Published : 11 Mar 2021 01:41 PM
Last Updated : 11 Mar 2021 01:41 PM

21 - அண்ணா நகர்

அறிஞர் அண்ணா பவளவிழா வளைவு, அண்ணா நகர்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
கோகுல இந்திரா அதிமுக
எம்.கே.மோகன் திமுக
கே.என்.குணசேகரன் அமமுக
வி.பொன்ராஜ் மக்கள் நீதி மய்யம்
சி.சங்கர் நாம் தமிழர் கட்சி

அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கட்டிடக்கலை வல்லுநர்கள் என விஐபி-க்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக அண்ணாநகர் சட்டப்பேரவை தொகுதி விளங்குகிறது. புரசைவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், வில்லிவாக்கம் என 5 சட்டப்பேரவை தொகுதிகள் அண்ணாநகர் தொகுதியின் எல்லைகளாக அமைந்துள்ளன. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, கோகுல இந்திரா ஆகியோர் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதியாக உள்ளது.

திமுகவின் கோட்டை

கடந்த 1977, 1980 என 2 முறை மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியும், 1984-ல் திமுகவின் எஸ்.எம்.ராமச்சந்திரனும், 1989-ல் திமுக பொதுச்செயலாளராக பதவி வகித்த முன்னாள் அமைச்சர் க.அன்பழகனும், 1991-ல் காங்கிரஸ் கட்சியின் ஏ.செல்லகுமாரும், அதன்பிறகு 1996, 2001 மற்றும் 2006 வரை திமுக சார்பில் முன்னாள் அமைச்சரான ஆற்காடு வீராசாமி தொடர்ச்சியாக மூன்று முறையும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட திமுகவின் கோட்டையாகவே இத்தொகுதி இருந்து வந்துள்ளது. கடந்த 2011-ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதன்பிறகு கடந்த 2016-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ம.கோ.மோகன் வெற்றி பெற்றதன் மூலம் திமுக இந்த தொகுதியை மீண்டும் தனது வசமாக்கியுள்ளது.

முக்கிய வர்த்தக பகுதி

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிமீ தொலைவிலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 8 கிமீ தொலைவிலும், மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 12 கிமீ தொலைவிலும் உள்ள இந்த தொகுதி அண்ணாநகர், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் மேற்கு, சாந்தி காலனி, புது ஆவடி சாலை, நடுவங்கரை, ஷெனாய்நகர், டி.பி.சத்திரம், கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனி, சூளைமேடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னைமாநகரின் முக்கிய வர்த்தக பகுதியாக விளங்குகிறது. அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா பிரசித்தி பெற்ற ஒன்று. வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், தனியார் மால்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் அதிகமாக உள்ளன. அனைத்து சாதியினரும் பரவலாக உள்ள இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளனர். கீழ்ப்பாக்கம் பகுதியில் வடமாநிலத்தவர்களும் அதிகமாக வசிக்கின்றனர். போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்னையாக இருந்து வருகிறது. இருந்தபோதும் பூமிக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை இத்தொகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மதுரவாயல்-துறைமுகம் பறக்கும்சாலை திட்டத்தின் பெரும் பகுதி அண்ணா நகர்தொகுதிக்குள்தான்வருகிறது. நெல்சன் மாணிக்கம் சாலையில் இரட்டை அடுக்கு பாலம்கட்டப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியும், மழைநீர் வடிகால் பிரச்னையும் நிறைவேற்றப்படாத ஒன்றாக இருந்து வருகிறது.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,36,698

பெண்

1,41,249

மூன்றாம் பாலினத்தவர்

81

மொத்த வாக்காளர்கள்

2,78,028

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

அண்ணா நகர் தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

சட்டமன்ற தேர்தல் ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

எஸ்.கோகுல இந்திரா

அதிமுக

2006

ஆற்காடு வீராசாமி

திமுக

46.2

2001

ஆற்காடு வீராசாமி

திமுக

48.2

1996

ஆற்காடு வீராசாமி

திமுக

67.05

1991

ஏ. செல்லகுமார்

இ.தே.காங்கிரசு

57.29

1989

க. அன்பழகன்

திமுக

49.94

1984

எஸ். எம். இராமச்சந்திரன்

திமுக

52.59

1980

மு. கருணாநிதி

திமுக

48.97

1977

மு. கருணாநிதி

திமுக

50.1

2006 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ஆர்காடு வீராசாமி

திமுக

100099

2

விஜய தாயன்பன்

மதிமுக

87709

3

ராஜாமணி

எல்கேபிடி

11665

4

H.V. ஹண்டே

பிஜேபி

7897

5

செந்தாமரைகண்ணன்

தேமுதிக

6594

6

லோகநாதன்

சுயேச்சை

683

7

பாலகிருஷ்ணன்

சுயேச்சை

443

8

நாகு

சுயேச்சை

422

9

பிரேமா

சுயேச்சை

323

10

ஹரி

சுயேச்சை

312

11

சிவராமன்

சுயேச்சை

166

12

சுகுமாரன்

சுயேச்சை

163

13

நன்மாறன்

சுயேச்சை

103

14

செந்தில்முருகன்

சுயேச்சை

80

216659

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

S.கோகுல இந்திரா

அதிமுக

88954

2

அறிவழகன்

காங்கிரஸ்

52364

3

ஹரிபாபு

பிஜேபி

3769

4

ஜெயப்ரகாஷ்

YSP

763

5

ஜவஹர் நேசன்

சுயேச்சை

742

6

மகாலட்சுமி

ஐ ஜே கே

722

7

உதயகுமார்

எல் எஸ் பி

697

8

கண்ணன்

பி எஸ் பி

614

9

ஆலமுத்து

ஜே எம் எம்

557

10

கலையரசன்

பு பா

484

11

சந்தானகுமார்

சுயேச்சை

380

12

செந்தில்

சுயேச்சை

283

13

திருநாவுக்கரசு

சுயேச்சை

265

14

மணிமாறன்

சுயேச்சை

235

15

கௌதம்

சுயேச்சை

217

16

அன்பழகன்

சுயேச்சை

147

17

வசிகரன்

சுயேச்சை

130

18

சம்பத்குமார்

எம்எம்கேஎ

119

19

சசிகுமார்

சுயேச்சை

89

20

ஐய்யப்பன்

சுயேச்சை

77

151608

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x