Published : 11 Mar 2021 12:48 PM
Last Updated : 11 Mar 2021 12:48 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
கே பாலு (பாமக) | அதிமுக |
கே.எஸ்.கண்ணன் | திமுக |
ஜெ.கொ.சிவா | அமமுக |
சொர்ணலதா குருநாதன் | மக்கள் நீதி மய்யம் |
நீல.மகாலிங்கம் | நாம் தமிழர் கட்சி |
அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் அதிக பரப்பளவும், அதிக வாக்காளர்களையும் கொண்ட தொகுதி ஜெயங்கொண்டம்.
ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கட்டிடக் கலையின் சான்றாக விளக்கும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் இத்தொகுதியில் உள்ளது.
இந்த தொகுதியில் 30 சதவீதம் வன்னியர்களும், 28 சதவீதம் தலித்துகளும் அளவில் உள்ளனர். இது தவிர, முதலியார், உடையார், மூப்பனார் ஆகிய சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மறைவிற்கு பிறகு சந்திக்க போகும் முதல் சட்டப் பேரவைத் தேர்தல் இதுவாகும்.
உடையார்பாளையம் பேரூராட்சி, வரதராஜன்பேட்டை பேரூராட்சி, ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு ஆண்டிமடம் தொகுதி ஜெயங்கொண்டம் தொகுதியில் சேர்க்கப்பட்டது.
நெல், கரும்பு அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல், ஆண்டிமடம், செந்துறை பகுதிகளில் முந்திரி சாகுபடி அதிகம் உள்ளன. இதுதவிர மக்காச்சோளம், கடலை,உளுந்து, மலர், காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. கைத்தறி நெசவு, முந்திரிக் கொட்டையை பிரித்தெடுப்பது ஆகியவையும் பிரதான தொழிலாக உள்ளது.
இந்த தொகுதியில் ஜனவரி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு படி 1 லட்சத்து31,663 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 34,347 பெண் வாக்காளர்கள், 3 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 66,013 வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
உடையார்பாளையம் வட்டம் (பகுதி), ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், சிலம்பூர் (வடக்கு), சிலம்பூர் (தெற்கு), இடையகுறிச்சி, அய்யூர், ஆண்டிமடம், விளந்தை (வடக்கு), விளந்தை (தெற்கு), பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், வங்குடி பாப்பாக்குடி (வடக்கு), பாப்பாக்குடி (தெற்கு), எரவாங்குடி, அனிக்குதிச்சான் (வடக்கு), அனிக்குதிச்சான் (தெற்கு), கூவத்தூர் (வடக்கு), கூவத்தூர்(தெற்கு), காட்டாத்தூர்(வடக்கு), காட்டாத்தூர்(தெற்கு), குவாகம், கொடுகூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், மேலூர், தண்டலை, கீழகுடியிருப்பு, பிராஞ்சேரி, வெத்தியார்வெட்டு, குண்டவெளி (மேற்கு), குண்டவெளி (கிழக்கு), காட்டகரம் (வடக்கு), காட்டகரம் (தெற்கு), முத்துசேர்வாமடம், இளையபெருமாள்நல்லூர், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, பெரியவளையம், சூரியமணல், இலையூர் (மேற்கு), இலையூர் (கிழக்கு), இடையார், அங்கராயநல்லூர் (கிழக்கு), தேவாமங்கலம், உட்கோட்டை (வடக்கு), உட்கோட்டை (தெற்கு), குருவாலப்பர்கோவில், குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, வேம்புக்குடி, உதயநத்தம் (மேற்கு), உதயநத்தம் (கிழக்கு), கோடாலிகருப்பூர், சோழமாதேவி, அணைக்குடம், வானதிராயன்பட்டினம், பிழிச்சிக்குழி, டி, சோழன்குறிச்சி (தெற்கு), நாயகனைப்பிரியான், கோடங்குடி (வடக்கு), கோடங்குடி (தெற்கு), எடங்கன்னி, தென்கச்சி பெருமாள்நத்தம், டி.பழூர், காரைகுறிச்சி, இருகையூர் மற்றும் வாழைக்குறிச்சி கிராமங்கள், வரதாஜன்பேட்டை (பேரூராட்சி), ஜெயங்கொண்டம் (பேரூராட்சி) மற்றும் உடையார்பாளையம் (பேரூராட்சி).
தொகுதியின் பிரச்சினைகள்
ஜெயங்கொண்டத்தில் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும். மயிலாடுதுறை, கும்பகோணம், ஜெயங்கொண்டம் வழியாக அரியலூருக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தப்பட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ள அனல்மின் திட்டத்தை தொடங்க வேண்டும். முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
கடந்த 2016 ம் ஆண்டு நடந்த சட்டபேரவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் ராமஜெயலிங்கம் 75,431 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக சார்பில் போட்டியிட்ட ஜெ.குரு 52,380 வாக்குகளும், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜி.ராஜேந்திரன் 46,464 வாக்குகளும் பெற்றனர்.
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் |
அதிமுக |
2 |
ஜி.ராஜேந்திரன் |
காங்கிரஸ் |
3 |
எம்.எஸ்.கந்தசாமி |
மதிமுக |
4 |
குரு (எ) ஜெ.குருநாதன் |
பாமக |
5 |
சு.கிருஷ்ணமூர்த்தி |
பாஜக |
6 |
குமுதவாணன் (எ) ரா.கிருஷ்ணமூர்த்தி |
நாம் தமிழர் |
20.1. 2021ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர்பட்டியலின்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,31,663 |
பெண் |
1,34,347 |
மூன்றாம் பாலினத்தவர் |
3 |
மொத்த வாக்காளர்கள் |
2,66,013 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
1951 |
அய்யாவு |
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி |
58397 |
1957 |
விசுவநாதன் |
காங்கிரசு |
20232 |
1962 |
ஜெகதாம்பாள் வேலாயுதம் |
திமுக |
33005 |
1967 |
கே. எ. எ. கே. மூர்த்தி |
திமுக |
34751 |
1971 |
எ. சின்னசாமி |
திமுக |
41627 |
1977 |
வி. கருணாமூர்த்தி |
அதிமுக |
35540 |
1980 |
பி. தங்கவேலு |
காங்கிரஸ் |
39862 |
1984 |
என். மாசிலாமணி |
காங்கிரஸ் |
57468 |
1989 |
கே. சி. கணேசன் |
திமுக |
22847 |
1991 |
கே. கே. சின்னப்பன் |
காங்கிரஸ் |
49406 |
1996 |
கே. சி. கணேசன் |
திமுக |
52421 |
2001 |
எசு. அண்ணாதுரை |
அதிமுக |
70948 |
2006 |
கே. இராசேந்திரன் |
அதிமுக |
61999 |
ஆண்டு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
1951 |
கே. ஆர். விசுவநாதன் |
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி |
57775 |
1957 |
செயராமுலு செட்டியார் |
சுயேச்சை |
10625 |
1962 |
எஸ். சாமிக்கண்ணு படையாச்சி |
காங்கிரஸ் |
24856 |
1967 |
எஸ். இராமசாமி |
காங்கிரஸ் |
28791 |
1971 |
எஸ். இராமசாமி |
ஸ்தாபன காங்கிரஸ் |
29346 |
1977 |
கே. சி. கணேசன் |
திமுக |
23828 |
1980 |
டி. செல்வராசன் |
அதிமுக |
34955 |
1984 |
ஜெ. பன்னீர்செல்வம் |
ஜனதா கட்சி |
22778 |
1989 |
முத்துக்குமாரசாமி |
சுயேச்சை |
17980 |
1991 |
எஸ். துரைராசு |
பாமக |
33238 |
1996 |
குரு என்கிற ஜெ. குருநாதன் |
பாமக |
39931 |
2001 |
கே. சி. கணேசன் |
திமுக |
45938 |
2006 |
குரு என்கிற ஜெ. குருநாதன் |
பாமக |
59948 |
2006தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
K.ராஜேந்திரன் |
அ.தி.மு.க |
61999 |
2 |
J. குரு(எ)குருநாதன் |
பா.ம.க |
59948 |
3 |
M. ஜான்சன் |
தே.மு.தி.க |
6435 |
4 |
K. செந்தமிழ்செல்வி |
சுயேட்சை |
1866 |
5 |
S. ராமேஷ் |
சுயேட்சை |
1189 |
6 |
R. சசிகுமார் |
பி.ஜே.பி |
1139 |
7 |
V. உமாபதி |
பி.ஸ்.பி |
1095 |
8 |
E. கவியரசி |
சுயேட்சை |
976 |
9 |
R. அய்யப்பன் |
சுயேட்சை |
384 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
J. குரு (எ) குருநாதன் |
பா.ம.க |
92739 |
2 |
P. இளவழகன் |
அ.தி.மு.க |
77601 |
3 |
S. கிருஷ்ணமூர்த்தி |
பி.ஜே.பி |
1775 |
4 |
G. ராமசந்திரன் |
ஐ.ஜே.கே |
1771 |
5 |
V. வடிவேல் |
சுயேட்சை |
1698 |
6 |
N. ஞானசேகரன் |
பி.ஸ்.பி |
1255 |
7 |
P. கணேசன் |
சுயேட்சை |
989 |
8 |
C. சக்கரவர்த்தி |
சுயேட்சை |
948 |
9 |
T. மல்லிகா |
சுயேட்சை |
916 |
10 |
P. ஆசைதம்பி |
ஆர்.ஜே.டி |
289 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT