Published : 11 Mar 2021 01:28 PM
Last Updated : 11 Mar 2021 01:28 PM

116 - சூலூர்

சூலூர் விமானப்படைத்தளம்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
கந்தசாமி அதிமுக
பிரீமியர் செல்வம் திமுக
எஸ்.ஏ.செந்தில்குமார் அமமுக
ரங்கநாதன் மக்கள் நீதி மய்யம்
கோ.இளங்கோவன் நாம் தமிழர் கட்சி

கோவை மாவட்டத்தின் உள்ள மற்றொரு தொகுதிகளில் முக்கியமானது சூலூர். கோவை மாவட்டத்தின் நுழைவாயில் தொகுதி என்றும் இத்தொகுதியைக் கூறலாம். தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில் சூலூர் 116-வது இடத்தில் உள்ளது. விசைத்தறியும், விவசாயத் தொழிலும் இந்தத் தொகுதியில் பிரதானமாக உளளது. இத்தொகுதியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக சூலூர் விமானப் படைத் தளம் உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது, தென் கிழக்கு ஆசியாவின் விமானம் பழுது பார்க்கும் மையமாக, இந்த சூலூர் விமானப் படைத்தளம் ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கவுண்டர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்து வந்தாலும், நாயக்கர், ஒக்கலிக கவுடர், தேவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் குறிப்பிட்ட சதவீதம் இத்தொகுதியில் வசிக்கின்றனர். முழுக்க, முழுக்க புறநகரப் பகுதிகளை மையப்படுத்தி, அமைந்துள்ள இந்தத் தொகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. தொததி மறுசீரமைப்புக்கு பின்னர், கடந்த 2011-ல் முதல் தேர்தலை சந்தித்த இந்தத் தொகுதி, கடந்த 10 வருடங்களில் ஒரு இடைத்தேர்தல் உட்பட 3 தேர்தல்களை சந்தித்துள்ளது. பருத்தி விவசாயம், கரும்பு விவசாயம், தென்னை விவசாயம், பட்டுப்புழு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்றவை முக்கிய விவசாயத் தொழிலாக உள்ளன.

கோரிக்கைகள்:

இந்தத் தொகுதியில் ஏராளமான கோழிப்பண்ணைகள், அட்டை பெட்டி தயாரிப்பு கம்பெனிகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் பல உள்ளதால், தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அணைக்க பிரத்யேகமாக சூலூர் தொகுதியை மையப்படுத்தி , தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும், சூலூர் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து சுல்தான்பேட்டையை மையப்படுத்தி புதிய காவல் நிலையம் உருவாக்க வேண்டும், சூலூர் பேருந்து நிலையம் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது தொகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம், இத்தொகுதி மாணவ, மாணவிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் அரசுக் கலைக்கல்லூரியை ஏற்படுத்தித் தர வேண்டும். சூலூரில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். கோவையில் இருந்து தென்மாவட்டம், டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல முக்கிய வழித்தடமாக உள்ள திருச்சி சாலையை விபத்துகள் இல்லாத போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் வகையில் மேம்படுத்த வேண்டும். தேவையான இடங்களில் விரிவுபடுத்த வேண்டும், இப்பகுதியை மையப்படுத்தி தொழிற்பேட்டையை ஏற்படுத்திட வேண்டும். இங்கு 2 லட்சத்துக்கு்ம் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கு வேலை வாய்ப்பை அதிகப்படுத்திடும் வகையில் சோமனூரில் ஜவுளிச் சந்தை ஏற்படுத்தித் தர வேண்டும், கிராமப்புற பகுதிகளில் சாலை, சாக்கடை வசதிகளை மேம்படுத்திட வேண்டும். முக்கிய பொழுதுபோக்கு மையமாக உள்ள சூலூர் படகுத்துறையை மேம்படுத்திட வேண்டும், சூலூர் பெரியகுளத்தில் கழிவுநீர் கலப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்றவை இத்தொகுதி மக்கள் முன் வைக்கும் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இத்தொகுதியில் உள்ள பகுதிகள்

மோப்பிரிபாளையம் பேரூராட்சி, சாமளாபுரம் பேரூராட்சி, காங்கேயம்பாளையம் பேரூராட்சி சென்சஸ் டவுன், சூலூர் பேரூராட்சி, பள்ளப்பாளையம் பேரூராட்சி, கண்ணம்பாளையம் பேரூராட்சி, சூலூர் மற்றும் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய ஏராளமான கிராமங்கள் இந்தத் தொகுதியில் அமைந்துள்ளன. பல்லடம் தாலுக்காவுக்கு உட்பட்ட குறிப்பிட்ட பகுதிகள், பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், கிட்டம்பாளையம், செம்மாண்டம்பாளையம், கணியூர், அரசூர், நிலம்பூர், மயிலம்பட்டி, இருகூர், ராசிபாளையம், கே.மாதப்பூர், காடம்பாடி, அப்பநாயக்கன்பட்டி, கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், கள்ளப்பாளையம், பாப்பம்பட்டி, இடையம்பாளையம், செலக்கரிசல், வடம்பச்சேரி, செஞ்சேரிப்புதூர், செஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகள் இத்தொகுதியில் உள்ளடங்கியுள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த ஆர்.கனகராஜ் 1,00,977 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வி.எம்.சி மனோகரன் 64,346 வாக்குகள், பாஜக சார்பில் போட்டியிட்ட மந்தராசலம் 13,517 வாக்குகள், தேமுதிக சார்பில் போட்டியிட்ட தினகரன் 13,106 வாக்குகள் பெற்றனர்.

இத்தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ ஆர்.கனகராஜ் உயிரிழந்ததால், கடந்த 2019-ம் ஆண்டு இடைத்தேர்தல் இத்தொகுதியில் நடந்தது. இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.பி.கந்தசாமி 1,00,782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி தோல்வியடைந்தார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,54,197

பெண்

1,61,102

மூன்றாம் பாலினத்தவர்

26

மொத்த வாக்காளர்கள்

3,15,325

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஆர்.கனகராஜ்

அதிமுக

2

வி.எம்.சி. மனோகரன்

காங்கிரஸ்

3

கே.தினகரன்

தேமுதிக

4

பி.கே.கணேசன்

பாமக

5

எஸ்.டி.மந்தராசலம்

பாஜக

6.

எம்.வி.விஜயராகவன்

நாம் தமிழர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

தினகரன்.K

தேமுதிக

88680

2

ஈஸ்வரன்.E.R

கொங்குநாடு முன்னேற்றக் கழகம்

59148

3

தினகரன்.K

சுயேச்சை

7285

4

செந்தில்குமார்.K

பாஜக

4353

5

கார்த்திகேயன்.பொன்

சுயேச்சை

3053

6

மாரியப்பன்.M

சுயேச்சை

2205

7

ஜெரால்ட் அமல ஜோதி

சுயேச்சை

1315

8

தங்கவேலு.C

சுயேச்சை

1281

9

அப்துல் ஹக்கீம்.P

பகுஜன் சமாஜ் கட்சி

1064

10

தங்கமுத்து.S

சுயேச்சை

765

11

ராஜா.C

சுயேச்சை

439

169588

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x