Published : 16 Mar 2019 08:10 AM
Last Updated : 16 Mar 2019 08:10 AM
108 வைணவ திவ்யத் திருத்தலங்களில் ஒன்றானதும், 12 ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வாரான ஆண்டாள் அவதரித்த திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இக்கோயிலின் கோபுரம் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக இருப்பதும் கூடுதல் சிறப்பு.
இக்கோயிலில் திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த புதன்கிழமை தொடங்கியது. தாயார் வசிக்கும் தாமரை மலர்களைக் கோல மாக வரைந்து வரவேற்பது இத்திருத்தலத்தில் உள்ள நடைமுறைகளில் ஒன்று. அதன்படி, வழக்கமான முறைப்படி கோயிலின் பிரதான கிழக்கு நுழைவு வாயில் மண்டபப் பகுதி களில் கோயில் சேவார்த்திகளால் நேற்று முன்தினம் பூக்கோலம் வரையப்பட்டிருந்தது. பெயின்டால் வரையப்பட்டிருந்த இக்கோலத் தின் ஓரங்களில் இலையுடன் கூடிய தாமரைப் பூ இருந்தது.
இது பாஜக-வின் தாமரைச் சின்னம் போலவும், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் போன்றும் வரையப்பட்டுள்ளதாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீ ஸாரிடம் சிலர் புகார் தெரிவித்தனர். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா வுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்து கோலத்தைப் பார்த்த டிஎஸ்பி ராஜா, கோயில் பிரகாரத்தில் வரையப்பட்டுள்ள கோலத்தில் தாமரை, இரட்டை இலை வரையப்பட்டுள்ளது. அவற்றை உடனடியாக அழிக்குமாறு சேவார்த்திகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, அவசர அவசரமாக தாமரை கோலத்தை மறைத்து வெள்ளை நிற பெயின்ட் அடிக்கப்பட்டது. இந்த தகவல் பக்தர்கள், சேவார்த்திகள், கோயில் நிர்வாகிகள் ஆகியோருக்கு தெரிய வந்தது. அனைவரும் வந்து அழிக்கப்பட்ட கோலத்தைப் பார்த்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கோயில் நிர்வாக அலுவலர் இளங்கோவன் கூறியதாவது:
திருவிழாவின்போது தன்னார்வலர்களாக உள்ள சேவார்த்திகள் பல தொண்டுகளை மேற்கொள்வார்கள். அவர்களால் வரையப் பட்டதே இக்கோலங்கள். வெளியூர் சென் றிருந்ததால் சம்பவம் நடந்தபோது நான் இல்லை. கோலத்தில் உள்ள தாமரையை அழிக்குமாறு போலீஸார் கூறியதால் சேவார்த்திகளே அதை அழித்துள்ளனர். இது குறித்து எந்தப் புகாரும் நிர்வாகத்துக்கு வர வில்லை. மேலும் கோலத்தை அழிக்குமாறு நிர்வாகத் தரப்பில் இருந்தும் யாருக்கும் அறிவுறுத்தப்படவில்லை என்றார்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா கூறியதாவது:
கோயில் பிரகாரத்தில் வரையப்பட்டுள்ள கோலத்தில் கட்சி சின்னங்கள் போல் தாமரை வரையப்பட்டுள்ளதாக அரசியல் பிரமுகர்கள் புகார் தெரிவித்தனர். கோலத்தின் அருகி லேயே போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் போலீஸ் உடந்தை யுடன் கட்சி சின்னங்கள் வரையப்படுகிறதா? என்று சிலர் கேள்வி எழுப்பினர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் அதிகாரிகளுக்கு இது போன்று புகார் சென்றால் காவல் துறையினர் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதால் கோலத்தில் உள்ள தாமரையை அழிக்குமாறு உத்தரவிட்டேன் என்றார்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் திமுக நகரச் செயலர் அய்யாவுபாண்டியன் கூறுகை யில், ‘‘இது முழுக்க முழுக்க ஆன்மிகம் சம்பந்தப்பட்டதால் இதை அரசியல் ரீதியாகப் பார்க்க வேண்டியதில்லை. கோயிலுக்குள் இது போன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது இல்லை” என்றார்.
பாஜக மாவட்ட பொதுச்செயலர் வழக் கறிஞர் கஜேந்திரன் கூறியபோது, ‘‘தாமரை யில் ஆண்டாள் வாசம் செய்கிறார் என்ப தைக் குறிக்கும் வகையில் கோயிலில் கோலமிடப்பட்டுள்ளது. இதில் என்ன தேர் தல் விதிமீறல் உள்ளது என்பது தெரிய வில்லை. இது பக்தர்கள் மனதை புண்படுத்து வதாக உள்ளது. இந்த நடவடிக்கைக்குக் காரணமான அதிகாரிகள் மீது மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT