Published : 11 Mar 2021 01:33 PM
Last Updated : 11 Mar 2021 01:33 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
கணிதாசம்பத் | அதிமுக |
பனையூர் பாபு (விடுதலை சிறுத்தைகள் கட்சி) | திமுக |
ஏ.சிவா | அமமுக |
அன்பு தமிழ்சேகரன் | மக்கள் நீதி மய்யம் |
இரா.இராஜேஷ் | நாம் தமிழர் கட்சி |
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள கிராமங்களை உள்ளடக்கிய சட்டமன்றத் தொகுதி. விவசாயம், இறால் வளர்ப்பு, மீன்பிடித் தொழில் ஆகியவை இந்தத் தொகுதியில் பிராதனமாக நடைபெறுகின்றன. இந்த மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய தொகுதியும் இதுதான்.
மதுராந்தகம், திருப்போரூர் தொகுதிகளுக்கு அருகாமையிலும், விழுப்புரம் மாவட்டத்தையொட்டியும் இந்தத் தொகுதி அமைந்துள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி ஒரு லட்சத்துக்கு 9 ஆயிரத்துக்கு 504 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்துக்கு 12 ஆயிரத்து 509 பெண் வாக்காளர்கள், 29 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்துக்கு 42 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்தத் தொகுதி செய்யூர் வட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் உள்ள பகுதிய அளவிலான கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. கிழக்கு கடற்கரை சாலை பகுதி கிராமங்கள் உள்ளதால் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது. முதலியார்குப்பம் படகு குழாம் போன்றவை இந்தத் தொகுதியில் உள்ளன. விவசாயிகள், மீன் பிடித் தொழில் செய்பவர்கள், இறால் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் அதிகம் உள்ளனர். இந்தத் தொகுதியில் வன்னியர்கள், தாழ்த்தப்பட்டோர், மீனவர்கள் அதிகம் வசிக்கின்றனர். பரவலமாக பல இடங்களில் முஸ்லிம்களும் உள்ளனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
செய்யூர் வட்டம்
திருக்கழுக்குன்றம் வட்டம் (பகுதி)
கிளாப்பாக்கம், பெரும்பேடு, அம்மணம்பாக்கம் (ஆர்.எப்), குன்னவாக்கம், வீராபுரம், வெங்கம்பாக்கம், ஆரம்பாக்கம், பூந்தண்டலம், குடிபெரும்பாக்கம், பேரம்பாக்கம், அமிஞ்சிக்கரை, பெரியகாட்டுப்பாக்கம், நடுவக்கரை, பாக்கம், பாண்டூர், வெள்ளப்பந்தல், வழுவாதூர், திம்மூர், வள்ளிபுரம், விளாகம், எடையாத்தூர், இரும்புலிச்சேரி, தேப்பனாம்பட்டு, அட்டவட்டம், நெரும்பூர், சின்னக்காட்டுப்பாக்கம், அங்கமாம்பட்டு, சிட்லம்பாக்கம், புன்னப்பட்டு, சோமாஸ்ப்பட்டு, சோலைக்குப்பம், இளையனார்குப்பம், விட்டலாபுரம் மி, விட்டலாபுரம் -மிமி, மேற்காண்டை, லட்டூர், சூராடிமங்கலம், கொந்தகாரிக்குப்பம், பனங்காட்டுசேரி, பொம்மராஜபுரம், நல்லாத்தூர், ஆயப்பாக்கம், வசுவசமுத்திரம், வயலூர் மற்றும் வெங்காடு கிராமங்கள்,
புதுப்பட்டிணம் (சென்சஸ் டவுன்)[1]
உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. விவசாயத்துக்கான தண்ணீர் வசதிகள் நிறைந்த பகுதி. இங்கு விவசாயத்தில் நவீனத்தை புகுத்த வேண்டும். அதிக அளவு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களையும், விவசாயிகள் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கான சந்தைகளை ஏற்படுத்த வேண்டும். ஆலம்பரக்கோட்டை பகுதியை மேம்படுத்தி சுற்றுலாத்தளமாக மாற்ற வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்தத் தொகுதியில் 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் உருவான புதிய தனித் தொகுதி. இந்தத் தொகுதியில் 2011-ம் ஆண்டு அதிமுக வென்றது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.அரசு 63446 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.முனுசாமி 63142 வாக்குகள் பெற்றார். இது அச்சிறுப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியாக இருக்கும்போது 1971-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 5 முறையும், திமுக 4 முறையும், பாமக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,09,504 |
பெண் |
1,12,509 |
மூன்றாம் பாலினத்தவர் |
29 |
மொத்த வாக்காளர்கள் |
2,22,042 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
ஏ.முனுசாமி |
அதிமுக |
2 |
ஆர்.டி.அரசு |
திமுக |
3 |
எழில்கரோலின் |
விசிகே |
4 |
சடையப்பன் |
பாமக |
5 |
சம்பத் |
பாஜக |
6 |
தசரதன் |
நாம் தமிழர் |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
V. S . ராஜி |
அதிமுக |
78307 |
2 |
D. பார்வேந்தன் |
வி சி க |
51723 |
3 |
சங்கர் |
பு பா |
2322 |
4 |
ராஜி |
சுயேச்சை |
2162 |
5 |
சம்பத் |
பிஜேபி |
1387 |
6 |
காத்தவராயன் |
பி எஸ் பி |
1241 |
7 |
கங்காதரன் |
சுயேச்சை |
1144 |
8 |
முருகன் |
ஐ ஜே கே |
1030 |
9 |
சங்கர் |
சுயேச்சை |
648 |
10 |
பழனிவேல் |
சுயேச்சை |
501 |
11 |
சுந்தரம் |
சுயேச்சை |
406 |
140871 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT