Published : 11 Mar 2021 01:56 PM
Last Updated : 11 Mar 2021 01:56 PM

131 - நத்தம்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
நத்தம் விசுவநாதன் அதிமுக
எம்.எ.ஆண்டி அம்பலம் திமுக
ஏ.என்.ராஜா அமமுக
சரண்ராஜ் மக்கள் நீதி மய்யம்
பா.வெ.சிவசங்கரன் நாம் தமிழர் கட்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டசபை தொகுதியில் நத்தம் பேரூராட்சி, நத்தம் ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சிகள், சாணார்பட்டி ஒன்றியத்தில் 21, திண்டுக்கல் ஒன்றியத்தில் 4 கிராம ஊராட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

கரந்தமலை, சிறுமலை என மலைகள் சூழ்ந்த பகுதியாக நத்தம் தொகுதி உள்ளதால் எப்பொழுதும் பசுமையாக காணப்படும். மா, புளிய மரங்கள் அதிகம் உள்ளது. இவை ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு கணிசமான வருவாயை கொடுக்கிறது. காய்கறிகள் பயிரிடுவது முதல் அனைத்து விவசாயங்களும் செய்யப்படுகிறது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகவும் நத்தம் தொகுதி உள்ளது. நத்தம் பேரூராட்சியை தவிர அனைத்தும் சிறிய கிராமங்கள்.

தொகுதி பிரச்சினைகள்

மலைகிராமங்களுக்கு சாலை வசதி கோரி பல ஆண்டுகளாக மக்கள் போராடிவருகின்றனர். லிங்காவடி மலையூர் மலை கிராமத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துமவனைக்கு கொண்டு செல்ல டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லும் அவலம் இன்றும் நீடிக்கிறது.

மாம்பழம் அதிக விளைச்சல் உள்ளதால் கூடுதலாக மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை மா விவசாயிகளிடம் உள்ளது. நத்தம் தொகுதியில் உள்ள சந்தனவர்த்தினி ஆறு மணல் திருட்டால் உருக்குலைந்து போய் உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் கிணறுகள் மூலம் தண்ணீர் இறைத்து விவசாயம் செய்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமலையில் இருந்து வரும் தண்ணீரை தடுக்க சந்தனவர்த்தினி ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என்ற கோரி்க்கையும் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.

கிராமங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது உயர்கல்வி படிக்க ஒரு அரசு கலைக்கல்லூரி அமைக்கவேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. நத்தம் தொகுதியில் 1977 ம் ஆண்டு முதல் நடைபெற்ற 11 தேர்தலில் (1999 இடைத்தேர்தல்) காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.ஆண்டிஅம்பலம் தொடர்ந்து ஆறு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். இவர் இறந்தபிறகு 1999 இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நத்தம் ஆர்.விசுவநாதன் போட்டியிட்டு வெற்றிபெற்றதை தொடர்ந்து 4 முறை வெற்றிபெற்றார். நத்தம் ஆர்.விசுவநாதன் தொகுதி மாறியதால், 2016 தேர்தலில் முதன்முறையாக இந்த தொகுதியில் திமுக வெற்றிபெற்றது. திமுக வை சேர்ந்த எம்.ஏ.,ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ., வாக தேர்வு செய்யப்பட்டார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

13,41,67

பெண்

13,99,34

மூன்றாம் பாலினத்தவர்

44

மொத்த வாக்காளர்கள்

27,41,45

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

எஸ்.ஷாஜகான்

அதிமுக

2

ஆ.ஆண்டிஅம்பலம்

திமுக

3

ஜி.கார்த்திகேயன்

தேமுதிக

4

கே.சீரங்கன்

பாமக

5

எம்.சந்தானகிருஷ்ணன்

ஐஜேகே

6

வெ.சிவசங்கரன்

நாம் தமிழர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2006 சட்டமன்ற தேர்தல்

131. நத்தம்

வ எண்

பெயர்

கட்சி

வாக்குகள்

1

R. விஸ்வநாதன்

அ.தி.மு.க

62292

2

M.A. ஆண்டிஅம்பலம்

தி.மு.க

58532

3

V. கணேசன்

தே.மு.தி.க

7754

4

P. வேதிகரன்

சுயேச்சை

1762

5

A. சரவணன்

பி.ஜே.பி

1038

6

A. முருகேசன்

பி.எஸ்.பி

711

7

A. அண்ணாமலை

சுயேச்சை

432

8

M. தாமோதரன்

எல்.ஜே.பி

428

9

S. ஷேக் முகமது தாஜுதின்

சுயேச்சை

374

10

C. சந்திரன்

சுயேச்சை

291

2011 சட்டமன்ற தேர்தல்

131. நத்தம்

வ எண்

பெயர்

கட்சி

வாக்குகள்

1

R. விஸ்வநாதன்

அ.தி.மு.க

94947

2

K. விஜயன்

தி.மு.க

41858

3

M.A. ஆண்டிஅம்பலம்

சுயேச்சை

29834

4

K. துரை

சுயேச்சை

1870

5

G. வெங்கடேசன்

சுயேச்சை

1038

6

C. குட்டியான்

பி.ஜே.பி

980

7

R. ஜெயச்சந்திரன்

சுயேச்சை

834

8

M. முகமது மீரான்

சுயேச்சை

735

9

M. பாக்கியராஜ்

பி.எஸ்.பி

644

10

A. பஞ்சவர்ணம்

சுயேச்சை

587

11

C. அருள் செல்வன்

சுயேச்சை

483

12

P. அழகன்

சுயேச்சை

439

13

S. சுப்பிரமணி

சுயேச்சை

332

14

S. ஆனந்தன்

சுயேச்சை

313

15

S. தமிழ்செல்வி

சுயேச்சை

257

16

S. ஷேக் முகமது தாஜுதின்

சுயேச்சை

255

17

C.K. முருகேசன்

சுயேச்சை

246

18

K. வள்ளிநாதன்

சுயேச்சை

212

19

T. சக்திவேல்

சுயேச்சை

206

20

P. மணிகண்டன்

சுயேச்சை

181

176251

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x