Published : 11 Mar 2021 01:27 PM
Last Updated : 11 Mar 2021 01:27 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
வேலுமணி | அதிமுக |
கார்த்திகேய சிவசேனாபதி | திமுக |
எஸ்.ஆர்.சதீஷ்குமார் | அமமுக |
ஷாஜஹான் | மக்கள் நீதி மய்யம் |
கி.கலையரசி | நாம் தமிழர் கட்சி |
கோவை மாவட்டத்தில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று தொண்டாமுத்தூர். தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில் 119-வது இடத்தில் இத்தொகுதி உள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் 19 வார்டுகளையும், மேற்குத் தொடர்ச்சியை மலையை ஒட்டியுள்ள ஏராளமான கிராமப் பகுதிகளையும் உள்ளடக்கியது தான் இந்தத் தொகுதி.
பழமை வாய்ந்த சிவத்தலமான பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம், அருகேயுள்ள பழமை வாய்ந்த பேரூர் ஆதினம், ஈஷா வளாகத்தில் உள்ள 112 அடி உயர ஆதி யோகி சிலை, வெள்ளியங்கிரி மலை, அடிவாரத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில், முக்கிய பொழுது போக்கு மையங்களில் ஒன்றான கோவைக் குற்றாலம் போன்றவை இந்தத் தொகுதியின் முக்கிய அடையாளங்ளாக உள்ளன. குறிப்பாக, பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம், 112 அடி உயர ஆதியோகி சிலை ஆகியவை கோவை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்துக்கே முக்கிய அடையாளமாக உள்ளன.
விவசாய விளை நிலங்கள் அதிகளவில் இத்தொகுதியில் இருந்தாலும், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களும் இந்த தொகுதியில் காணப்படுகின்றன. திராட்சை, வாழை, தென்னை, பாக்கு சாகுபடி இங்கு அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. கவுண்டர் சமுதாயத்தினர் இந்த தொகுதியில் அதிகளவில் வசிக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஒக்கலிக கவுடர், நாயக்கர் சமூகத்தினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களும் இந்தத் தொகுதியில் கணிசமாக வசிக்கின்றனர்.
உள்ளாட்சித்துறை உள்ளிட்ட முக்கியத்துறைகளை கைவசம் வைத்துள்ள அமைச்சரான எஸ்.பி.வேலுமணி, இந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இதனால் சமவெளிப் பகுதிகளில் சாலை வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை கட்டமைப்பு பணிகள் இங்கு முறையாக மேற்கொள்ளப்படுகின்றன, பல்வேறு குடிநீர் திட்டங்கள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்பது இங்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கைகள்
அதேசமயம்,‘ திராட்சை சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படும் இத்தொகுதியில் விலை வீழ்ச்சியால், திராட்சை தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, ஒயின் தொழிற்சாலை ஏற்படுத்தித் தர வேண்டும். மலைப் பகுதிகளில் அடிவாரத்தில் இருந்து குறிப்பிட்ட மீட்டர் தூரத்தில் கூட வீடு கட்ட ‘ஹாகா’ கமிட்டி அனுமதிக்க மறுப்பதால், இடங்களை வாங்கிப் போட்டு வீடு கட்ட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இப்பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என இத்தொகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். தவிர, யானை, காட்டுப்பன்றி, மயில் போன்ற வனவிலங்கினங்களின் தொந்தரவுகள் அதிகளவில் உள்ளன. பயிர்களை மயில், பன்றிகள் சேதப்படுத்துகின்றன. யானை - மனித மோதல்கள் அடிக்கடி நடந்து, மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை சரி செய்ய வனத்துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மழைநீர் காவிரி ஆற்றில் சென்று தேவையின்றி கலக்கிறது. இதைத் தடுக்க, இத்தொகுதிக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள குட்டைகளில், வெள்ளப் பெருக்கின் போது வரும் நீரை குழாய் மூலம் பம்பிங் செய்து, குட்டைகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன் பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நொய்யல் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது நீணட நாள் கோரிக்கையாகும். நொய்யல் ஆற்றை முழுமையாக சர்வே எடுத்த பின்னரே,புனரமைப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் 30 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் பழுதடைந்து காணப்படுகின்றன. அவற்றை சீரமைத்துத் தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வைதேகி நீர்வீழ்ச்சி யை மேம்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். இங்குள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக பல கிலோ மீட்டர் பயணித்து, கோவை நகருக்கும், திருப்பூருக்கும் செல்கின்றனர். இதை தவிர்க்க, உள்ளூரிலேயே சுய தொழில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, வழியோர கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீர் முழுமையாக விநியோகிக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயில், பூண்டி வெளளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு சொந்தமான இடங்களை மீட்க வேண்டும். கோவைக் குற்றாலம் அருகேயுள்ள சாடியாற்றில் இருந்து தண்ணீரை, மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டு நொய்யல் ஆற்றில் கலக்கிறது இதைத் தடுக்க அந்த தண்ணீரை, தெற்குப் பகுதியில் செயற்கை கால்வாய் வெட்டி நேராக,
மலையடிவாரத்தில் கோவைப்புதூர் நோக்கி வரும் போது 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இத்தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மலையை ஒட்டியுள்ள கிராமங்களில், குறிப்பிட்டவற்றில் பேருந்து வசதி கூட இன்னும் முழுமையாக வரவில்லை. வனப்பகுதியில் உள்ள விதிகளை மீறிய கட்டுமானங்கள் மீது எந்த முழுமையான நடவடிக்கையும் இல்லை என தொகுதி மக்களின் தரப்பில் கூறப்படுகின்றன. ஆர்.எஸ்.புரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
கோவை தெற்கு வட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் இத்தொகுதிக்குள் வருகின்றன. போளுவாம்பட்டி, தென்னம்மநல்லூர், தேவராயபுரம், ஜாகீர் நாயக்கன்பாளையம், வெள்ளிமலைப்பட்டினம், நரசீபுரம், மத்துவராயபுரம், இக்கரை போளுவாம்பட்டி ஆகிய கிராமப் பகுதிகள் இத்தொகுதிக்குள் வருகின்றன. தவிர, பேரூராட்சிகளான வேடப்பட்டி, தாலியூர், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, பூலுவப்பட்டி, தென்கரை, பேரூர் ஆகியவையும் இத்தொகுதிக்குள் வருகின்றன. மாநகராட்சியின் 23, 24, 76, 77, 78, 79, 86, 87, 88, 89, 90, 91, 92, 93 ஆகிய வார்டுகள் முழுமையாக இத்தொகுதிக்குள் வருகின்றன. செல்வபுரம், தெலுங்குபாளையம், ஆர்.எஸ்.புரத்தின் குறிப்பிட்ட பகுதிகள் ஆகியவை இத்தொகுதிக்குள் வருகின்றன.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.பி.வேலுமணி, 1,09,519 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மமகவைச் சேர்ந்த சையது முகமது 45,478 வாக்குகளை பெற்றார். பாஜக சார்பில் போட்டியிட்ட கருமுத்து தியாகராஜன் 19,043 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட தியாகராஜன் 7,968 வாக்குகளும் பெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,60,579 |
பெண் |
1,63,398 |
மூன்றாம் பாலினத்தவர் |
76 |
மொத்த வாக்காளர்கள் |
3,24,053 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
எஸ்.பி.வேலுமணி |
அதிமுக |
2 |
எம்.ஏ.சையது முகமது |
மமக |
3 |
கே.தியாகராஜன் |
தேமுதிக |
4 |
வி.விடியல் ஜெகந்நாதன் |
பாமக |
5 |
எம்.கருமுத்து தியாகராஜன் |
பாஜக |
6 |
ஆர்.ஆனந்தராஜ் |
நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1959 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
1951 |
பழனிசாமி கவுண்டர் |
காங்கிரஸ் |
22814 |
1962 |
வி. எல்லம்ம நாயுடு |
காங்கிரஸ் |
32520 |
1967 |
ஆர். மணிவாசகம் |
திமுக |
42261 |
1971 |
ஆர். மணிவாசகம் |
திமுக |
51181 |
1977 |
கே. மருதாச்சலம் |
அதிமுக |
31690 |
1980 |
சின்னராசு |
அதிமுக |
57822 |
1984 |
செ. அரங்கநாயகம் |
அதிமுக |
67679 |
1989 |
யு. கே. வெள்ளியங்கிரி |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) |
62305 |
1991 |
செ. அரங்கநாயகம் |
அதிமுக |
92362 |
1996 |
சி. ஆர். இராமச்சந்திரன் |
திமுக |
113025 |
2001 |
எசு. ஆர். பாலசுப்பிரமணியன் |
தமாகா |
96959 |
2006 |
எம். கண்ணப்பன் |
மதிமுக |
123490 |
2009 ** |
எம். என். கந்தசாமி |
காங்கிரஸ் |
112350 |
2011 |
எஸ்.பி.வேலுமணி |
அதிமுக |
99886 |
ஆண்டு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
1951 |
பெருமாள் |
சோசலிஸ்ட் கட்சி |
10894 |
1962 |
எல். அற்புதசாமி |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
12735 |
1967 |
வி. ஈ. நாயுடு |
காங்கிரஸ் |
26842 |
1971 |
எம். நடராசு |
சுயேச்சை |
29689 |
1977 |
ஆர். மணிவாசகம் |
திமுக |
24195 |
1980 |
ஆர். மணிவாசகம் |
திமுக |
42673 |
1984 |
யு. கே. வெள்ளியங்கிரி |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
45353 |
1989 |
பி. சண்முகம் |
அதிமுக (ஜெ) |
40702 |
1991 |
யு. கே. வெள்ளியங்கிரி |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
45218 |
1996 |
டி. மலரவன் |
அதிமுக |
50888 |
2001 |
வி. ஆர். சுகன்யா |
திமுக |
68423 |
2006 |
எசு. ஆர். பாலசுப்பிரமணியன் |
காங்கிரஸ் |
113596 |
2009 ** |
கே. தங்கவேலு |
தேமுதிக |
40863 |
2011 |
எம்.என்.கந்தசாமி |
காங்கிரஸ் |
46683 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
கண்ணப்பன்.M |
மதிமுக |
123490 |
2 |
பாலசுப்ரமணியன்.S.R |
காங்கிரஸ் |
113596 |
3 |
டென்னிஸ் கோயில் பிள்ளை.E |
தேமுதிக |
37901 |
4 |
சின்னராஜ்.M |
பாஜக |
13545 |
5 |
வரதராஜன்.K |
சுயேச்சை |
2035 |
6 |
ஜானகி.D |
பகுஜன் சமாஜ் கட்சி |
959 |
7 |
சண்முகசுந்தரம்.S |
சுயேச்சை |
956 |
8 |
ரங்கசாமி.V.C |
சுயேச்சை |
731 |
9 |
மணிகண்டன்.V |
சுயேச்சை |
669 |
10 |
கிருஷ்ணன்.V |
பார்வார்டு பிளாக்கு |
649 |
11 |
பாலு.C அ பாலகிருஷ்ணன்.C.P.C |
பாரதிய திராவிட மக்கள் கட்சி |
517 |
12 |
நாகராஜன்.A |
சுயேச்சை |
467 |
13 |
சரவணகுமார்.R |
சுயேச்சை |
364 |
14 |
ஜானகி.V |
லோக் ஜன சக்தி |
353 |
15 |
செந்தில்குமார்.K |
சுயேச்சை |
334 |
16 |
அய்யாசாமி.T.A |
சுயேச்சை |
297 |
296863 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
வேலுமணி.S.P |
அதிமுக |
99886 |
2 |
கந்தசாமி.M.N |
காங்கிரஸ் |
46683 |
3 |
ஸ்ரீதர் முர்த்தி.A |
பாஜக |
5581 |
4 |
உம்மர் காதப்.T.M |
எஸ்டிபிஐ |
4519 |
5 |
கண்ணம்மாள் ஜெகதீசன்.TMT |
லோக் சட்ட கட்சி |
932 |
6 |
ராமசாமி.K |
சுயேச்சை |
907 |
7 |
கந்தசாமி.K |
சுயேச்சை |
447 |
8 |
முத்துசெல்வம்.C |
இந்திய ஜனநாயக கட்சி |
432 |
9 |
பழனிசாமி.S |
உழைப்பாளி மக்கள் கட்சி |
390 |
10 |
கந்தசாமி.A |
சுயேச்சை |
308 |
160085 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT