Published : 11 Mar 2021 01:55 PM
Last Updated : 11 Mar 2021 01:55 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
எஸ் பி வெங்கடேஸ்வரன் (பாமக) | அதிமுக |
தடங்கம் பெ. சுப்பிரமணி | திமுக |
டி.கே.ராஜேந்திரன் | அமமுக |
எஸ்.கே. ஜெய வெங்கடேஷ் | மக்கள் நீதி மய்யம் |
அ.செந்தில் குமார் | நாம் தமிழர் கட்சி |
தருமபுரி மாவட்ட தலைநகரத்தை உள்ளடக்கிய தொகுதி இது. இந்திய வட மாநிலங்களை தமிழக மாவட்டங்களுடனும், கேரளாவுடனும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை தருமபுரி வழியாக அமைந்துள்ளது. அதேபோல, தமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களை கர்நாடகா மாநிலம் பெங்களூருவுடன் இணைக்கும் ரயில் பாதையும் தருமபுரி வழியாகவே செல்கிறது. இந்த தொகுதியில் தற்போது திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளரான தடங்கம் சுப்பிரமணி எம் எல் ஏ-வாக உள்ளார். இந்த தொகுதியில் வன்னியருக்கு அடுத்தபடியாக பல்வேறு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், பட்டியல் இனத்தவர்களும், இசுலாமியர், கிறித்தவர்களும் அதிகம் வசிக்கின்றனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
தருமபுரி தொகுதியில் தருமபுரி நகராட்சி இடம்பெற்றுள்ளது. இதுதவிர, அன்னசாகரம், கடகத்தூர், அதகபாடி, பாலவாடி, எச்சன அள்ளி, பங்குநத்தம், நாகர்கூடல், பாலஜங்கமன அள்ளி, ஏலகிரி, நெக்குந்தி, தடங்கம், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, லளிகம், சிவாடி, மானியத அள்ளி, தொப்பூர், டி.காணிகார அள்ளி, கம்மம்பட்டி என தருமபுரி, நல்லம்பள்ளி வட்டங்களில் உள்ள கிராமங்களும் இடம்பெற்றுள்ளன.
தொகுதியின் பிரச்சினைகள்:
மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் இந்த தொகுதியில் அமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதும் நீண்ட காலமாகவே இந்த திட்டம் நிலுவையில் இருந்து வருகிறது. அதேபோல, தொப்பூர் கணவாய் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளும், உயிர்ச் சேதங்களும் தொடர்ந்து வருகிறது. இப்பகுதி சாலையை விபத்தில்லாத வகையில் மறுசீரமைப்பு செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கையும் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. மலர் சாகுபடி விவசாயிகள் பலரும் மலர்களில் இருந்து வாசனை திரவியம் பிரித்தெடுக்கும் ஆலை ஒன்றை தொப்பூர் பகுதியில் அமைக்க வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல, சேலம் மாவட்டம் ஓமலூர் முதல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வரையிலான ரயில் வழித் தடத்தை இருவழிப் பாதையாக விரிவுபடுத்தி ரயில் பயண நேரத்தை குறைப்பதுடன், கூடுதல் ரயில்களையும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து ஒலித்து வருகிறது.
கட்சிகளின் வெற்றி விவரம்:
தருமபுரி தொகுதியில் திமுக 6 முறையும், காங்கிரஸ், பாமக, சுயேட்சை ஆகிய கட்சிகள் தலா 2 முறையும், ஜனதா கட்சி, அதிமுக, தேமுதிக ஆகியவை தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
2020- வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,32,658 |
பெண் |
1,29,607 |
மூன்றாம் பாலினத்தவர் |
101 |
மொத்த வாக்காளர்கள் |
2,63,66 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
பி.டி.இளங்கோவன் |
அதிமுக |
2 |
தடங்கம் பி.சுப்பிரமணி |
திமுக |
3 |
வி.இளங்கோவன் |
தேமுதிக |
4 |
எம்.ஆறுமுகம் |
பாஜக |
6 |
ஆர்.ருக்மணிதேவி |
நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1951 – 2006 )
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
1951 |
பி. ஆர். இராஜகோபால கவுண்டர் |
சுயேச்சை |
7262 |
25.65 |
1957 |
எம். கந்தசாமி கண்டர் |
காங்கிரஸ் |
11661 |
35.19 |
1962 |
ஆர். எஸ். வீரப்ப செட்டியார் |
சுயேச்சை |
24191 |
40.81 |
1967 |
எம். எஸ். கவுண்டர் |
திமுக |
36258 |
53.02 |
1971 |
ஆர். சின்னசாமி |
திமுக |
39861 |
54.16 |
1977 |
பி. கே. சி. முத்துசாமி |
ஜனதா கட்சி |
26742 |
42.3 |
1980 |
எஸ். அரங்கநாதன் |
அதிமுக |
33977 |
46.12 |
1984 |
ஆர். சின்னசாமி |
திமுக |
46383 |
54.21 |
1989 |
ஆர். சின்னசாமி |
திமுக |
32794 |
45.62 |
1991 |
பி. பொன்னுசாமி |
காங்கிரஸ் |
53910 |
51.11 |
1996 |
கே. மனோகரன் |
திமுக |
63973 |
55.28 |
2001 |
கே. பாரி மோகன் |
பாமக |
56147 |
46.65 |
2006 |
எல். வேலுசாமி |
பாமக |
76195 |
--- |
ஆண்டு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
1951 |
ஆர். எஸ். வீரப்ப செட்டியார் |
சுயேச்சை |
6984 |
25.63 |
1957 |
ஆர். எஸ். வீரப்ப செட்டி |
சுயேச்சை |
11459 |
34.58 |
1962 |
எம். சுப்ரமணிய கவுண்டர் |
திமுக |
18754 |
31.64 |
1967 |
டி. என். வடிவேல் |
காங்கிரஸ் |
29567 |
43.23 |
1971 |
டி. என். வடிவேல் |
காங்கிரசு (ஸ்தாபன) |
27834 |
37.82 |
1977 |
டி. எஸ். சண்முகம் |
அதிமுக |
21556 |
34.1 |
1980 |
டி. என். வடிவேல் |
காங்கிரஸ் |
32472 |
44.08 |
1984 |
எஸ். அரங்கநாதன் |
அதிமுக |
37929 |
44.33 |
1989 |
பி. பொன்னுசாமி |
காங்கிரஸ் |
20243 |
28.16 |
1991 |
ஆர். சின்னசாமி |
திமுக |
27017 |
25.61 |
1996 |
அரூர் மாசி |
காங்கிரஸ் |
26951 |
23.29 |
2001 |
கே. மனோகரன் |
திமுக |
45173 |
37.54 |
2006 |
வி. எஸ். சம்பத் |
மதிமுக |
45988 |
--- |
2006 ச ட்டமன்ற தேர்தல் |
59. தர்மபுரி |
||
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
L. வேலுசாமி |
பாமக |
76195 |
2 |
V.S. சம்பாத் |
மதிமுக |
45988 |
3 |
A. பாஸ்கர் |
தே.மு.தி.க |
17030 |
4 |
M. ஜெகநாதன் |
சுயேச்சை |
1424 |
5 |
D. பாபு |
சுயேச்சை |
1391 |
6 |
K. ஞானவேலவன் |
சுயேச்சை |
1146 |
7 |
R. பூபதி |
பி.ஜே.பி |
996 |
8 |
K. கோவிந்தராஜ் |
சி.பி.ஐ |
759 |
9 |
K. செல்வம் |
பி.எஸ்.பி |
572 |
10 |
H.M. சம்பத் |
சுயேச்சை |
566 |
11 |
J. பாண்டியராஜன் |
பி.டி.எம்.கே |
500 |
12 |
M.K. கந்தசாமி |
சுயேச்சை |
321 |
13 |
D. மகேந்திரன் |
சுயேச்சை |
277 |
14 |
P. ராமகிருஷ்ணன் |
சுயேச்சை |
276 |
15 |
C. சம்பாத் |
சுயேச்சை |
267 |
147708 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் |
59. தர்மபுரி |
||
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
A. பாஸ்கர் |
தே.மு.தி.க |
76943 |
2 |
P. சாந்தமூர்த்தி |
பாம்க |
72900 |
3 |
P.S. ராஜா |
சுயேச்சை |
6937 |
4 |
K. பிரபாகரன் |
பி.ஜே.பி |
2832 |
5 |
K. வெங்கடேஷ் |
சுயேச்சை |
2630 |
6 |
R. சிவன் |
சுயேச்சை |
1714 |
7 |
C. வெங்கடசலம் |
சுயேச்சை |
1080 |
8 |
K. செல்வம் |
பி.எஸ்.பி |
1068 |
9 |
P. பிரபு |
சுயேச்சை |
911 |
10 |
S. நல்லேந்திரன் |
சுயேச்சை |
670 |
11 |
G. சின்னசாமி |
சுயேச்சை |
563 |
168248 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT