Published : 05 Mar 2019 11:07 AM
Last Updated : 05 Mar 2019 11:07 AM

அதிமுக கோஷ்டி பூசலால் கூட்டணிக்கு செல்கிறதா திண்டுக்கல் தொகுதி?

திண்டுக்கல் மாவட்டத்தில் முன் னாள், இந்நாள் அமைச்சர்கள் இடையே நிலவும் கோஷ்டிப் பூசலால் திண்டுக்கல் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு விட்டுக் கொடுத்து விடலாமா என்ற நிலையில் அதிமுக உள்ளதாக அக்கட்சியினரே தெரி விக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட் டத்தில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கி உள்ளன. திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட பலர் விருப்ப மனு செய் துள்ளனர். இருந்தபோதிலும் போட்டியிட முன்வருவதில் கட்சியினரிடையே தயக்கம் காணப்படுகிறது. இதற்குக் காரணம் முன்னாள், இந்நாள் அமைச்சர்களிடையே உள்ள பிரிவுதான். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் இ.பி.எஸ். அணியிலும், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் ஓ.பி.எஸ். அணியிலும் இருந்தனர். இதையடுத்து இரு அணிகளும் இணைந்தபோது இருவருக்கும் கட்சியில் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அணிகள் இணைந்தாலும் முந்நாள், இந்நாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் கூட்டங்களில் மட்டுமே இணைந்து காணப்படுகின்றனர். இரு கோஷ்டிகளாக செயல்படுவது நீடிக்கிறது.

திண்டுக்கல் தொகுதியில் நத்தம் ஆர்.விசுவநாதனின் அரசியல் வாரிசும் மருமகனுமான கண்ணன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. அமைச்சர் சீனிவாசன் ஆதரவாளர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்களா? என சந்தேகம் எழுந்ததால் அவர் பின்வாங்குவதாகக் கட்சியினர் தெரிவித்தனர். இதேபோல் சீனிவாசன் ஆதரவாளர் யாரேனும் போட்டியிட முன்வந்தால் விசுவநாதன் ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு தருவார்களா? என்ற அச்சமும் நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ளது. சிலர் போட்டியிட முன்வந்தபோதும் அவர்களுக்குப் பணம் பிரச்சினையாக உள்ளது. கட்சித் தலைமை பணம் செலவழித்தால் தாங்கள் போட்டியிடத் தயார் என சிலர் முன்வருகின்றனர். கோஷ்டி, பணப் பிரச்சினைகளால் போட்டியிட அதிமுக நிர்வாகிகள் பலரும் தயக்கம் காட்டிவருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கினால் கவலையில்லை என்ற நிலையில் அதிமுகவினர் உள்ளதாக அக்கட்சியினரே தெரிவிக்கின்றனர்.

எதிர்பார்ப்பில் கூட்டணி கட்சியினர்அதிமுக கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு தென் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியை ஒதுக்க அதிமுக தலைமை முன்வரும் நிலையில் திண்டுக்கல் தொகுதியை கேட்டுப்பெற பா.ம.க. முயற்சி செய்யும். இக்கட்சிப் பொருளாளர் சிவகாசி திலகபாமா போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி என்பதால் திண்டுக்கல் தொகுதியை சேர்ந்தவர் எனக் கூறிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. திண்டுக்கல் தொகுதியை கேட்டுப் பெற்று போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணையும் பட்சத்தில், த.மா.கா.வினர் மயிலாடுதுறை அல்லது திண்டுக்கல் தொகுதியை எதிர்பார்க்கின்றனர். த.மா.கா. மூத்த நிர்வாகி ஞானதேசிகனின் சொந்த ஊர் வத்தலகுண்டு என்பதால் அவரை களம் இறக்க திண்டுக்கல் தொகுதியைக் கேட்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. அதிமுக தொடங்கிய பின் முதல் தேர்தலை சந்தித்தது திண்டுக்கல்லில்தான். அதுவும் மக்களவைத் தேர்தல். எனவே தனது சென்டிமெண்ட் தொகுதியாகக் கருதி எம்.ஜி.ஆர். காலம் முதல் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்காமல் தொ டர்ந்து அதிமு கவே போட்டி யிட்டு வந்துள்ளது. இந்த முறையும் அதிமுக போட் டியிடும் என்ற எதிர் பார்ப்பில் கட்சியின் அடிமட்டத் தொண் டர்கள் உள்ளனர்.

ஆனால், கூட்டணிக்கட்சிக்கு ஒதுக்கினால் கோஷ்டிப் பூசலை தவிர்க்கலாம். மேலும் நிலக்கோட்டை சட்டப் பேரவை இடைத் தேர் தலில் கவனம் செலுத்த ஏதுவாக இருக்கும் எனக் கட்சி நிர்வாகிகளின் எதிர்பார்ப்பு வேறு மாதிரி யாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x