Published : 20 Feb 2021 03:16 AM
Last Updated : 20 Feb 2021 03:16 AM

கட்சிகளை சாராத 30 சதவீத வாக்குகளை பெற அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளிடையே போட்டி

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், கட்சிகளை சாராமல் இருக்கும் 30 சதவீத வாக்குகளைபெற அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அதிமுக, திமுகஉள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல்பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறுதேர்தல் பிரச்சார உத்திகளில் ஆர்வம் காட்டிவரும் அரசியல் கட்சிகள், எந்த கட்சிகளையும் சாராமல்இருக்கும் சுமார் 30 சதவீத பொதுமக்களையும், நலச்சங்கங்கள், இளைஞர் அமைப்புகளையும் நேரில் சந்தித்து அவர்களின் ஆதரவை திரட்டி வருகின்றன.

இது தொடர்பாக முன்னாள் மேயரும் திமுக எம்எல்ஏ.வுமான மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘அனைத்து தொகுதிகளிலும் திமுக சார்பில் பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். வீடுதோறும் வாக்காளர்களை சந்திப்பது, பொதுக் கூட்டம்,கிளைகள் தோறும் கட்சி நிர்வாகிகள் கூட்டம்உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதேபோல், கட்சிகளை சாராமல் இருக்கும் பொதுமக்கள், நலச்சங்கள் நிர்வாகிகளை நேரில்சந்தித்து திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைக்கவுள்ளோம். தொகுதிகள் தோறும் உள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டியும், கரோனா, கனமழைபோன்ற பேரிடர் காலங்களில் திமுக எம்எல்ஏக்கள் மேற்கொண்ட பணிகளை எடுத்துரைத்து ஆதரவு கேட்டு வருகிறோம்.’’என்றார்.

இது தொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் அஸ்பயர் கே.சுவாமிநாதன் கூறுகையில், ‘‘தமிழக மக்களுக்கான தேவையை திட்டங்களை தமிழக அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கரோனா, கனமழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் தமிழக அரசின் நடவடிக்கைகளை தமிழக மக்கள் பாராட்டி வருகின்றனர். தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்கள், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு திட்டங்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனர். இதனால், அதிமுகவுக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், அரசியல் கட்சிகளை சாராத பொதுமக்களும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசின் சேவைகளை பாராட்டி பொதுமக்கள் நல அமைப்புகள், நலச்சங்கங்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். அதுபோல், தொகுதிகள் தோறும் அந்தந்த மாவட்ட, நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகளும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x