Published : 13 Mar 2019 02:49 PM
Last Updated : 13 Mar 2019 02:49 PM

கரூர் மக்களவைத் தொகுதியை ‘தானே’ எடுத்துக் கொண்ட தம்பிதுரை

மக்களவைத் தேர்தலை மனதில்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டு மனுக்கள் பெறும் நிகழ்ச்சியை கடந்த ஓராண்டுக்கு மேலாக மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை நடத்தி வருகிறார்.

மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட தம்பிதுரை விருப்ப மனு அளித்துள்ள நிலையில், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பியும் விருப்ப மனு அளித்துள்ளார்.

அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவேன் என தம்பிதுரை கூறினாலும், கட்சியில் அனைவரும் போட்டியிட வாய்ப்புக்கேட்டு காத்திருக்கும் நிலையில் கரூர் தொகுதியை தனக்குத்தான் என்று மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை அவரே எடுத்துக் கொண்டுவிட்டார் என்றே அரசியல் வட்டாரத்தில் பேச்சு உலவுகிறது.

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகாத நிலையில், அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் உறுதியாக போட்டியிடும் ஒரே வேட்பாளர் என தற்போது கூறப்படுபவர் தம்பிதுரைதான். கரூர் மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் அவர்தான் என அதிமுகவினர் உறுதியாகக் கூறுகின்றனர்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு அளித்துள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும், மு.தம்பிதுரை யைப் போலவே தூத்துக்குடி தொகுதியில் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தி மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வந்தார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

திருபுவனம் கோயிலில்...

தஞ்சை மாவட்டம் திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு தனது ஆதரவாளர்களுடன் தம்பி துரை நேற்று காலை 8 மணிக்கு வந்தார். கோயிலில், கம்பகரேஸ்வரர் சன்னதியின் முன் 1 மணி நேரத்துக் கும் மேலாக நடைபெற்ற யாகத் தில் பங்கேற்ற அவர், பின்னர், பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்தில் கலந்துகொண்டு சுவாமி, அம் பாளை அவர் தரிசனம் செய்தார்.

அதன்பின் கோயிலுக்குள் சென்ற தம்பிதுரை, சரபேஸ்வரர் அருள்பாலிக்கும் தனி சன்னதியில் நீண்ட நேரம் வழிபட்டார். தம்பிதுரையின் குடும்பத்தினர் யாரும் வரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x