Published : 25 Mar 2019 05:24 PM
Last Updated : 25 Mar 2019 05:24 PM

ஆ.ராசாவின் சொத்துப் பட்டியலில் மாற்றமில்லை

நீலகிரி மக்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் சொத்துப் பட்டியலில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த சொத்து விவரங்களே இந்தத் தேர்தலிலும் தாக்கல் செய்துள்ளார்.

ஆ.ராசாவின் பேரில் அசையும் சொத்துகள் ரூ.1 கோடியே 45 லட்சத்து 90 ஆயிரத்து 709, அசையா சொத்துக்கள் மதிப்பு ரூ.14 லட்சத்து 87 ஆயிரத்து 419.

மனைவி பரமேஸ்வரி பெயரில் அசையும் சொத்துகள் ரூ. 93 லட்சத்து 93 ஆயிரத்து 597, அசையா சொத்துக்கள் ரூ.14 லட்சத்து 12 ஆயிரத்து 975. மகள் மயூரி பெயரில் அசையும் சொத்துகள் ரூ.18 லட்சத்து 15 ஆயிரத்த 400.

பரம்பரை சொத்துகளில் அசையும் சொத்து மதிப்பு ரூ.41 லட்சத்து 3 ஆயிரத்து 540 மற்றும் அசையா சொத்துகள் ரூ.14 லட்சத்து 53 ஆயிரத்து 875 என மொத்தம் ரூ. 3 கோடியே 75 லட்சத்து 42 ஆயிரத்து 880 மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

இதில், ராசாவுக்கு சொந்தமாக 108 பவுன் தங்கம், மனைவி பரமேஸ்வரிக்குச் சொந்தமாக 175 சவரன் தங்க நகைகள் மற்றும் மகள் மயூரிக்கு 25 சவரன் தங்க நகைகளும் உள்ளன.

ராசாவுக்குச் சொந்தமாக 4.182 கிலோ வெள்ளி, மனைவிக்கு சொந்தமாக 10 கிலோ வெள்ளி மற்றும் மகளுக்கு சொந்தமாக ரூ.12 லட்சம் மதிப்பிலான வைரக் கம்மல் மற்றும் நெக்லஸ் உள்ளன.

ராசாவின் பெயரில் திருச்சியில் ரூ.32 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான வீடு. மனைவி பரமேஸ்வரி பெயரில் ரூ.14 லட்சம் மதிப்பிலான 10.53 ஏக்கர் நிலம் திருச்சி மற்றும் பெரம்பலூரில் உள்ளது. பெரம்பலூரில் ரூ.8 லட்சத்து 3 ஆயிரத்து 875 மதிப்பிலான பரம்பரை சொத்தாக 1.62 ஏக்கர் நிலம் உள்ளது.

மேலும் ரூ.13 லட்சம் மதிப்பிலான நான்கு சக்கர வாகனமும் உள்ளது.

ஆ.ராசா மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், வருமான வரித்துறையில் மதிப்பீடு செய்யப்படாமல் ரூ.25 லட்சத்து 52 ஆயிரத்து 260 தொகை நிலுவை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x