Published : 11 Mar 2021 01:32 PM
Last Updated : 11 Mar 2021 01:32 PM

27 - சோழிங்கநல்லூர்

பள்ளிக்கரணை சதுப்புநிலம்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
கந்தன் அதிமுக
எஸ்.அரவிந்த் ரமேஷ் திமுக
ஆர்.பி.முருகன் அமமுக
எம்.ஆர்.ராஜீவ் மக்கள் நீதி மய்யம்
ச.மைக்கேல் வின்சென்ட் சேவியர் நாம் தமிழர் கட்சி

தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு செங்கல்பட்டு மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது சோழிங்கநல்லூர் தொகுதி. இத்தொகுதியில் உள்ளகரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஒக்கியம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் போன்ற சென்னை மாநகராட்சி பகுதிகள், மேடவாக்கம், பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், வேங்கைவாசல், சித்தலாப்பாக்கம் போன்ற ஊராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடங்கியுள்ளன. சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இத்தொகுதி இடம்பெற்றுள்ளது.

முக்கியமாக, தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. வன்னியர்கள், யாதவர்கள், தாழ்த்தப்பட்டோர் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில் மீனவர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிராமணர்கள் மற்றும் இதர வகுப்பினரும் வசித்து வருகின்றனர். பெருங்குடி குப்பை கிடங்கு மற்றும் மிகப்பெரிய சதுப்புநிலப் பகுதி சோழிங்கநல்லூர் தொகுதியில் அமைந்துள்ளன.

கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில் பொழுதுபோக்கு மையங்கள், பண்ணை வீடுகள் நிறைய இருக்கின்றன. சோழிங்கநல்லூர் தொகுதியின் முக்கிய அடையாளமாக ஐடி நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் உள்ளன. ஆவின் பால் பண்ணையும் இங்கு உள்ளது. மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது.

சோழிங்கநல்லூர் தொகுதியில் முக்கிய பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துகளும் அதிக அளவில் நடக்கிறது. இதனால் சோழிங்கநல்லூர் சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் சரியாக செயல்படுத்த வில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மடிப்பாக்கம், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெளியேற போதிய வசதி ஏற்படுத்தப்படவில்லை. மேலும் இந்த தொகுதியில் உள்ள ஊராட்சிகள் நகராட்சிக்கு இணையாக வளர்ந்துள்ளன. அதனால் நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

தாம்பரம் தொகுதியில் இருந்து சோழிங்கநல்லூர் தனி தாலுகாவாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாசில்தார் அலுவலகம் மற்றும் உணவுப் பொருள் வட்ட அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் தனியாக திறக்கப்பட்டன. அதேபோல் அரசு மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் இரவு 10 மணிக்கு மேல் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதால், இரவு நேரங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலை முதல்முறையாக கோழிங்கநல்லூர் தொகுதி சந்தித்தது. அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.கந்தன் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2016-ல் நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ். அரவிந்த் ரமேஷ் 1,47,014 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் லியோ என்.சுந்தரம் 1,32,101 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

3,29,420

பெண்

3,25,858

மூன்றாம் பாலினத்தவர்

88

மொத்த வாக்காளர்கள்

6,55,366

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

என்.சுந்தரம்

அதிமுக

2

எஸ்.அரவிந்த் ரமேஷ்

தி.மு.க

3

பன்னீர்தாஸ்

விசிக - ம.ந.கூட்டணி)

4

கே.ராம்குமார்

பாமக

5

உஜகர் சிங்

பாஜக

6

எஸ்.ராஜன்

நாம் தமிழர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

KP.கந்தன்

அதிமுக

145385

2

S.S.பாலாஜி

வி சி க

78413

3

மோகன் தாஸ் காந்தி

பிஜேபி

7275

4

உத்திராபதி

பி எஸ் பி

1983

5

சிங்கராஜ்

ஐ ஜே கே

1666

6

நரசிம்மன்

சுயேச்சை

1648

7

ரவி

சுயேச்சை

1127

8

அன்புமொழி

பு பா

796

9

ஷீலா

MGRTK

708

10

தாமோதரன்

எம்எம்கேஎ

694

11

கந்தசாமி

சுயேச்சை

453

12

அங்கமுத்து

சுயேச்சை

435

240583

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x