Published : 03 Mar 2021 03:22 AM
Last Updated : 03 Mar 2021 03:22 AM
பெரம்பலூர் மாவட்ட தேமுதிக சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை பெரம்பலூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியது: சாமானிய மக்களுக்காக சுயம்புவாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக. பேரவையில் மக்கள் பிரச்சினை குறித்து பேசியதால்தான் அதிமுகவுக்கும், தேமுதிகவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கூட்டணி பேரம் பேசுவது எங்களது நோக்கமல்ல. இலக்கை அடைய இப்போது இருக்கும் சூழலில் 2, 3 வழிகளில் செல்ல வேண்டியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் அனைத்து கட்சிகளும் அவசரப்படுகின்றன. தலையே போனாலும் தேமுதிகவை தலைகுனிய விடமாட்டோம். நாங்கள் நினைத்தால் 234 தொகுதியில் தனித்து நின்று வெற்றிபெற முடியும். வாரிசு இல்லாதவர்களே வாரிசு அரசியல் பற்றி பேசுகின்றனர். அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளும் எங்களுக்கு நல்லதும், துரோகமும் செய்துள்ளன. அரசியலில் நிரந்த நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. மாற்றம் தேவை, அதை தேமுதிகவால் மட்டுமே கொண்டுவர முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT