Published : 08 Apr 2019 07:48 PM
Last Updated : 08 Apr 2019 07:48 PM

கள நிலவரம்: விருதுநகர் தொகுதி யாருக்கு?

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மாணிக்கம் தாகூரை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது. இவர் ஏற்கெனவே விருதுநகர் தொகுதி எம்.பி.யாக இருந்தவர். இவர் மீது பெரிய அளவில் குற்றச்சாட்டு ஏதுமில்லை. மேலும் இவர் மக்கள் எளிதில் அணுகக்கூடிய நபராக இருக்கிறார். எம்.பி.யாக இல்லாதபோதும் தொகுதியில் அவரது அலுவலகம் செயல்பட்டு வந்திருக்கிறது. தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகள் அதிகம். அதனையடுத்து நாயக்கர், பட்டியல் இனத்தவர், நாடார் சமூக வாக்குகள் உள்ளன.

எம்.பி.யாக இருந்தபோது கேந்திரிய வித்யாலயா பள்ளியைக் கொண்டு வந்தார். ரயில்களில் 2000 வணிகர்களுக்கு சலுகை பாஸ் வாங்கிக் கொடுத்தார் என்பது அவர் மீதான அடையாளங்களாக உள்ளன.

சிட்டிங் எம்.பி. டி.ராதாகிருஷ்ணன் தொகுதியில் அலுவலகமே அமைக்கவில்லை. கடந்த தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கவும் வரவில்லை. வெற்றிக்குப் பின் நன்றி தெரிவிக்கவும் வரவில்லை. நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 800 கேள்விகள் கேட்டிருக்கிறார். ஆனால் 5 மட்டுமே தொகுதிக்கான கேள்விகள். பட்டாசுத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு குரல் கொடுக்காதவர் என்று தொகுதிவாசிகளே அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

 

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி இரண்டாம் இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் அருள்மொழித்தேவன் 3-ம் இடத்திலும் உள்ளனர். அமமுகவின் பரமசிவன் ஐயப்பன் 4-ம் இடத்தில் உள்ளார்.

 

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x