Published : 06 Apr 2019 01:18 PM
Last Updated : 06 Apr 2019 01:18 PM

சிவகங்கை தொகுதியில் போட்டியிட விரும்பிய ராகுல் காந்தி: சிதம்பரம் தகவல்

 

ராகுல் காந்தி அமேதியை அடுத்து தென்னிந்தியாவில் இரண்டாவது தொகுதியாக சிவகங்கையில் நிற்கப் பரிசீலனை செய்தார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிடுகிறது. 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் பெயர் மட்டும் இல்லை. அதைத் தொடர்ந்து நீண்ட இழுபறிக்குப் பின் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு உள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை தயங்கியதாகக் கூறப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தன் மகன் கார்த்திக்காக அதிகம் மெனக்கெடலில் ஈடுபட்டு சீட்டை வாங்கினார் என்று பேச்சு அடிபட்டது.

 

இந்நிலையில் 'தி இந்து' ஆங்கிலம் சார்பில் சிதம்பரத்தை தொடர்பு கொண்டு நேர்காணல் எடுக்கப்பட்டது. அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். சிவகங்கை தொகுதியில் ஏற்பட்ட வேட்பாளர் சர்ச்சை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சிதம்பரம், ''அதில் சர்ச்சை எதுவும் இல்லை. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான 24 மணி நேரத்தில் சிவகங்கை வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது. ஏனெனில் வயநாடு, சிவகங்கை, கர்நாடகாவில் ஒரு தொகுதி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக இருந்தார். அதனால்தான் இந்தத் தாமதம். சர்ச்சை எதுவும் இல்லை'' என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x