Published : 28 Mar 2019 04:27 PM
Last Updated : 28 Mar 2019 04:27 PM

தேர்தலில் சின்னம் முக்கியமல்ல, மக்களின் எண்ணம் தான் முக்கியம்: டிடிவி தினகரன் பேச்சு

தேர்தலில் சின்னம் முக்கியமல்ல, மக்களின் எண்ணம் தான் முக்கியம் என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய டிடிவி தினகரன் "அமமுகவில் 80% இளைஞர்கள் உள்ளனர். ஆனால், அமமுகவை சுயேட்சை எனக்கூறி சின்னம் கொடுக்க மறுக்கின்றனர். உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா என எதிர்பார்த்தனர். தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பு. ஆனால், அமமுக விஷயத்தில் எப்படி நடந்துகொண்டார்கள் என்பது நமக்கு தெரியும். தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை தராவிட்டாலும், பொது சின்னத்தை அளித்திருக்கிறது. எந்த சின்னம் கொடுத்தாலும், தமிழக மக்கள் அமமுகவை ஜெயிக்க வைப்பார்கள். சின்னம் முக்கியமல்ல, மக்களின் எண்ணம் தான் முக்கியம். எப்படியாவது அமமுகவின் சின்னத்தை முடக்கிவிடுங்கள் என அதிமுகவினர் அவர்களின் 'டாடி' மோடியிடம் கேட்டிருப்பார்கள்.

தமிழக மக்கள் விரும்பாத அதிமுக ஆட்சி தொடருவதற்கு காரணம் மோடி தான். தமிழக மக்கள், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுக கூட்டணியை பாமக ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், 'மானங்கெட்ட கூட்டணி'. இந்த மக்கள் விரோத தமிழக அரசையும், மத்திய ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டு வரும் சுயேட்சைகள் நாம்", இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x