Last Updated : 08 Mar, 2019 08:01 AM

 

Published : 08 Mar 2019 08:01 AM
Last Updated : 08 Mar 2019 08:01 AM

தமிழிசையும் களமிறங்கினார்; தூத்துக்குடி களைகட்டுகிறது: நல்ல கூட்டணி அமைந்திருப்பதாக தொண்டர்களிடம் உற்சாகம்

கனிமொழி எம்.பி. ஏற்கெனவே முகா மிட்டு தேர்தல் பணிகளை செய்து வரும் நிலையில், தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை யும் வந்துள்ளதால் தூத்துக்குடி தொகுதி களைகட்டியுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு முடிவடைந்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும் கட்டத்துக்கு கட்சிகள் வந்துள்ளன. தூத்துக்குடி மக்களவை தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இதற்காக கட்சி யில் அவர் விருப்ப மனுவும் அளித்துள் ளார். இவரைத் தவிர தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணியில் வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை.

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட் டுள்ள கனிமொழி, ஊராட்சி சபை கூட்டம், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். கல்லூரி மாணவர்களுடன் கலந்துரை யாடல், வேலைவாய்ப்பு முகாம் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ. 2 கோடியை தூத்துக் குடி மாவட்டத்துக்கு ஒதுக்கி, பல்வேறு கிராமங்களில் வளர்ச்சி பணிகளையும் தொடங்கி வைத்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் கனி மொழியை எதிர்த்து பாஜக மாநில தலைவர் தமிழிசை போட்டியிடப் போவதாக செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. தூத்துக்குடியில் நடக்கும் அரசியல் நகர்வுகளும் அதை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள் ளன.

கடந்த 4-ம் தேதி தூத்துக்குடி வந்த மத்திய ரயில்வே, நிலக்கரித் துறை அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், பாஜக வாக்குச்சாவடி முகவர் களை சந்தித்து ஆலோசனை நடத்தி னார்.

அப்போது, “தூத்துக்குடி தொகுதி யில் பாஜக போட்டியிட விரும்புகிறது. இத்தொகுதி நமக்கே கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, கட்சியினர் கடுமை யாக உழைத்து இந்த தொகுதியில் வெற்றிபெற வேண்டும்” என்றார்.

தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசைதான் என்பது 99 சதவீதம் உறுதியாகிவிட்டதாக அக்கட்சி மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தூத்துக்குடி வந்தார். ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் சட்டப் பேரவை தொகுதிகளில் மண்டல வாரியாக சென்று கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். அந்தந்த பகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத் தையும் நடத்தினார்.

அந்த கூட்டங்களில் பேசும்போது, ‘`சென்னையில் பிரதமர் மோடி பங் கேற்ற பொதுக்கூட்டத்துக்குப் பின்னர் கட்சியினர் உற்சாகமாக உள்ளனர். நல்ல கூட்டணியை அமைத்துள்ளோம்’’ என்றார் உற்சாகமாக.

வரும் 9-ம் தேதி வரை தூத்துக்குடி தொகுதியில் முகாமிடும் தமிழிசை, தினமும் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். கட்சி கொடியேற்றுதல், நிர்வாகிகளை சந்தித்தல், முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுதல், வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

கனிமொழி ஏற்கெனவே தேர்தல் பணிகளை செய்து வரும் நிலையில், தற்போது தமிழிசையும் வந்துள்ளதால் தூத்துக்குடி தொகுதி களைகட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x