Published : 11 Mar 2021 01:47 PM
Last Updated : 11 Mar 2021 01:47 PM

18 - துறைமுகம்

சென்னை துறைமுகம்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
வினோஜ் பி செல்வம் (பாஜக) அதிமுக
பி.கே.சேகர்பாபு திமுக
பி.சந்தானகிருஷ்ணன் அமமுக
கிச்சா ரமேஷ் மக்கள் நீதி மய்யம்
அகமது பாசில் நாம் தமிழர் கட்சி

திமுக தலைவர் மு.கருணாநிதி, பொதுச்செயலர் க.அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் இந்த தொகுதி விஐபி தொகுதி என்று அழைக்கப்படுகிறது.

வடக்கே ராயபுரம் தொகுதி, தெற்கே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, மேற்கே திரு.வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகள் என துறைமுகம் தொகுதியின் எல்லைகள் அமைந்துள்ளன.

இத்தொகுதியில், கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, 90 ஆயிரத்து 335 ஆண் வாக்காளர்கள், 83 ஆயிரத்து 94 பெண் வாக்காளர்கள், 52 இதர வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 481 வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தொகுதியில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை உயர்நீதிமன்றம், சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை துறைமுகம், பாரிமுனை ஆகிய முக்கிய அதிகார மையங்கள் அமைந்துள்ளன. இந்த தொகுதியில் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலருமான க.அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால், இத்தொகுதிக்கு விஐபி அந்தஸ்து உண்டு. சென்னை மாவட்டத்திலேயே மிக குறைவான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக இத்தொகுதி விளங்குகிறது.

இத்தொகுதியில் மளிகை பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மருத்துவ பொருட்கள், ரசாயனப் பொருட்கள், பட்டாசு, அழைப்பிதழ்கள், காலண்டர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்து வகை பொருட்கள் மொத்த விற்பனை பிரதான தொழில்களாக உள்ளன. இத்தொகுதியில் அதிக அளவில் முஸ்லிம்களும், மார்வாடிகளும் வசித்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி வார்டு எண் 23 முதல் 30 வரை, 43, 44, 48 மற்றும் 80 ஆகியவை இத்தொகுதிக்கு உட்பட்டவை.

தேர்தல் வரலாறு

போக்குவரத்து நெரிசல், இட நெருக்கடி, அதிக அளவில் வசிக்கும் சாலையோர மக்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யாதது ஆகியவை முக்கிய பிரச்சினையாக உள்ளன.

இத்தொகுதியில் 1977 முதல் 2006 வரை தொடர்ந்து 8 முறை திமுக வென்றுள்ளது. முன்னதாக காங்கிரஸ் 3 முறையும், சுயேச்சைகள் 2 முறையும் வென்றுள்ளனர். 2011 தேர்தலில் முதன்முறையாக அதிமுக வென்றது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் திமுக வெற்றிபெற்றது. திமுக சார்பில் போட்டியிட்ட பி.கே.சேகர்பாபு, 42 ஆயிரத்து 71 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.சீனிவாசன் 37 ஆயிரத்து 235 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

90,335

பெண்

83,094

மூன்றாம் பாலினத்தவர்

52

மொத்த வாக்காளர்கள்

1,73,481

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

துறைமுகம் தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 – 2011 )

சட்டமன்ற தேர்தல் ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

பழ.கருப்பையா

அதிமுக

2006

க. அன்பழகன்

திமுக

44.24

2001

க. அன்பழகன்

திமுக

46.98

1996

க. அன்பழகன்

திமுக

70.57

1991

A. செல்வராசன்

திமுக

59.72

1991

மு.கருணாநிதி

திமுக

48.66

1989

மு.கருணாநிதி

திமுக

59.76

1984

A. செல்வராசன்

திமுக

55.3

1980

A. செல்வராசன்

திமுக

54.14

1977

A. செல்வராசன்

திமுக

36.71

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K .அன்பழகன்

திமுக

26545

2

சீமா பஷீர்

மதிமுக

26135

3

சந்திர பிரகாசம்

தேமுதிக

4781

4

வைத்தியலிங்கம்

பிஜேபி

1896

5

வினோபா காந்தி

சுயேச்சை

248

6

முனுசாமி

சுயேச்சை

112

7

முஹம்மது அஸ்கார்

சுயேச்சை

103

8

சக்திவேல்

சுயேச்சை

80

9

இந்திரகுமார்

சுயேச்சை

65

10

முஹமது ஜகுபார்

சுயேச்சை

40

60005

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பழகருப்பையா

அதிமுக

53920

2

அல்டாப் ஹுசைன்

திமுக

33603

3

ஜெய்சங்கர்

பிஜேபி

4663

4

முஹம்மது ஹுசைன்

எஸ் டி பி ஐ

2237

5

பிரவீன் மகேஸ்வரி

சுயேச்சை

761

6

புஷ்பராணி

ஐ ஜே கே

291

7

சந்திரகுமார்

சுயேச்சை

211

8

அமீர் ஜான்

சுயேச்சை

210

9

பாபு

சுயேச்சை

206

10

ஹனுமந்தராவ்

சுயேச்சை

98

11

சைய்யது இப்ரகிம்

சுயேச்சை

88

12

சக்திவேல்

சுயேச்சை

88

13

சான் பாஷா

சுயேச்சை

53

14

சத்யநாராயணன் (எ) மெர்குரி சத்யா

சுயேச்சை

46

96475

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x