Published : 11 Mar 2021 01:40 PM
Last Updated : 11 Mar 2021 01:40 PM

11 - டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

ஆர்.கே.நகர் தொகுதியின் முக்கிய அடையாளமான தமிழகத்தின் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகமான காசிமேடு.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
ராஜேஷ் அதிமுக
ஜே.ஜே.எபினேசர் திமுக
டாக்டர் பி.காளிதாஸ் அமமுக
பாசில் மக்கள் நீதி மய்யம்
கு.கெளரிசங்கர் நாம் தமிழர் கட்சி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதிகளில் முக்கியமானது டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின், அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தால் சின்னம், பெயர் முடக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் விஐபி அந்தஸ்தை பெற்றுள்ளது.

வடசென்னையில் மக்கள் நெருக்கடி மிக்க, தண்டையார்ப்பேட்டை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது ஆர்.கே.நகர்.

வடக்கில் திருவொற்றியூர், தெற்கில் ராயபுரம், மேற்கில் திருவிகநகர், பெரம்பூர் தொகுதிகளை எல்லையாக கொண்டுள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் முக்கிய அடையாளமே தமிழகத்தின் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகமான காசிமேடு தான்.

இதுதவிர, சென்னை துறைமுகத்தின் விளையாட்டு மைதானம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆகியவை இத்தொகுதியில் உள்ள முக்கியமான அடையாளங்கள். அனைத்து சமூகத்தினரும் வசிக்கும் பகுதியாக இருந்தாலும், மீனவர்கள், ஆதிதிராவிடர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். கூலித்தொழிலாளர்களை அதிகளவில் கொண்ட தொகுதியாகவும் உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அத்துடன், 300 ஏக்கரில் உள்ள கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு இப்பகுதி மக்களின் நீண்டநாள் பிரச்சினையாகும்.

கடந்த, நவ.16-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவுவாக்காளர் பட்டியல்படி, ஆர்.கே.நகர் தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 318 ஆண், 1 லட்சத்து 31 ஆயிரத்து 301 பெண், 100 மூன்றாம் பாலினத்தவர் என2 லட்சத்து 53 ஆயிரத்து 719 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 1977-ம் ஆண்டு உருவான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு வரை நடைபெற்ற 11 தேர்தல்களில் அதிமுக 6 முறையும், திமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறையும், இறுதியாக 2017- நவம்பர் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதியாக இருந்தாலும் பல சிக்கல்களையும் இந்த தொகுதி சந்தித்துள்ளது.

குறிப்பாக, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தொகுதியின் உறுப்பினராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின், அதிமுக இரண்டாக பிளவுபட்டு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தேர்தலை சந்தித்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தேர்தல் செய்யப்பட்டது. தொடர்ந்து, டிசம்பர் மாதம் அதிமுக அணிகள் இணைந்தாலும், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட டி.டி.வி.தினகரன், இத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார்.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதா 97 ஆயிரத்து 218 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் சிம்லா முத்துச்சோழனைவிட 39 ஆயிரத்து 545 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

ஆனால், 2017-ம் ஆண்டு இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகளே பெற்றிருந்தாலும், எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனனைவிட 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,22,318

பெண்

1,31,301

மூன்றாம் பாலினத்தவர்

100

மொத்த வாக்காளர்கள்

2,53,719

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் கடந்து வந்த தேர்தல்கள் (1977 – 2011 )

சட்டமன்ற தேர்தல் ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

இடைத்தேர்தல் 2015

ஜெ ஜெயலலிதா

அதிமுக

88.43

2011

பி. வெற்றிவேல்

அதிமுக

59.3

2006

P.K.சேகர் பாபு

அதிமுக

50.36

2001

P.K.சேகர் பாபு

அதிமுக

58.43

1996

எஸ். பி. சற்குண பாண்டியன்

திமுக

62.12

1991

இ. மதுசூதனன்

அதிமுக

60.3

1989

எஸ். பி. சற்குண பாண்டியன்

திமுக

45.31

1984

S.வேணுகோபால்

இ.தே.காங்கிரஸ்

50.71

1980

V.இராஜசேகர்

இ.தே.காங்கிரஸ்

48.62

1977

ஐசரி வேலன்

அதிமுக

35.57

2006 - தேர்தல் ஒரு பார்வை

வ எண்

வேட்பாளர்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பி.கே சேகர்பாபு

அதிமுக

84462

2

மனோகர்

காங்கிரஸ்

66399

3

முகமது ஜான்

தேமுதிக

11716

4

பிரேம் ஆனந்த்

பாஜக

1858

5

ராஜேந்திரன்

சுயேச்சை

1030

6

சசிகுமார்

சுயேச்சை

574

7

கங்காதுரை

சுயேச்சை

480

8

மனோகரன்

சுயேச்சை

354

9

மாரிமுத்து

சுயேச்சை

269

10

பி.மாரிமுத்து

சுயேச்சை

168

11

காஜா மொய்தீன்

சுயேச்சை

167

12

துரைவேலு

சுயேச்சை

166

13

சந்தோஷ்குமார்

சுயேச்சை

87

167730

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P.வெற்றிவேல்

அதிமுக

83777

2

பி.கே சேகர்பாபு

திமுக

52522

3

விநாயகம்

பிஜேபி

1300

4

ஆரோக்கியம்

ஐ ஜே கே

678

5

பிரகாஷ்

சுயேச்சை

529

6

மாரிமுத்து

சுயேச்சை

481

7

டேனியல்

சுயேச்சை

379

8

பெருமாள்

பி எஸ் பி

252

9

மது

எம் எம் கே எ

204

10

சந்திரன்

சுயேச்சை

184

11

வேணுகோபால்

சுயேச்சை

180

12

சசிகுமார்

சுயேச்சை

174

13

மதன்

சுயேச்சை

122

14

வின்சென்ட்

சுயேச்சை

97

15

பிரசன்னகுமார்

சுயேச்சை

90

16

முத்துசரவணன்

சுயேச்சை

89

17

சேகர்

சுயேச்சை

77

18

K.சேகர்

சுயேச்சை

72

19

சதீஷ்

சுயேச்சை

72

20

விஜயராஜ்

சுயேச்சை

66

21

வீரபத்ரன்

சுயேச்சை

64

22

இளங்கோவன்

சுயேச்சை

61

23

ராஜா

சுயேச்சை

58

24

கிரிஜா

சுயேச்சை

54

25

ரவி

சுயேச்சை

52

26

கோகுல்

சுயேச்சை

50

27

ராஜேந்திரன்

சுயேச்சை

49

28

லோகநாதன்

சுயேச்சை

46

29

ரவீந்தர்பாபு

சுயேச்சை

42

30

கோகுலகிருஷ்ணன்

சுயேச்சை

42

31

லல்லி

சுயேச்சை

41

141904

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x