Published : 21 Mar 2019 04:39 PM
Last Updated : 21 Mar 2019 04:39 PM
மக்களவைத் தேர்தல் களப் பிரச்சாரம் தீவிரம் அடையாத நிலையில், சமூக வலைத் தளங்களில் திமுக, பாஜக கட்சியினர் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் கடும் விமர்சனங்கள், போலி பதிவுகளால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தற்போது சமூக வலைத் தளங் களின் பயன்பாடு அதிகரிப்பால், பிரதான கட்சிகள் சமூக வலைத்தளப் பிரிவைத் தொடங்கி தனியாக நிர்வாகிகளை நியமித்து பிரச்சாரம் செய்து வருகின்றன.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களப் பிரச்சாரம் தீவிரம் அடையாத நிலையில், சமூக வலைத் தளப் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. தேர்தல் கூட்டணி முடிவான நாளில் இருந்தே, அதிமுக, திமுக ஆகிய இரு கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளும் முகநூல், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரச்சாரத்தைத் தொடங்கி விட் டன. முதலில் தாங்கள் ஆளும்போது செய்த சாதனைகளை பட்டிய லிட்ட கட்சிகள் தற்போது தனி மனிதத் தாக்குதலைக் கையில் எடுத்துள்ளதால் அதை பார்க்கும் நடுநிலை வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சமூக வலைத் தளங்களில் போலிப் பிரச்சாரமும் அதிகரித்துள் ளது. தனியார் தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிட்டது போல மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைத் தளங்களில் பரப்பி வருகின்றனர். இதன் உண்மைத் தன்மையை அறியாமல் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதனால் உண்மை எது, பொய் எது எனப் புரியாமல் பலர் குழப்பம் அடைந்து வருகின்றனர்.
சமூக வலைத் தளப் பிரச்சா ரத்தில் திமுகவும், பாஜகவும் முன்னணியில் உள்ளது. இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கி தனி மனித தாக்குதல்களை பதிவிட்டு வருவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திமுகவினர் பெட்ரோல், காஸ் விலை உயர்வு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பொள்ளாச்சி சம்பவம், அதிமுக குறித்து தேமுதிக வைத்த விமர் சனங்கள் ஆகியவற்றை பதிவு செய்கின்றனர். பாஜக சார்பில் கருணாநிதி குடும்பத்தினர் இந்துமத சடங்கு களை விமர்சித்து பேசியது, 2 ஜி முறைகேடு உள்ளிட்டவற்றை திரும்பத் திரும்ப பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து சுதேசி விழிப் புணர்வு இயக்க மாநில அமைப்பாளர் ஆதிசேஷன் கூறியதாவது: சமூக வலைதளப் பிரச்சாரங்கள் மக்களை விரைவாகச் சென்றடைகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மோடியின் சாதனைகளை பட்டி யலிடுவது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பது, இந்து மதத்துக்கு எதிரான திமுகவின் செயல் பாடுகள், கடந்த திமுக ஆட்சி யில் நடந்த பல கோடி ரூபாய் முறைகேடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் தீவிர பிரச்சாரம் செய்கிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT