Published : 08 Mar 2021 05:37 AM
Last Updated : 08 Mar 2021 05:37 AM

மார்க்சிஸ்ட் கட்சியுடன் இன்று தொகுதி உடன்பாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமையில் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். அருகில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன். படம்: பு.க.பிரவீன்

திமுக-மார்க்சிஸ்ட் கட்சிகள் இடையே இன்று (மார்ச் 8) தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இது வரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட்,
விசிக, மமக மற்றும் முஸ் லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. திமுக - மார்க்சிஸ்ட் கட்சிகள் இடை யேயான
தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை.

மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதை ஏற்க மார்க்
சிஸ்ட் மறுத்து வருகிறது. இந்நிலையில் அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்காக கட்சியின் செயற்குழுக் கூட்டம் தொடர்ந்து 2-வதுநாளாக சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மாநில நிர்வாகக்குழு கூட்டமும் நாள் முழுவதும் நடத்தப்பட்டது. அதில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள், கூட்டணிதொகுதி பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டன. அப்போது திமுக கூட்டணியில் தொடரவும், 8 தொகுதிகள் வரை கேட்டு பெறவும் முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் திமுக, மார்க்சிஸ்ட் இடையேயான தொகுதி பங்கீடு குறித்து 3-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அறிவாலயத்தில் இன்று (மார்ச் 8) நடைபெற உள்ளதாகவும், இதில் இறுதி முடிவு எட்டப்பட்டு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x