Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

மதுரையில் தொகுதிகளை பெற கட்சிகளிடையே போட்டி

மதுரை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. அதிமுக சார்பில் திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மேற்கில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, திருப்பரங்குன்றத்தில் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, மதுரை தெற்கில் தற்போதைய எம்எல்ஏ சரவணன் ஆகியோர் வரும் பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகும் நிலை உள்ளது.

சோழவந்தானில் மாணிக்கம் எம்எல்ஏ உட்பட சீட் பெறப் பலர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். எனினும் மற்ற தொகுதிகளில் சிலவற்றில் வேட்பாளர்கள் மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. திமுகவினர் தங்களுக்கு எதிராக அதிமுகவில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதைக் கணித்து, தொகுதியை தேர்ந்தெடுத்து வருகின்றனர். மதுரை கிழக்கில் பி.மூர்த்தி, மேற்கில் கோ.தளபதி, மத்தியில் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் போட்டியிடுவது மட்டும் உறுதியாகும் நிலை உள்ளது. திருப்பரங்குன்றத்தை பா.சரவணன் எம்எல்ஏ மீண்டும் கேட்கிறார்.

இந்நிலையில் இரு பிரதான கட்சிகளோடும் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் சில தொகுதிகளை குறிவைத்து கேட்டு வருகின்றன. மதுரை வடக்கை பாஜக, தெற்கை மதிமுக, திருமங்கலத்தை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கேட்பதாக கூறப்படுகிறது. 2016 சட்டப்பேரவை தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிட்டது. தற்போது இத்தொகுதியில் போட்டியிட திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.மணிமாறன் முயற்சிக்கிறார்.

எனினும் தங்களுக்குத்தான் தொகுதி வேண்டும் என காங்கிரஸ் கேட்கிறது. மதுரை மாவட்டத்தில் வேறு தொகுதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டால் திருமங்கலத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் கேட்டு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x