Published : 11 Mar 2021 01:36 PM
Last Updated : 11 Mar 2021 01:36 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
கல்யாணி (தமாகா) | அதிமுக |
தாயகம் கவி | திமுக |
எம்.பி.சேகர் | அமமுக |
ச.ஓபேத் | மக்கள் நீதி மய்யம் |
இரா.இளவஞ்சி | நாம் தமிழர் கட்சி |
சென்னையில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 4 பகுதிகள், புரசைவாக்கம் தொகுதியில் இருந்து 2 பகுதிகள், எழும்பூர் தொகுதியில் இருந்து 2 பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கி 2011-ம் ஆண்டு திரு.வி.க.நகர் (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது. இதன் முதல் எம்.எல்.ஏ. வா.நீலகண்டன்.
கடந்த காலங்களில் சென்னையின் முக்கிய வாழ்வாதாரமாக பின்னி மில் விளங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வேலைக்கு வந்து குடியேறிய மக்கள்தான் இத்தொகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். இந்தியாவின் முதலாவது தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் பின்னி மில்லில் தொடங்கப்பட்டது. அதைத் தொடங்கியவர்களில் ஒருவரும் பிரபல தொழிற்சங்கவாதியுமான தமிழ் அறிஞர் திரு.வி.கல்யாணசுந்தரனார் (திரு.வி.க.) என்ற பெயரில் இத்தொகுதி உருவாக்கப்பட்டது. நீண்டகாலத்திற்கு முன்பே மூடப்பட்ட பின்னி மில்லின் ஒருபகுதி தற்போது குடியிருப்புகளாக உருவாகியுள்ளன.
புதிய தொகுதி என்பதால் மற்ற தொகுதிகளைப் போல சிறப்புகளோ, வரலாறோ கிடையாது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வா.நீலகண்டன், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடேசனைவிட 29 ஆயிரத்து 341 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 2016-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் தாயகம் கவி என்கிற சிவக்குமார் வெற்றி பெற்றார்.
தொகுதியின் பிரச்சினைகள்
சென்னையில் 3 இடத்தில் (சைதாப்பேட்டை, வில்விவாக்கம், புளியந்தோப்பு) இறைச்சிக்கூடங்கள் உள்ளன. இதில் மிகப்பெரியது புளியந்தோப்பு இறைச்சிக்கூடம்தான் (ஆடுதொட்டி). இதை நவீனப்படுத்தும் பணி இன்னமும் முடிந்தபாடில்லை. அதனால் ஆயிரக்கணக்கான ஆடுகள் வெட்டப்படும் இங்கே சுகாதாரக் கேடுக்கு பஞ்சமில்லை என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏழை, எளிய மக்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் இத்தொகுதியில், சாலை, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இத்தொகுதியில் உள்ள ஆடுதொட்டி சுகாதார சீர்கேட்டின் பிறப்பிடமாகவே இருப்பதாகக் கூறும் மக்கள், சமூகநலக் கூடங்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்றும், ஓட்டேரி நல்லா கால்வாய் தூர்வாரப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
குப்பைகள் ஆங்காங்கே தேங்கியிருப்பதும், மழைக்காலத்தில் மழைநீர் தேங்குவதும், பட்டாளம், பெரம்பூர் சந்தைகளில் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லை, போதிய அளவுக்கு மழைநீர் வடிகால் இல்லை, பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவது என்று குறைகளின் பட்டியல் நீள்கிறது. அதிமுக எம்.எல்.ஏ., திமுக எம்.எல்.ஏ. என இரண்டு எம்.எல்.ஏ.க்களும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து தரவில்லை என்பதே இத்தொகுதி மக்களின் மிகப்பெரிய குறையாக இருக்கிறது.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1.07,090 |
பெண் |
1,13,676 |
மூன்றாம் பாலினத்தவர் |
52 |
மொத்த வாக்காளர்கள் |
2,20,818 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
நீலகண்டன் |
அதிமுக |
72887 |
2 |
நடேசன் .DR |
காங்கிரஸ் |
43546 |
3 |
கருணாநிதி .இ |
பிஜேபி |
3561 |
4 |
அஜிதா |
ஐ ஜே கே |
756 |
5 |
சக்திவேல் |
பி எஸ் பி |
630 |
6 |
ஷீலா பாஸ்கரன் |
சுயேச்சை |
518 |
7 |
சிலம்பரசன் |
சுயேச்சை |
407 |
8 |
சிவகுமார் |
சுயேச்சை |
272 |
9 |
பிரபாகரன் |
சுயேச்சை |
235 |
10 |
கொளஞ்சி |
சுயேச்சை |
231 |
11 |
செல்வகுமார் |
சுயேச்சை |
212 |
12 |
ரேணுகுமார் |
எல் ஜே பி |
151 |
13 |
கலைவண்ணன் |
சுயேச்சை |
124 |
14 |
சங்கர் |
சுயேச்சை |
106 |
15 |
கோபாலகிருஷ்ணன் |
சுயேச்சை |
100 |
16 |
கோவிந்தராஜு |
சுயேச்சை |
71 |
123807 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT