Published : 22 Mar 2019 07:14 AM
Last Updated : 22 Mar 2019 07:14 AM

திருமாவளவனின் சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரத்துக்கு லட்சம் பானைகள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குபானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பிரச்சாரத்தில் ஒருலட்சம் பானைகளைப் பயன்படுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி1999 மக்களவைத் தேர்தலில் தமாகாவுடன் கூட்டணி அமைத்து அக்கட்சியின் சைக்கிள் சின்னத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டது. கணிசமான வாக்குகளையும் பெற்றது. 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இணைந்தது. கடலூர் மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்கட்சித் தலைவர் திருமாவளவன். 2004-ல் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அம்பு சின்னத்தில் விசிக 9 தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளில் வென்றது. அதன்பிறகு 2009-ல் நட்சத்திரம், 2011-ல்இரட்டை மெழுகுவத்தி, 2014, 2016தேர்தல்களில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது.

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது. விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி வேட்பாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார். திருமாவளவன்சிதம்பரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அதற்காக, முதலில் மோதிரம், வைரம், பலாப்பழம், நட்சத்திரம், கரும்புவிவசாயி என 5 சின்னங்கள் கேட்கப்பட்டன. இதில் எந்த சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. அதனால், பானை அல்லது மேசை சின்னம் ஒதுக்குமாறு விசிக கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, விசிகவுக்கு பானை சின்னத்தை ஆணையம் நேற்று முன்தினம் ஒதுக்கியது. இதையடுத்து, சிதம்பரத்தில் பானை சின்னத்தை பிரபலப்படுத்தும் ஏற்பாடுகளில் விசிக இறங்கியுள்ளது.

இதுகுறித்து விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கூறியபோது, ‘‘சிதம்பரம் தொகுதியில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக பானைகளைகையில் எடுத்துக்கொண்டு பிரச்சாரம் செய்வோம். இதற்காக சுமார் ஒரு லட்சம் பானைகள் வரை பயன்படுத்ததிட்டமிட்டுள்ளோம்.

எங்களது விடுதலை கலை இலக்கியப் பேரவை மூலம் தெருக்கூத்து, நாடகம், கிராமியப் பாடல்கள் என நாட்டுபுறக் கலைகள் மூலம் கிராமம்தோறும் பிரச்சாரம் செய்வோம். பயிற்சி பெற்ற 1,000கலைஞர்களுடன் எங்கள் பிரச்சாரத்தை தொடங்குவோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x