Published : 01 Apr 2019 01:02 PM
Last Updated : 01 Apr 2019 01:02 PM
1977-ம் ஆண்டு முதல் ரிசர்வ் தொகுதியாக இருந்த பொள்ளாச்சி தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009-ம் ஆண்டு பொதுத் தொகுதியாக மாறியுள்ளது. விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிகம் நடக்கும் பகுதி. குறிப்பாக தென்னை விவசாயம், அது சார்ந்த தேங்காய், தேங்காய் நார் தொழில் அதிகமாக நடக்கிறது. கேரள மாநில எல்லையொட்டிய தொகுதி என்பதால் அதன் தாக்கம் உண்டு.
தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு பொள்ளாச்சி தொகுதி சற்று மாறுதல் அடைந்துள்ளது. கோவையில் தொண்டாமுத்தூர் பகுதியும் இணைந்துள்ளதால், கோவை பகுதியின் அரசியல், சமூக சூழல் தாக்கம் கொண்ட தொகுதியாக உள்ளது.
திராவிட கட்சிகளே தொடர்ந்து போட்டியிட்டு வந்துள்ள தொகுதி இது. மதிமுகவுக்கும் ஒட்டு வங்கி இருந்ததால் இரண்டுமுறை அக்கட்சியின் சார்பில் கிருஷ்ணன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த தேர்தலில் அதிமுகவின் மகேந்திரன் ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட கொங்கு நாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் 2வது இடம் பிடித்தார்.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
பொள்ளாச்சி
கிணத்துக்கடவு
மடத்துக்குளம்
உடுமைலப்பேட்டை
தொண்டாமுத்தூர்
வால்பாறை (எஸ்சி)
தற்போதைய எம்.பி
மகேந்திரன், அதிமுக
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் |
அதிமுக | மகேந்திரன் | 417092 |
பாஜக | ஈஸ்வரன் | 276118 |
திமுக | பொங்கலூர் பழனிசாமி | 251829 |
காங்கிரஸ் | செல்வராஜ் | 30014 |
முந்தைய தேர்தல்கள்
ஆண்டு | வென்றவர் | 2ம் இடம் |
1971 | நாராயணன், திமுக | நல்லசிவம், ஸ்தாபன காங் |
1971 (இடைத்தேர்தல்) | கலிங்கராயர், திமுக | ஆர்.கே.கவுண்டர், சுயேச்சை |
1977 | ராஜூ, அதிமுக | தண்டபாணி, திமுக |
1980 | தண்டபாணி, திமுக | நடராஜன், அதிமுக |
1984 | அண்ணாநம்பி, அதிமுக | கிருஷ்ணசாமி, திமுக |
1989 | ராஜா ரவி வர்மா, அதிமுக | ஆறுமுகம், சிபிஐ |
1991 | ராஜா ரவி வர்மா, அதிமுக | தண்டபாணி, திமுக |
1996 | கந்தசாமி, தமாகா, | அண்ணா நம்பி, அதிமுக |
1998 | தியாகராஜன் அதிமுக | கோவை தங்கம், தமாகா |
1999 | கிருஷ்ணன், மதிமுக | தியாகராஜன், அதிமுக |
2004 | கிருஷ்ணன், மதிமுக | முருகன், அதிமுக |
2009 | சுகுமார், அதிமுக | சண்முகசுந்தரம், திமுக |
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக
கிணத்துக்கடவு : சண்முகம், அதிமுக
மடத்துக்குளம் : ஜெயராமகிருஷ்ணன், திமுக
உடுமைலப்பேட்டை : ராதாகிருஷ்ணன், அதிமுக
தொண்டாமுத்தூர் : எஸ்.பி. வேலுமணி, அதிமுக
வால்பாறை (எஸ்சி) : கஸ்தூரி வாசு, அதிமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
சி. மகேந்திரன் (அதிமுக)
கு. சண்முக சுந்தரம் (திமுக)
முத்துக்குமார் (அமமுக)
மூகாம்பிகை (மநீம)
சனுஜா (நாம் தமிழர்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT