Published : 02 Mar 2021 03:12 AM
Last Updated : 02 Mar 2021 03:12 AM
பிரதமர் நரேந்திர மோடிக்கு தடுப்பூசி போட்ட புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் பி.நிவேதா கூறியதாவது:
எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக பணியாற்றுகிறேன். கரோனா தடுப்பூசி மையத்தில் நானும் மருத்துவக் குழுவினரும் தயாராக இருந்தோம். அப்போதுபிரதமர் வந்தார். அவரது வருகை பற்றி முன்கூட்டியே தகவல் தெரியாது. இதனால் அவரைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. நானும் ரோசம்மாவும் பிரதமருக்கு தடுப்பூசி போட்டோம். அதை அவர் உணரவேயில்லை.
தடுப்பூசி போட்டு விட்டீர்களா என கேட்டார். முன்னதாக அவர் வந்ததும் சிறிது நேரம் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, எந்த ஊர் என கேட்டார். நான் புதுச்சேரி எனக் கூறியதும் தமிழில் வணக்கம் என கூறினார். பிறகு ஊசி போடும்போது வெட்ரினரி ஹாஸ்பிட்டல்ல பயன்படுத்தும் பெரிய ஊசி எடுத்துட்டு வந்தீங்களா என கிண்டலாக கேட்டார். இல்லை சார் எனசிரித்தோம். அதற்கு அரசியல்வாதியான எங்களுக்கெல்லாம் தோல் அழுத்தமாக இருக்கும். பெரிய ஊசியா எடுத்துட்டு வாங்க என வேடிக்கையாக சொன்னார். இல்லை சார், சாதாரண ஊசிதான்என்று சொன்னோம். ஊசி போட்டுக் கொண்ட பிறகு கண்காணிப்பு அறையில் அமர்ந்திருந்தார்.
அவருக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. ஊசி போட்டதுகூட அவருக்கு தெரியவில்லை. அதுக்குள்ள ஊசி போட்டுவிட்டீர்களா என கேட்டார். 30 நிமிடங்கள் கழித்து அவர் புறப்பட்டார்.
நாங்களும் வணக்கம் கூறிஅனுப்பி வைத்தோம். கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொள்ள சிலர் தயக்கம் காட்டுகின்றனர். இந்த தயக்கத்தைப் போக்குவதற்குதான் பிரதமர் இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டார். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு நிவேதா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT