Published : 11 Mar 2021 01:38 PM
Last Updated : 11 Mar 2021 01:38 PM

16 - எழும்பூர் (தனி)

சென்னை எழும்பூர் ரயில் நிலையம்.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
ஜான் பாண்டியன் அதிமுக
இ.பரந்தாமன் திமுக
டி. பிரபு அமமுக
பிரியதர்ஷினி மக்கள் நீதி மய்யம்
பூ.கீதாலட்சுமி நாம் தமிழர் கட்சி

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், அரசு அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம், எழும்பூர் நீதிமன்றம், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, புதுப்பேட்டை, கங்காதீஸ்வரர் கோயில், பள்ளிக்கல்வி அலுவலக வளாகம் (டிபிஐ) போன்ற சென்னை மாநகரின் முக்கிய பகுதிகள் அடங்கியதுதான் எழும்பூர் சட்டப்பேரவை தொகுதி (தனி).

இந்த தொகுதி 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

மறுசீரமைப்புக்கு பின்பு அண்ணாநகர் மற்றும் பூங்காநகர், புரசைவாக்கம் (நீக்கப்பட்டவை) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இருந்து சில பகுதிகள் எழும்பூருடன் இணைக்கப்பட்டன. இந்த தொகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களே அதிகளவில் இருக்கின்றனர்.

அதேபோல், நாயுடு, வன்னியர், யாதவர், முதலியார் உட்பட இதர சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர். ஒரு சில பகுதிகளில் மட்டும் பிராமணர், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அதனுடன் வேப்பேரி,பெரியமேடு பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகமுள்ளனர். மற்றொரு முக்கிய இடமான புதுப்பேட்டை மோட்டார் வாகன உதிரிபாகங்களின் மையமாக திகழ்கிறது.

இந்த தொகுதியில் போக்குவரத்து நெரிசல், ஆக்கிரமிப்புகள், சாலைகளில் கழிவுநீர் வெளியேறுதல் முக்கிய பிரச்னைகளாக உள்ளன. மேலும், சில பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுவதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தேர்தல் வரலாறு

எழும்பூர் தொகுதியில் இதுவரை 14 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 10 தடவை திமுகவும், 2 முறை காங்கிரசும், தேமுதிக மற்றும் சுயேட்சை தலா ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளன. அதிகபட்சமாக திமுகவைச் சேர்ந்த பரிதி இளம்வழுதி 5 முறை இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

திமுகவுக்கு சாதகமான இந்த தொகுதியில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்த கட்சி சார்பில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியை, அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 202 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பரவலாக பேசப்பட்டது.

அதன்பின் 2013-ம் ஆண்டு பரிதி இளம்வழுதி அதிமுகவுக்கு இடம்மாறிவிட்டார்.

தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த கே.எஸ்.ரவிசந்திரன் இருக்கிறார். இவர் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியை 10,679 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

95,253

பெண்

96,959

மூன்றாம் பாலினத்தவர்

53

மொத்த வாக்காளர்கள்

1,92,265

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

சட்டமன்ற தேர்தல் ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

கு.நல்லதம்பி

தேமுதிக

தரவு இல்லை

2006

பரிதி இளம்வழுதி

திமுக

48.48

2001

பரிதி இளம்வழுதி

திமுக

47.69

1996

பரிதி இளம்வழுதி

திமுக

72.57

1991

பரிதி இளம்வழுதி

திமுக

50.47

1989

பரிதி இளம்வழுதி

திமுக

49.8

1984

S. பாலன்

திமுக

51.84

1980

L. இளையபெருமாள்

காங்கிரஸ்

61.19

1977

S. மணிமுடி

திமுக

38.6

2006 – தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பரிதி இளம்வழுதி

திமுக

38455

2

சத்யா

மதிமுக

31975

3

எதிராஜ்

தேமுதிக

6031

4

ஸ்ரீரங்கன் பிரகாஷ்

பிஜேபி

1559

5

அருண்குமார்

பி எஸ் பி

376

6

வள்ளுவன்

சுயேச்சை

208

7

இளம்பரிதி

சுயேச்சை

167

8

சிவகுமார்

சுயேச்சை

136

9

கங்காதுரை

சுயேச்சை

114

10

செல்வராஜ்

சுயேச்சை

102

11

சந்திரன்

சுயேச்சை

81

12

சசிகுமார்

சுயேச்சை

63

13

கோபால்

சுயேச்சை

59

79326

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K. நல்லதம்பி

தேமுதிக

51772

2

பரிதிஇளம்வழுதி

திமுக

51570

3

குமாரவடிவேல்

பிஜேபி

4911

4

சுந்தரமூர்த்தி

ஐ ஜே கே

1132

5

சுரேஷ்பாபு

பிஎஸ்பி

669

6

பார்த்திபன்

சுயேச்சை

468

7

கதிரவன்

சுயேச்சை

462

8

சிவசங்கரன்

சுயேச்சை

421

9

B.நல்லதம்பி

சுயேச்சை

329

10

சுந்தர்

சுயேச்சை

262

111996

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x