Published : 14 Mar 2019 08:27 AM
Last Updated : 14 Mar 2019 08:27 AM

காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் ஜிஎஸ்டி வரி எளிமையாக்கப்படும்; நாகர்கோவில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உறுதி

அ.அருள்தாசன், எல்.மோகன்

“மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் ஒரே வரி, எளிய வரி, மக்களுக்கான வரியாக ஜிஎஸ்டி மாற்றம் செய்யப்படும்” என்று, நாகர்கோவிலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மக் களவைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட் டம் நாகர்கோவிலில் நேற்று நடைபெற் றது. இக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசிய தாவது:

தேர்தலுக்காக நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை. மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மக்கள் கூட் டணியை அமைத்திருக்கிறோம். தமிழ் மொழிக்கும், பண்பாட்டுக்கும், கலாச்சாரத் துக்கும் ஏற்பட்டுள்ள தாக்குதல்களை தடுத்து நிறுத்த ஒன்று சேர்ந்துள்ளோம்.

தமிழக ஆட்சியை, பிரதமர் டெல்லியி லிருந்து நடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் மத்தியில் தமிழர்களின் கை ஓங்கியிருந்தது. இப்போது, மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் கைகளில் தமிழக ஆட்சி இருக்கிறது. தமிழர்களின் உரிமைகளை அவர்கள் ஒடுக்குகிறார்கள். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தமிழர்கள் எப்போதும் உண்மையின் பக்கம் இருப்பார்கள். உண்மைக்கான போராட்டத்தில் தமிழர்கள் பலரும் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். அந்த உண்மைக்கு எதிராக மத்தியில் மோடி ஆட்சி நடத்துகிறார்.

மோடியிடம் உண்மை இல்லை

2014 தேர்தலின்போது பல்வேறு வாக் குறுதிகளை மோடி மக்களுக்கு கொடுத் திருந்தார். ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சத்தை செலுத்து வதாகவும், ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் தெரி வித்திருந்தார். ஆனால் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை நாட்டில் அதிகரித்திருக்கிறது.

டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயி கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தியதைப் பார்த்து கலங்கினேன்.

இந்தியாவின் பிரதமராக அல்ல, காவலாளியாக இருக்க விரும்புகிறேன் என்று மோடி தெரிவித்து வருகிறார். ஆனால், அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடியை தாரைவார்த்திருக் கிறார். ரஃபேல் விவகாரத்தில் உண்மைக்கு மாறான விஷயங்கள் நடைபெற்றிருக் கின்றன. உண்மை வெல்லும் என்று திருவள்ளுவர் தெரிவித்திருக்கிறார். ஆனால், ரஃபேல் விவகாரத்தில் மோடி யிடம் உண்மை இல்லை.

மக்களுக்கான வரி

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நாடு முழுக்க சிறு, குறுந்தொழில்கள் அழிந்திருக்கின்றன. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் ஜிஎஸ்டி வரியை மாற்றி அமைப்போம். ஒரே வரி, எளிய வரி, மக்களுக்கான வரியாக அது இருக்கும். தொழில்துறையில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் முன்னேறும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவோம்.

`மேட் இன் சைனா’ என்பதற்கு பதி லாக `மேட் இன் தமிழ்நாடு’ என்று உற் பத்தி துறையில் தமிழகத்தை முன்னேற்று வோம். கடனுதவியை பணக்காரர்களுக்கு அளிக்காமல், இளைஞர்களுக்கும், ஏழை களுக்கும் அளிப்போம்.

மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் சிறப்புற செயல்படுத்தப்படும். பசுமை, வெண்மை புரட்சிகளை உருவாக்குவோம். ஒவ்வொரு ஏழைக்கும் குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை செயல் படுத்துவோம்.

மீனவர்களுக்கு தனி அமைச்சகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் நூற்றுக்கணக்கானோர் உயிரி ழந்தனர். ஏராளமானோர் உடைமைகளை இழந்தனர். ஆனால், உரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவில்லை. இந்தியா முழுக்க மீனவர்கள் படும் துயரங்களையும், பிரச்சினைகளையும் நாங்கள் அறிவோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மீனவர்களுக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.

பெண்களுக்கு 33 சதவீதம்

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப் படும். மத்திய அரசுப் பணிகளில் பெண் களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும்.

தமிழ் மொழியை, தமிழர்களின் உணர்வு களை அழிக்கவிடமாட்டோம். தமிழக பண்பாட்டை, சரித்திரத்தை மாற்றுவதை அனுமதிக்கமாட்டோம். அதற்காகவே நாங்கள் 100 சதவீத ஒற்றுமையுடன் இங்கு அணிசேர்ந்துள்ளோம். 2019 தேர்தலுக்குப் பின் தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன். தமிழகத்தில் கருணாநிதி, காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் மறைய வில்லை. தமிழர்களின் நெஞ்சங்களில் அவர்கள் வாழ்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தி.க. தலைவர் வீரமணி, மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய் தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் பேசினர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராகுலும், ஸ்டாலினும் போட்டி போட்டு புகழாரம்

ராகுல்காந்தி தனது பேச்சின் தொடக்கத்தில், ``தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார்’’ என்று தெரிவித்தார். அப்போது கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இதுபோல், மு.க.ஸ்டாலின் பேசும்போது, ``சில வாரங்களில் நாட்டின் பிரதமராக ராகுல்காந்தி பதவியேற்பார். அதன்பின், அவரது கரங்களில் இந்தியா பாதுகாப்பாக, ஆரோக்கியமானதாக, மதச்சார்பற்றதாக இருக்கும்” என்றார். அப்போதும், ஆரவாரம் எழுந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x