Published : 28 Mar 2019 12:34 PM
Last Updated : 28 Mar 2019 12:34 PM
யாருக்கு அதிக செல்வாக்கு என நிரூபிப்போமா என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அக்கட்சிக்கு ஆதரவாக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சேலம் மல்லூரில் இன்று (வியாழக்கிழமை) தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "கலைஞரின் பேரன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் நான். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து நான் சவால் விடுகிறேன். நீங்கள் முதல்வர், நான் திமுகவின் சாதாரண தொண்டன்.
தமிழ்நாட்டிலுள்ள ஏதாவதொரு குக்கிராமத்தை நீங்களே தேர்வு செய்யுங்கள். இருவரும் அங்கு செல்வோம். மக்கள் உங்களிடம் வருகிறார்களா அல்லது என்னை நோக்கி வருகிறார்களா என்பதை பார்ப்போம். இந்த சவாலை ஏற்க நீங்கள் தயாரா?
கலெக்ஷன் - கரப்ஷன் - கமிஷன் இதை மட்டுமே தாரக மந்திராக செயல்படக் கூடியது அதிமுக ஆட்சி. சேலம் எட்டு வழிச்சாலை அதற்கு ஓர் உதாரணம். இந்த திட்டத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது திமுக. இரண்டவாதாக எதிர்ப்பு தெரிவித்தவர் அன்புமணி ராமதாஸ்.
'அம்மா வழியில் ஆட்சி' என்கின்றனர். ஆனால், அந்த 'அம்மா' எப்படி இறந்தார் என்பதை கடைசி வரை சொல்லவில்லை. 90 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அடைத்து வைத்து, யாரையும் பார்க்க விடாமல் செய்தனர். அவர் சாப்பிட்ட ஒரு இட்லியின் விலை ரூ.75 லட்சம். முதல்வருக்கே பாதுகாப்பில்லாத அரசாங்கம் தான் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது".
இவ்வாற்உ உதயநிதி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT