Published : 11 Mar 2021 01:56 PM
Last Updated : 11 Mar 2021 01:56 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
திலக பாமா (பாமக) | அதிமுக |
பெரியசாமி | திமுக |
பி.செல்வகுமார் | அமமுக |
ஏ.பி.சிவா | மக்கள் நீதி மய்யம் |
அ.சைமன் ஜஸ்டின் | நாம் தமிழர் கட்சி |
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் சின்னாளபட்டி, அகரம், தாடிக்கொம்பு, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை ஆகிய ஏழு பேரூராட்சிகளும், ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களுக்குட்பட்ட 48 ஊராட்சிகளும் உள்ளன.
கொடைக்கானல் கீழ்மலை அடிவாரத்தில் பல கிராமங்கள் அமைந்துள்ளதால் தென்னை, நெல் விவசாயம் அதிகளவில் உள்ளது. தொகுதியிலுள்ள மக்கள் அதிகளவில் விவசாயிகளாகவும், விவசாய கூலிகளாகவும் உள்ளனர்.
வேலைவாய்ப்புக்களை அதிகம் வழங்கும் வகையில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. எனவே இப்பகுதி மக்கள் விவசாயம் சாராத பிற தொழில்களுக்கு திண்டுக்கல்லை சார்ந்தே உள்ளனர். தொகுதியில் தொழிற்சாலைகள் அமைத்து நிரந்தரமாக இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதி வறண்டு காணப்பட்டு, கோடைகாலத்தில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஒவ்வொரு ஆண்டும் உள்ளது. இதைபோக்க காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டநிலையில் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சின்னாளபட்டியில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள், காட்டன் சேலைகளுக்கு வடமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிக மவுசு உண்டு. இதனால் நெசவுத்தொழிலை மேம்படுத்த சின்னாளபட்டி பகுதியில் நெசவுப்பூங்கா அமைக்கவேண்டும் என்பது நெசவுத்தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. கிராமப்புறங்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்திற்காக ஒரு கலைக்கல்லூரி அமைக்கவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கனவு.
1977 முதல் நடைபெற்ற 10 தேர்தல்களில் அதிமுக ஐந்து முறையும், திமுக ஐந்து முறையும் வெற்றிபெற்றுள்ளது. தற்போது எம்.எல்.ஏ.,வாக திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி உள்ளார். கடந்த 2016 தேர்தலில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த நத்தம் ஆர்.விசுவநாதனை தோற்கடித்து ஐந்தாவது முறையாக எம்.எல்.ஏ., ஆனார் ஐ.பெரியசாமி..
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
13,59,77 |
பெண் |
14,59,81 |
மூன்றாம் பாலினத்தவர் |
22 |
மொத்த வாக்காளர்கள் |
28,19,80 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
நத்தம் இரா.விசுவநாதன் |
அதிமுக |
2 |
இ.பெரியசாமி |
திமுக |
3 |
எம். பாக்கியம்செல்வராஜ் |
தேமுதிக |
4 |
இ. நிர்மலாஞானசவுந்தரி |
பாமக |
5 |
எஸ்.டி.இளஞ்செழியன் |
பாஜக |
6 |
ஆர்.மரியகுணசேகரன் |
நாம் தமிழர் |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2006 சட்டமன்ற தேர்தல் |
129. ஆத்தூர் |
||
வ எண் |
பெயர் |
கட்சி |
வாக்குகள் |
1 |
I. பெரியசாமி |
தி.மு.க |
76308 |
2 |
C. சீனிவாசன் |
அ.தி.மு.க |
49747 |
3 |
P. ராஜேஷ் பெருமாள் |
தே.மு.தி.க |
11485 |
4 |
D. முத்துராமலிங்கம் |
பி.ஜே.பி |
1794 |
5 |
S. முருகானந்தம் |
சுயேச்சை |
1086 |
6 |
P. சரவணகுமார் |
பி.எஸ்.பி |
1012 |
7 |
C. புதுமை |
சுயேச்சை |
603 |
8 |
S. போத்திராஜ் |
சுயேட்சை |
484 |
9 |
C. பாலுசாமி |
சுயேச்சை |
275 |
10 |
A. சண்முகம் |
சுயேச்சை |
227 |
11 |
S. சிவகுமார் |
சுயேச்சை |
207 |
12 |
K.S. சவுபார் நவாஹி |
சுயேச்சை |
204 |
143432 |
2011 சட்டமன்ற தேர்தல் |
129. ஆத்தூர் |
||
வ எண் |
பெயர் |
கட்சி |
வாக்குகள் |
1 |
I. பெரியசாமி |
தி.மு.க |
112751 |
2 |
S. பாலசுப்பிரமணி |
தே.மு.தி.க |
58819 |
3 |
S. பாலசுப்பிரமணி |
சுயேச்சை |
6685 |
4 |
T. ராஜா |
சுயேச்சை |
3207 |
5 |
J. பரணிதரன் |
பி.ஜே.பி |
2233 |
6 |
K. ராமாமூர்த்தி |
சுயேச்சை |
1384 |
7 |
B. ராஜா |
பி.எஸ்.பி |
1191 |
8 |
M. இளஞ்செழியன் |
ஐ.ஜே.கே |
799 |
9 |
K. பழனிசாமி |
சுயேச்சை |
591 |
10 |
M. முருகானந்தம் |
சுயேச்சை |
581 |
11 |
R. அழகு பாண்டியன் |
சுயேச்சை |
501 |
12 |
C. பிரபாகர் |
சுயேச்சை |
308 |
13 |
J.L. சங்கர் |
சுயேச்சை |
195 |
189245 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT