Published : 11 Mar 2021 12:49 PM
Last Updated : 11 Mar 2021 12:49 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
தாமரை ராஜேந்திரன் | அதிமுக |
வழக்கறிஞர் கு. சின்னப்பா (மதிமுக) | திமுக |
துரை மணிவேல் | அமமுக |
பி.ஜவகர் | மக்கள் நீதி மய்யம் |
கு.சுகுணா | நாம் தமிழர் கட்சி |
திருக்குறள், தேவாரம், ஆத்திசூடி, நன்னூல் முதலிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் தமிழில் சதுரகராதி, பரமார்த்த குரு கதைகள் உள்ளிட்ட இலக்கிய நூல்களை உருவாக்கிய வீரமாமுனிவர் சில நூற்றாண்டுகளுக்கு முன் உருவான ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா ஆலயம் இத்தொகுதியில்தான் உள்ளது.
அரியலூர் சட்டப்பேரவை தொகுதியை பொறுத்தவரை திருமானூர் மற்றும் அரியலூர் என இரு ஊராட்சி ஒன்றியங்கள், 79 ஊராட்சிகள், அரியலூர் நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளை கொண்டது. திருமானூர் பகுதியில் நெல், கரும்பு சாகுபடியும், மற்ற பகுதியில் முந்திரி, கடலை, கரும்பு, சோளம் என தோட்டப்பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த ஜனவரி (2021) மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி 1 லட்சத்து 31,335 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 32,670 பெண் வாக்காளர்கள், 7 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2 லட்சத்து 64,012 வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
அரியலூர் தாலுகா- உடையார்பாளையம் தாலுகா (பகுதி) டி.சோழங்குறிச்சி (வடக்கு), தத்தனூர் (கிழக்கு), தத்தனூர் (மேற்கு), மணகெதி, வெண்மான்கொண்டான் (மேற்கு), வெண்மான்கொண்டான் (கிழக்கு), பருக்கல் (மேற்கு), பருக்கல் (கிழக்கு), நடுவலூர் (கிழக்கு), நடுவலூர் (மேற்கு), சுத்தமல்லி, உலியக்குடி, அம்பாபூர், உடையவர்தீயனூர், கீழ்நத்தம், கடம்பூர், சாத்தம்பாடி கோவிந்தப்புத்தூர், ஸ்ரீபுரந்தான் (வடக்கு) மற்றும் ஸ்ரீபுரந்தான் (தெற்கு) கிராமங்கள்.
திருமானூர் பகுதியில் செல்லும் கொள்ளிட ஆற்றில் போடப்பட்டுள்ள ஆழ்துளை குழாய்கள் மூலம் தஞ்சாவூர், பெரம்பலூர்,அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த தொகுதியில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம், ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் உருவக்கப்பட்ட அடைக்கல அன்னை ஆலயம், திருமழபாடி வைத்தியநாதசுவாமி, கல்லங்குறிச்சி வரதராஜபெருமாள் கோயில்கள் உள்ளன.
அரியலூர் பகுதி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதால் கனிம வளங்களும், டைனோசர் முட்டை, எலும்புகள் அதிகம் கிடைக்கின்றன. இதன் காரணமாக அரியலூரில் புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. சுண்ணாம்புக்கல் அதிகளவு கிடைப்பதால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் என 9 சிமென்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன.
தொகுதி பிரச்சினைகள்
சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், தனிசாலை அமைத்து லாரிகளை இயக்க வேண்டும். அரியலூர் மாவட்ட மக்களுக்கு குறைந்த விலையில் சிமென்ட் வழங்க வேண்டும். சிமென்ட் ஆலைகளில் அரியலூர் மாவட்ட மக்களுக்கு வேலை வழங்குவதில் முக்கியத்துவம் வழங்க வேண்டும். காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இந்த தொகுதியில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், தாழ்த்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சம அளவில் உள்ளனர். அடுத்தப்படியாக உடையார், மூப்பனார், முதலியார் உள்ளிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் கணிசமாக உள்ளனர்.
அரியலூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த தாமரை எஸ்.ராஜேந்திரன் எம்எல்ஏவாகவும், அரசு தலைமைக் கொறடாகவும் உள்ளார்.
2016 ல் அதிமுக வை சேர்ந்த தாமரை எஸ்.ராஜேந்திரன், திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரைவிட 2,043 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
2020ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,31,335 |
பெண் |
1,32,670 |
மூன்றாம் பாலினத்தவர் |
7 |
மொத்த வாக்காளர்கள் |
2,64,012 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
எஸ்.ராஜேந்திரன் |
அதிமுக |
2 |
எஸ்.எஸ்.சிவசங்கர் |
திமுக |
3 |
ராம.ஜெயவேல் |
தேமுதிக |
4 |
க.திருமாவளவன் |
பாமக |
5 |
சி.பாஸ்கர் |
ஐஜேகே |
6 |
த.மாணிக்கம் |
நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு |
வெற்றிபெற்றவர் |
கட்சி |
1952 |
பழனியாண்டி |
இந்திய தேசிய காங்கிரசு |
1957 |
இராமலிங்கபடையாச்சி |
இந்திய தேசிய காங்கிரசு |
1962 |
ஆர்.நாராயணன் |
திராவிட முன்னேற்றக் கழகம் |
1967 |
ஆர்.கருப்பையன் |
இந்திய தேசிய காங்கிரசு |
1971 |
ஜி.சிவப்பெருமாள் |
திராவிட முன்னேற்றக் கழகம் |
1977 |
டி.ஆறுமுகம் |
திராவிட முன்னேற்றக் கழகம் |
1980 |
டி.ஆறுமுகம் |
திராவிட முன்னேற்றக் கழகம் |
1984 |
எஸ்.புருசோத்தமன் |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
1989 |
டி.ஆறுமுகம் |
திராவிட முன்னேற்றக் கழகம் |
1991 |
எஸ்.மணிமேகலை |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
1996 |
டி.அமரமூர்த்தி |
தமிழ் மாநில காங்கிரசு |
2001 |
ப.இளவழகன் |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
2006 |
டி.அமரமூர்த்தி |
இந்திய தேசிய காங்கிரசு |
2011 |
துரை.மணிவேல் |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
D. அமரமுர்த்தி |
ஐ.என்.சி |
60089 |
2 |
M. ரவிச்சந்திரன் |
அ.தி.மு.க |
55895 |
3 |
ஜெயவேல். ராமா |
தே.மு.தி.க |
8630 |
4 |
K. மாரியப்பன் |
சுயேட்சை |
2936 |
5 |
K. சேகர் |
பி.ஜேபி |
1111 |
6 |
M. சாமிதுரை |
பிஸ்பி |
1041 |
7 |
G. சுகுமார் |
சுயேட்சை |
782 |
8 |
S.M. சந்திரசேகர் |
சுயேட்சை |
768 |
9 |
V. செந்தில் (எ) செந்தில் குமார் |
சுயேட்சை |
629 |
10 |
N. மகேஷ்குமார் |
சுயேட்சை |
579 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
மணிவேல், துரை |
அ.தி.மு.க |
88726 |
2 |
D. அமரமூர்த்தி |
ஐ.என்.சி. |
70906 |
3 |
C. பாஸ்கார் |
ஐ.ஜே.கே |
9501 |
4 |
R. பன்னீர்செல்வம் |
சுயேட்சை |
7099 |
5 |
P. அபிராமி |
பி.ஜே.பி |
2981 |
6 |
T. முருகானந்தன் |
சுயேட்சை |
2640 |
7 |
K. நீலமேகம் |
பி.ஸ்.பி |
2267 |
8 |
M.K. முத்துசாமி |
சுயேட்சை |
1629 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT