Published : 30 Mar 2019 03:27 PM
Last Updated : 30 Mar 2019 03:27 PM
பழைய சென்னையின் பகுதிகளை உள்ளடக்கிய மக்களவை தொகுதி வட சென்னை. மீனவ மக்கள் கணிசமாக வசிக்கும் தொகுதி. ரயில் பெட்டி தொழிற்சாலை உட்பட பல ஆலைகள் உள்ள பகுதி என்பதால் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. தமிழகத்தின் மற்ற மாவட்டத்து மக்களும் இந்த தொகுதிக்குள் அதிகமாக வசிக்கிறார்கள்.
திமுக தொடங்கிய காலம் முதல் தனது வலிமையை காட்டிய தொகுதி வட சென்னை. அக்கட்சியின் மூத்த தலைவர்களான நாஞ்சில் மனோகரன், ஆசைத்தம்பி, என்.வி.என்.சோமு, தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, டி.கே.எஸ் இளங்கோவன் என பலர் இத்தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளனர்.
தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால், திமுகவை போலவே, இடதுசாரி கட்சிகளுக்கும் இங்கு வலிமையான தளம் உண்டு. இடதுசாரி தலைவர் தா.பாண்டியன் போட்டியிட்டு வென்ற தொகுதி. கடந்த தேர்தலில் அதிமுகவும் தனது செல்வாக்கை நிருபித்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு பின் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலிதா ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வென்றார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரும், அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வென்ற ஆர்.கே.நகரும், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வென்ற ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியும் இந்த மக்களவை தொகுதிக்குள் இடம் பெற்றுள்ளன.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
ராயபுரம்
ஆர்.கே.நகர்
திருவொற்றியூர்
பெரம்பூர்
கொளத்தூர்
திருவிக நகர் (எஸ்சி)
தற்போதைய எம்.பி
வெங்கடேஷ் பாபு, அதிமுக
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் சதவீதத்தில் ± |
அதிமுக | வெங்கடேஷ் பாபு | 406704 |
திமுக | கிரிராஜன் | 307000 |
தேமுதிக | சவுந்திரபாண்டியன் | 86989 |
காங் | பிஜூ சாக்கோ | 24190 |
சிபிஎம் | வாசுகி | 23751 |
முந்தைய தேர்தல்கள்
ஆண்டு | வென்றவர் | 2ம் இடம் |
1971 | நாஞ்சில் மனோகரன், திமுக | விநாயக மூர்த்தி, ஸ்தாபன காங் |
1977 | ஆசைதம்பி, திமுக | மனோகரன், அதிமுக |
1980 | லட்சுமணன், திமுக | அப்துல்காதர், அதிமுக |
1984 | என்.வி.என்.சோமு திமுக | லட்சுமணன், காங் |
1989 | தா.பாண்டியன் காங் | என்.வி.என்.சோமு, திமுக |
1991 | தா.பாண்டியன், காங் | ஆலடி அருணா, திமுக |
1996 | என்.வி.என்.சோமு, திமுக | தா.பாண்டியன், காங் |
1998 | குப்புசாமி, திமுக | சபாபதி மோகன், மதிமுக |
1999 | குப்புசாமி, திமுக | சவந்திரராஜன், சிபிஎம் |
2004 | குப்புசாமி, திமுக | சுகுமாறன் நம்பியார், பாஜக |
2009 | டி.கே.எஸ் இளங்கோவன், திமுக | தா.பாண்டியன், சிபிஐ |
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
ராயபுரம் : ஜெயகுமார், அதிமுக
ஆர்.கே.நகர் : ஜெ. ஜெயலலிதா, அதிமுக
திருவொற்றியூர் : கே.பி.பி. சாமி, திமுக
பெரம்பூர் : வெற்றிவேல், அதிமுக
கொளத்தூர் : மு.க. ஸ்டாலின், திமுக
திருவிக நகர் (எஸ்சி) : சிவகுமார் என்ற தாயகம் கவி, திமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
ஆர்.மோகன்ராஜ் (தேமுதிக)
கலாநிதி வீராசாமி (திமுக)
சந்தான கிருஷ்ணன் (அமமுக)
மௌர்யா (மநீம)
காளியம்மாள் (நாம் தமிழர்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT