளாம்பாளையம், கரட்டுப்பாளையம், ஒடையாகவுண்டன்பாளையம், கடத்தூர், சுண்டக்காம்பாளையம், கூடக்கரை, ஆண்டிபாளையம், குருமந்தூர், அயலூர், வெள்ளாங்கோவில், சிறுவலூர், தழ்குனி, கோசனம், இருகலூர், அஞ்சனூர், லக்கம்பாளையம், வேம்மாண்டாம்பாளையம், பொலவபாளையம், மொட்டணம், எம்மாம்பூண்டி, ஒழலக்கோயில், காடசெல்லிபாளையம், சின்னாரிபாளையம், சாந்திபாளையம், அவலம்பாளையம் பாரியூர், வெள்ளாளபாளையம், நஞ்சை கோபி, குள்ளம்பாளையம் நதிபாளையம், மொடச்சூர், நாகதேவன்பாளையம் மற்றும் நிச்சாம்பாளையம் கிராமங்கள்.

தொகுதி பிரச்சினைகள்

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிலுவைத் தொகையை வழங்காதது, வட்டச்சாலைக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திட்டம், பெருந்துறைத் தொகுதிக்கு விவசாயிகளின் எதிர்ப்பை மீறி கொடிவேரி அணையின் மேல் பகுதியில் இருந்து நீர் எடுப்பது என விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளன. கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தினர் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ளனர்.

கோபி சட்டமன்ற தொகுதி தொடர்ந்து அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 1980-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டுவரை நடந்த நான்கு சட்டமன்ற தேர்தல்களிலும் அதிமுகவின் முன்னணி பிரமுகராக விளங்கும் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து தேர்வு பெற்றார்.

அதன்பின் 1996-ம் ஆண்டு மட்டும் கோபி தொகுதி திமுக வசம் சென்றது. அதன்பின் 2001, 2006, 2011 சட்டமன்ற தேர்தல்களிலும் செங்கோட்டையனே வெற்றி பெற்றார். இதன் தொடர்ச்சியாக கடந்த தேர்தலிலும் செங்கோட்டையன் வெற்றி பெற்றதன் மூலம் எட்டாவது முறையாக கோபி எம்.எல்.ஏ. பதவியை பெற்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின், பழனிசாமி முதல்வர் பதவி ஏற்றதும் செங்கோட்டையனுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக

2

எஸ்.வி.சரவணன்

காங்கிரஸ்

3

எம். முனுசாமி

மார்க்சிஸ்ட்

4

பி. குப்புசாமி

பாமக

5

கே.கணபதி

கொங்குநாடு ஜனநாயக கட்சி - பாஜக

6.

எஸ்.கவுரீசன்

நாம் தமிழர்

7

என்.எஸ்.சிவராஜ்

கொமதேக

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,18,604

பெண்

1,24,037

மூன்றாம் பாலினத்தவர்

6

மொத்த வாக்காளர்கள்

2,42,647

சட்டமன்ற தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1952

நல்லா கவுண்டர்

காங்கிரஸ்

21045

1957

பி. ஜி. கருப்பண்ணன்

காங்கிரஸ்

27889

1962

முத்துவேலப்ப கவுண்டர்

காங்கிரஸ்

31977

1967

கே. எம். ஆர். கவுண்டர்

சுதந்திரா

31974

1971

ச. மு. பழனியப்பன்

திமுக

35184

1977

என். கே. கே. இராமசாமி

அதிமுக

25660

1980

கே. ஏ. செங்கோட்டையன்

அதிமுக

44703

1984

கே. ஏ. செங்கோட்டையன்

அதிமுக

56884

1989

கே. ஏ. செங்கோட்டையன்

அதிமுக (ஜெ)

37187

1991

கே. ஏ. செங்கோட்டையன்

அதிமுக

66423

1996

ஜி. பி. வெங்கிடு

திமுக

59983

2001

ச. ச. இரமணீதரன்

அதிமுக

60826

2006

கே. ஏ. செங்கோட்டையன்

அதிமுக

55181

2011

கே. ஏ. செங்கோட்டையன்

அதிமுக

94872

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1952

பி. கே. நல்ல கவுண்டர்

சுயேச்சை

20321

1957

மாரப்பன்

இந்திய பொதுவுடமைக் கட்சி

11126

1962

சுந்தரமூர்த்தி

சுதந்திரா

17249

1967

மு. கவுண்டர்

காங்கிரஸ்

27403

1971

கே. எம். சுந்தரமூர்த்தி

சுதந்திரா

20623

1977

என். ஆர். திருவேங்கடம்

காங்கிரஸ்

19248

1980

கே. எம். சுப்ரமணியம்

காங்கிரஸ்

29690

1984

எம். ஆண்டமுத்து

திமுக

31879

1989

டி. கீதா

ஜனதா

22943

1991

வி. பி. சண்முக சுந்தரம்

திமுக

27211

1996

கே. எ. செங்கோட்டையன்

அதிமுக

45254

2001

வி. பி. சண்முக சுந்தரம்

திமுக

31881

2006

ஜி. வி. மணிமாறன்

திமுக

51162

2011

சி.என்.சிவராஜ்

கொமுக

52960

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K.A. செங்கோட்டையன்

அ.தி.மு.க

55181

2

G.V. மணிமாறன்

தி.மு.க

51162

3

G.S. நடராஜன்

தே.மு.தி.க

10875

4

R. ரங்கசாமி

சுயேச்சை

1518

5

R. வெள்ளியங்கிரி

பி.ஜே.பி

1399

6

T. பெரியசாமி

பி.எஸ்.பி

903

7

மினியன்

சுயேச்சை

478

121516

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K.A. செங்கோட்டையன்

அ.தி.மு.க

94872

2

N.S. சிவராஜ்

கே.என்.எம்.கே

52960

3

C.S. வெங்கடாசலம்

சுயேச்சை

10095

4

N. சென்னையன்

பி.ஜே.பி

3408

5

R. ரவிசேகரன்

சுயேச்சை

2349

6

K. மோகன்ராஜ்

சுயேச்சை

2122

7

G.S. கண்ணப்பன்

பி.எஸ்.பி

2009

8

P. அன்பழகன்

சுயேச்சை

1085

9

N. சிவகுமார்

யு.எம்.கே

1072

10

A. மூர்த்தி

சுயேச்சை

766

11

K. செங்கோட்டையன்

சுயேச்சை

764

12

M. ஜெயராமன்

ஐ.ஜே.கே

756

13

M. மாரிமுத்து

சுயேச்சை

709

14

V. குமார்

சுயேச்சை

631

15

S. அன்னக்கொடி

சுயேச்சை

586

174184

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x