Published : 09 Apr 2019 10:14 AM
Last Updated : 09 Apr 2019 10:14 AM
தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் தங்கிப் பணியாற்றும் தொகுதி ஸ்ரீபெரும்புதூர்.
நீண்டகாலமாக ரிசர்வ் தொகுதியாக இருந்த இந்தத் தொகுதி, மறுசீரமைப்புக்குப் பிறகு பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மரகதம் சந்திரசேகர் உட்பட அதிகமுறை பெண்கள் இங்கு களம் கண்டுள்ளனர். மரகதம் சந்திரசேகர் 3 முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.
2019- மக்களவைத் தேர்தலில் அ.வைத்திலிங்கம் (பாமக), டி. ஆர் பாலு (திமுக), ஜி தாம்பரம் நாராயணன் (அமமுக), சிவகுமார் (மநீதி), மகேந்திரன் (நாம் தமிழர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில் பாமக வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கும்தான் போட்டி. அதிமுக கடந்த முறை வென்ற தொகுதி என்பதால் அந்த வாக்குகள் பாமகவுக்கு அப்படியே கிடைக்கும் என்று கணக்குப் போட்டு அதிமுகவும், பாமகவும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
திமுக சார்பில் ஜெகத்ரட்சகன் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த முறை வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் எந்த சுணக்கமும் காட்டாமல் திமுகவினர் அனல் பறக்க வேலை பார்த்து வருகின்றனர். பிரச்சாரத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
டி.ஆர்.பாலுவுக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியைப் பொறுத்தவரையில் வென்றே தீர வேண்டும் என்று முழு முனைப்புடன் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு செயல்பட்டு வருகிறார். கருத்துக் கணிப்பின்படி அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் இரண்டாம் நிலையில் உள்ளார். அமமுக வேட்பாளர் தாம்பரம் நாராயணனும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மகேந்திரனும் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
முக்கிய குறிப்பு:
இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT