Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM

தமிழகம், புதுச்சேரியில் களைகட்டும் தேர்தல் களம்- வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க வுள்ள தமிழகம், புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் நாளை (மார்ச் 12) தொடங்குகிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கியுள்ளதால் தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகள், புதுச்சேரி யில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான அட்ட வணையை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த பிப்ரவரி 26-ம் தேதி அறிவித்தார். அன்றே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

அதன்படி தமிழகம், புதுச்சேரி யில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. 19-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். தினமும் காலை 10 முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். விடுமுறை தினங்களான சனி, ஞாயிறு (13, 14) ஆகிய நாள்களில் வேட்புமனு தாக்கல் கிடையாது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 20-ம் தேதி நடக்கிறது. மனுக்களை திரும்பப் பெற 22-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

சட்டப்பேரவைத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடக்கவுள்ள கன் னியாகுமரி மக்களவைத் தொகு திக்கும் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

கரோனா 2-வது அலை அச்சம் இருப்பதால் வேட்புமனு தாக்கலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. வேட் பாளருடன் இருவர் மட்டுமே செல்ல முடியும். வேட்புமனு தாக்கல் செய்ய பேரணியாக செல்வது உள் ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு களை விதித்துள்ளது.

கட்சிகள் தீவிரம்

வேட்புமனு தாக்கல் தொடங்குவதையொட்டி அரசியல் கட்சிகளில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள் ளன. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி கள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என்று அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 177 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள் ளது. நாம் தமிழர் கட்சி 234, மக்கள் நீதி மய்யம் 70, அமமுக 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, வேட்பாளர் பட்டியலை இன்று வெளி யிடும் என கூறப்படுகிறது.

புதுச்சேரியிலும் கூட்டணி தொகு திப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு செய் யும் பணிகள் வேகமெடுத்துள்ளன. வேட்புமனு தாக்கல் தொடங்குவதால் தமிழக தேர்தல் களம் களை கட்டத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x