Published : 11 Mar 2021 01:54 PM
Last Updated : 11 Mar 2021 01:54 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
ஜிகே மணி (பாமக) | அதிமுக |
பி.என்.பி.இன்பசேகரன் | திமுக |
ஆர்.உதயகுமார் | அமமுக |
கே. ஷகிலா | மக்கள் நீதி மய்யம் |
இரா.தமிழழகன் | நாம் தமிழர் கட்சி |
தமிழகத்தின் பிரபல சுற்றுலா தலமான ஒகேனக்கல்லை உள்ளடக்கிய தொகுதி பென்னாகரம். இந்தத் தொகுதியின் எம்எல்ஏ-வாக திமுக-வைச் சேர்ந்த இன்பசேகரன் உள்ளார். 2016 சட்டப் பேரவை தேர்தலில் பாமக தமிழகம் முழுக்க தனித்து போட்டியிட்டபோது முதல்வர் கனவுடன் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த தொகுதியில் வன்னியர், இதர பிற்படுத்தப்பட்ட பல்வேறு சமூக மக்கள் உள்ளிட்டோர் அதிகம் வசிக்கின்றனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
தொகுதியில் பென்னாகரம், பாப்பாரப்பட்டி ஆகிய 2 பேரூராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, தாசம்பட்டி, வட்டுவமன அள்ளி, செட்டிஅள்ளி, பி.கொல்ல அள்ளி, புலிகரை, செல்லியம்பட்டி, செக்கோடி, காளப்பன அள்ளி, குத்தால அள்ளி, பத்தல அள்ளி, பூமாண்ட அள்ளி, இண்டூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, ஏரியூர், நாகமரை உட்பட பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களும் இடம்பெற்றுள்ளன.
தொகுதியின் பிரச்சினைகள்:
ஒகேனக்கல் தரம் உயர்த்தப்படாத, போதிய பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத, சுகாதாரத்தில் பின் தங்கிய சுற்றுலா தலமாகவே இருந்து வருகிறது. அதிக வெள்ளப்பெருக்கு காலங்களில் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதால் சுற்றுலா தலத்தை நம்பி வாழும் பல நூறு குடும்பங்கள் வருமானம் பாதித்து சிரமப்படுவது ஆண்டுதோறும் தொடர்கிறது.
ஏரியூர் அடுத்த நாகமரை பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் அமைத்தால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பாலக்கோடு-பென்னாகரம்-ஏரியூர்-மேட்டூர் வழியாக ஈரோடு, கோவை மாவட்டங்களுக்கும், கேரளா மாநிலத்துக்கும் செல்லும் போக்குவரத்தின் பயண தூரம் கணிசமாக குறையும். இதன்மூலம் சாலையோரம் அமைந்துள்ள கிராமங்களும் வளர்ச்சி அடையும். இந்த கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டம் மூலம் தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு வழங்கி எளிதில் வறட்சிக்கு இலக்காகும் பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளை செழிப்பாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து நிலுவையில் உள்ளது. உள்ளூரில் போதிய வேலை வாய்ப்பின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி இடம்பெயருவோர் இந்த தொகுதியில் அதிகம்.
கட்சிகளின் வெற்றி:
இந்த தொகுதியில் 1951-ம் ஆண்டு முதல் தற்போது வரை திமுக 5 முறையும், காங்கிரஸ், 3 முறையும், அதிமுக மற்றும் பாமக தலா 2 முறையும், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 1 முறையும், ஜனதா கட்சி 1 முறையும், இந்திய பொதுவுடமை கட்சி 1 முறையும், சுயேட்சை 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,24,888 |
பெண் |
1,15,752 |
மூன்றாம் பாலினத்தவர் |
7 |
மொத்த வாக்காளர்கள் |
2,40,647 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
கே.பி.முனுசாமி |
அதிமுக |
2 |
பி.என்.பி.இன்பசேகரன் |
திமுக |
3 |
என்.நஞ்சப்பன் |
இந்திய கம்யூனிஸ்ட் |
4 |
ஆர்.அன்புமணி |
பாமக |
5 |
ஜி.சிவகுமார் |
நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1951 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
1951 |
எஸ். கந்தசாமி கவுண்டர் |
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி |
8050 |
29.32 |
1957 |
ஹேமலதா தேவி |
காங்கிரஸ் |
8791 |
31.59 |
1962 |
எம். வி. காரிவேங்கடம் |
திமுக |
26911 |
53.86 |
1967 |
பி. கே. சி. முத்துசாமி |
காங்கிரஸ் |
27913 |
49.2 |
1971 |
என். மாணிக்கம் |
திமுக |
33298 |
52.36 |
1977 |
கே. அப்புனு கவுண்டர் |
ஜனதா கட்சி |
17591 |
32.13 |
1980 |
பி. தீர்த்த ராமன் |
காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் |
34590 |
52.74 |
1984 |
எச். ஜி. ஆறுமுகம் |
அதிமுக |
44616 |
54.98 |
1989 |
என். நஞ்சப்பன் |
சுயேச்சை |
15498 |
21.09 |
1991 |
வி. புருசோத்தமன் |
அதிமுக |
49585 |
51.79 |
1996 |
ஜி. கே. மணி |
பாமக |
34906 |
31.63 |
2001 |
ஜி. கே. மணி |
பாமக |
49125 |
44.08 |
2006 |
பி. என். பெரியண்ணன் |
திமுக |
74109 |
--- |
2010 |
பி. என். பி. இன்பசேகரன் |
திமுக |
--- |
|
2011 |
என். நஞ்சப்பன் |
இ பொ க |
--- |
ஆண்டு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
1951 |
எம். என். இராஜா செட்டியார் |
சுயேச்சை |
6870 |
25.02 |
1957 |
டி. கே. குருநாத செட்டியார் |
சுயேச்சை |
5536 |
19.89 |
1962 |
எஸ். ஹேமலதா தேவி |
காங்கிரஸ் |
17303 |
34.63 |
1967 |
என். மாணிக்கம் |
திமுக |
26570 |
46.84 |
1971 |
பி. கே. சி. முத்துசாமி |
காங்கிரஸ் (ஸ்தாபன) |
30291 |
47.64 |
1977 |
கிருஷ்ணன் |
அதிமுக |
16932 |
30.92 |
1980 |
கே. மருமுத்து |
திமுக |
27481 |
41.9 |
1984 |
என். நஞ்சப்பன் |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
25518 |
31.45 |
1989 |
பி. சீனிவாசன் |
அதிமுக(ஜெ) |
14555 |
19.81 |
1991 |
என். எம். சுப்ரமணியம் |
பாமக |
30757 |
32.12 |
1996 |
எம். ஆறுமுகம் |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
34500 |
31.26 |
2001 |
கே. என். பெரியண்ணன் |
சுயேச்சை |
34729 |
31.16 |
2006 |
எஸ். ஆர். வெற்றிவேல் |
அதிமுக |
47177 |
--- |
2010 |
அதிமுக |
--- |
||
2011 |
- |
2006 சட்டமன்ற தேர்தல் |
58. பென்னாகரம் |
||
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
P.N. பெரியண்ணன் |
தி.மு.க |
74109 |
2 |
S.R. வெற்றிவேல் |
அ.தி.மு.க |
47177 |
3 |
P. தண்டபானி |
தே.மு.தி.க |
10567 |
4 |
V. முத்துலட்சுமி |
சுயேச்சை |
9871 |
5 |
M. பாலமுருகன் |
சுயேட்சை |
1738 |
6 |
E. பெரியண்ணன் |
சுயேச்சை |
1269 |
7 |
K. முருகன் |
சுயேட்சை |
1010 |
8 |
P. கந்தசாமி |
பி.ஜே.பி |
933 |
9 |
R. பாலு |
சுயேச்சை |
717 |
10 |
M. சேகர் |
பி.எஸ்.பி |
472 |
11 |
M. சுகுமார் |
சுயேச்சை |
451 |
12 |
A. உதயசங்கர் |
சுயேச்சை |
421 |
13 |
R. மாணிக்கம் |
எஸ்.பி |
406 |
14 |
T. பழனி |
சுயேச்சை |
344 |
15 |
P. சின்னசாமி |
சுயேச்சை |
231 |
16 |
ஆண்டி |
சுயேச்சை |
216 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் |
58. பென்னாகரம் |
||
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
N. நஞ்சப்பன் |
சி.பி.ஐ |
80028 |
2 |
P.N.P. இன்பசேகரன் |
தி.மு.க |
68485 |
3 |
M. முனுசாமி |
சுயேட்சை |
3047 |
4 |
K.P. கந்தசாமி |
பி.ஜே.பி |
2660 |
5 |
R. சண்முகம் |
சுயேட்சை |
1546 |
6 |
M. வெங்கடேசன் |
பி.எஸ்.பி |
1478 |
7 |
P. முனியப்பன் |
சுயேச்சை |
1208 |
8 |
K.K. சாமிகண்ணு |
சுயேச்சை |
853 |
9 |
A. முனிராஜ் |
சுயேச்சை |
685 |
10 |
P. பாலசுப்பிரமணியன் |
சுயேச்சை |
675 |
11 |
C. இளவரசன் |
சுயேச்சை |
650 |
12 |
K. பன்னீர்செல்வம் |
சுயேச்சை |
502 |
13 |
R. கமலாநாதன் |
சுயேச்சை |
471 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT