Published : 23 Mar 2019 07:21 AM
Last Updated : 23 Mar 2019 07:21 AM
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 39 மக்களவைத் தொகுதிகள், இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 225 மனுக்கள் குவிந்தன.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்துடன் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதி களுக்கு இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. முதல் 3 நாளில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. சுயேச்சை கள், சிறிய கட்சிகள் சார்பில் மக்களவைக்கு 49 பேரும், சட்டப்பேரவைக்கு 8 பேரும் மட்டுமே மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் பெரும்பாலான தொகுதி களில் அதிமுக, திமுக மற்றும் அவற்றின் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். இதனால், அனைத்து தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலு வலர்கள் அலுவலகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய மனுத் தாக்கல் மாலை 3 மணிக்கு முடிந்தது. நேற்று ஒரே நாளில் மக்களவை தொகுதிகளுக்கு 31 பெண்கள் உட்பட 161 பேரும், இடைத் தேர்தல் நடக்கும் சட்டப்பேரவை தொகுதி களுக்கு 64 பேரும் மனு தாக்கல் செய்துள்ள னர். கடந்த 4 நாட்களில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் 32 பெண்கள் உட்பட210 பேரும் சட்டப்பேரவை தொகுதிகளில் 18 பெண்கள் உட்பட 72 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முக்கிய வேட்பாளர்கள்
தமிழகத்தில் மக்களவைத் தொகுதி களுக்கு நேற்று வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய வேட்பாளர்கள் விவரம் வருமாறு:
வடசென்னை- அழகாபுரம் மோகன் ராஜ் (தேமுதிக), மத்திய சென்னை- சாம்பால் (பாமக), தென்சென்னை- ஜெ.ஜெயவர்தன்( அதிமுக), பெரும் புதூர்- டி.ஆர்.பாலு (திமுக), காஞ்சிபுரம் ஜி.செல்வம் (திமுக), கள்ளக்குறிச்சி- எல்.கே.சுதீஷ் (தேமுதிக), தருமபுரி - அன்புமணி ராமதாஸ் (பாமக) , பொள்ளாச்சி சண்முக சுந்தரம் (திமுக), மதுரை- சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்), கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக), சேலம்- எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக), நாமக்கல்- சின்ராஜ் (கொமதேக), ஈரோடு- மணிமாறன்(அதிமுக), கிருஷ்ண கிரி கே.பி.முனுசாமி (அதிமுக), சிதம் பரம்- பொ.சந்திரசேகர் (அதிமுக), அரக் கோணம்- ஏ.கே.மூர்த்தி (பாமக), வேலூர் ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி), திரு வண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை (திமுக), ஆரணி - ஏழுமலை (அதிமுக), திண்டுக்கல்- ஜோதி முத்து (பாமக), வேலுச் சாமி (திமுக), நடிகர் மன்சூர் அலிகான் (நாம் தமிழர்), தேனி - ரவீந்திரநாத் குமார் (அதிமுக), நீலகிரி - எம்.தியாகராஜன் (அதிமுக), விழுப்புரம்- வடிவேல் ராவணன் (பாமக), கடலூர்- கோவிந்தசாமி (பாமக) ஆகியோர் மனு செய்துள்ளனர்.
சட்டப்பேரவை
இடைத்தேர்தல் நடக்கும் சட்டப் பேரவை தொகுதிகளை பொறுத்தவரை பூந்தமல்லி - வைத்தியநாதன் (அதிமுக), ஆ.கிருஷ்ணசாமி (திமுக), பெரம்பூர் ஆர்.டி.சேகர் (திமுக), தஞ்சை - ஆர்.காந்தி (அதிமுக), நீலமேகம் (திமுக), குடியாத்தம் - ஆர்.மூர்த்தி (அதிமுக), சோளிங்கர் - அசோகன் (திமுக), ஜி.சம்பத் (அதிமுக), ஆம்பூர் - ஜோதி ராமலிங்க ராஜா (அதிமுக), வில்வநாதன் (திமுக) ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்றும் நாளையும் வேட்புமனு தாக்கல் கிடையாது. மனுத் தாக்கலுக்கு மார்ச் 26-ம் தேதி கடைசி நாளாகும். எனவே, மார்ச் 25, 26 ஆகிய இரு தினங்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். மார்ச் 27-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT